குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கிராமந்தோறும் பண்பாட்டு விழா ச.லலீசன்விரிவுரையாளர் - கோப்பாய் ஆசிரிய கலாசாலை

21.08.2011.த.ஆ.2042-பண்பாடு என்ற சொல் Culture என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பாகும். பண்பாடு என்ற கலைச் சொல்லைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் அறிஞர் டி.கே.சிதம்பரநாத முதலியார் (டி.கே.சி.) ஆவார். பண்பாடு என்ற சொல் பல பொருள்களைத் தருகின்றது.  செவ்வி, குணநலம், சீர்திருத்தம், பெருமை, தண்மை, அமைதி, இயல்பு எனப் பல பொருள்கள் இச்சொல்லாற் சுட்டப்படுகின்றன. பண்பாடு என்ற சொல் உருவாக்கம் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் அ.சண்முகதாசு Culture என்னும் ஆங்கிலச் சொல் Kult (குல்ற்) என்ற யேர்மன் வினையடியில் இருந்து பிறந்ததாகும். இவ்வினையடி முதலில் நிலத்தைப் பதனிடுதல்என்னும் பொருளில் அமைந்தது. தமிழ்ச் சொல்லாகிய பண்பாடு திருத்துதல், செப்பனிடுதல், பதனிடுதல், நலனாதல், தகுதியாதல் போன்ற பொருள்களைத் தருகிறது என்கிறார்.

பண்பாடு என்பதற்கு பல பரிமாணங்கள் உண்டு. இது பற்றிக் கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிப்பீடியா பின்வருமாறு குறிப்பிடுகின்றது. “பண்பாட்டிற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவுப் பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்பு என்பவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டிற்குள் அடங்குகின்றன. இவை யாவற்றில் இருந்தும் பண்பாடு என்பது எம்மவரது அடையாளங்களுள் பிரதானமானது என்பது பெறப்படுகின்றது.

கிராமம் சார்ந்த பண்பாடு

பண்பாடு என்கின்ற தளத்தின் ஆணிவேராக இயங்கக் கூடிய சக்தி கிராமங்களுக்கே உள்ளது. இனக்குழுக்களின் வாழ்விடமாக அமையத் தக்க கிராமங்களில் வேற்றுமைகள் குறைவாக இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய பண்பும் அதிகரித்துக் காணப்படும். இந்நிலைமைகள் கிராமம் சார்ந்த பண்பாடுகளை வாழ்வியல் முறைமைகளுடன் இணைத்துப் பேணுவதற்கு உதவுவனவாக அமைந்திருக்கும். இச்சூழமைவிலேயே கிராமங்களின் தனித்துவங்களைப் பேண வல்ல பண்பாட்டு அடையாளங்கள் முளை கொள்ளத் தொடங்கியதாகக் கருத முடியும். பண்பாட்டுத் தனித்துவங்களைப் பேண முடியாத சமூகம் தமது தனித்துவங்களை இழந்துவிடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

உலகமயமாக்கலும் பண்பாடும்

பண்பாட்டுணர்வின் அடித்தளத்தை ஆட்டிப் படைக்கும் சக்தியாக இன்று ˜உலகமயமாக்கல் எதிர்கொள்ளப்படுகி;ன்றது. உலகமயமாக்கலானது உலகில் உள்ள அரசியல் சமூக, பொருளாதார பேதங்களைக் கடந்து உலகத்தை ஒரு கிராமமாகச் சுருக்குகின்ற செயற்பாடாக அமைகின்றது. எனினும் இதனை முதலாளித்துவத்தின் ஒரு மாற்று வடிவமென்றே கொள்ள வேண்டியுள்ளது. தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் என்ற கூர்ப்புக் கோட்பாட்டிற்கு ஒப்பாக வலிதானவற்றையே உலகில் நிலைகொள்ள வைக்கும் செயற்பாட்டை உலகமயமாக்கல் பரிசாகத் தந்து கொண்டிருக்கின்றது.

இன்று நகரங்களாகத் தெரிவன யாவும் ஒரு காலத்தில் கிராமங்களாக இருந்தவையே. ஆனால் நகர் என்ற தகுதிப்பாடு பல்லின பல்கலாசாரச் சூழமைவை இயல்பாக ஏற்படுத்தும் அல்லது ஏற்றுக் கொள்ளும் மனோபாங்கை ஏற்படுத்திவிடுகி;ன்றது. ஒரு சமூகத்தின் தனித்துவப்பண்பாடுகளைக் பேணிக்காக்கக் கூடிய தகுதிப்பாட்டைக் கிராமங்களே கொண்டுள்ளன. ஆனால் உலகமயமாதலின் அரிப்பு  (Erosion) கிராமங்களை விட்டு வைப்பதாகத் தெரியவில்லை. இவ் அரிப்பினால் கிராமியப் பண்பாடுகள் நலிவுற்றுப் போகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது.

பிரதேசப் பண்பாட்டுப் பேரவைகள்

நாம் யார்? நமது தனித்துவங்கள் என்ன? என்பதை அறியாத கூட்டமாக நம்மவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அரசியல், சமூகக் காரணிகள் இவ் அறிகையை ஊக்குவிப்பதாகவும் தெரியவில்லை. இந்நிலையில் கிராம மட்டங்களில் பண்பாட்டு விழாக்களை நடாத்திப் பண்பாடு தொடர்பான விளிப்புணர்வை ஏற்படுத்துதல் நலமுடையதாக அமையும். கிராமங்கள் தோறும் பண்பாட்டுப் பேரவைகளை அமைப்பதன் மூலமும் கிராமிய மட்ட விழாக்கள் ஒழுங்கு செய்யப்படுவதன் மூலமும் ˜நமது பண்பாடு பற்றிய விளிப்புணர்வு நம்மவரிடையே ஏற்படும். எமது பாரம்பரியக் கலைகளை வாழ வைக்க வல்ல கலைஞர்கள் கிராமங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

கிராமம் பற்றிய விழிப்புணர்வு

இன்றைய வாழ்வியலில் தாம் சார்ந்து வாழ்கின்ற கிராமத்தின் வரலாறு என்ன? கிராமத்திற்குரிய பெயர் எவ்வாறு ஏற்பட்டது? அதன் பொருத்தப்பாடு என்ன? என்பது குறித்துச் சிந்திப்போருடைய தொகை மிக அரிதாகவே காணப்படுகின்றது. அத்துடன் கிராம உள்ளடக்கம், கிராமம் சார் வளங்கள், தனித்துவங்கள், தேவைகள் பற்றிய அறிகையைப் பெற்றுக் கொள்ள கிராம மட்டத்தில் இடம்பெறும் பண்பாட்டு விழாக்கள் வழி செய்வதாக அமையும். கிராமத்திற்குப் பெருமை சேர்த்த பெரியார்கள் பற்றிய அறிகையும் அவர்களைக் கௌரவிக்கி;ன்ற பெருமையும் கிராமத்திற்கு வளஞ்சேர்ப்பதாக அமையும். தனது சமூகத்திற்காக வாழ வேண்டும் என்ற ஊக்குவிப்பை இளம் நெஞ்சங்களிலும் ஏற்படுத்தும். மரபு வழிக் கலைகளைப் பேணும் கலைஞர்களைக் கௌரவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன் அக்கலைகளைப் புதியவர்கள் அறியக் கூடிய ஆர்வமும் மேலெழும்.

புத்துருவாக்கங்களுக்கு வழிகோலும்

இன்று காணொலி ஊடகங்களே எமது வாழ்வியல் கோலங்களைத் தீர்மானிக்கின்றன. நாகரிகம் என்ற திசையில் நகர்த்துகின்றன. இதன்பிடி தவிர்க்க முடியாததாயினும் கிராமம்சார் விழாக்கள் இத்தகைய நகர்வின் வேகத்தைத் தவிர்ப்பதற்கோ அல்லது மாற்று வடிவ உருவாக்கத்திற்கு வழி சமைப்பதற்கோ பயன்படும். எடுத்துக் காட்டாக இரவிரவாக இடம்பெறும் காத்தவராயன் கூத்து இன்று ஒரு மணி நேர நிகழ்வாக ஆற்றுகை செய்யப்படுவதைச் சுட்டலாம். கிராமியக் கலை வடிவங்கள் பல பல்கலைக்கழக மட்டத்தில் பட்டநெறிப் பாடங்களாகப் படிமலர்ச்சி பெற்றிருத்தலையும் நாகரிக வளர்ச்சியுடன் பொருத்தி பார்க்க வேண்டியுள்ளது.

கலைகளின் இருப்பு நிலைக்கட்டும்

கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் முதலிய கலைகள் மற்றும் சில குறிப்பிட்ட ஆடற்கலைகள் (வசந்தன் கூத்து, பப்பவராயன் கூத்து) இன்று அழிந்தொழியும் நிலையை எதிர்கொள்கின்றன. இவை பற்றிய பிரக்ஞை ஏற்படுவதற்குக் கிராமியப் பண்பாட்டு விழாக்கள் வகை செய்ய வேண்டும். கிராம மட்டங்களில் தற்போது இடம்பெறும் பல விழாக்களில் தென்னிந்தியச் சினிமாப் பாடல்களுக்கான அபிநயம் அல்லது உடலசைவுகள் இடம்பெறுவதையே காணமுடிகின்றது . அவ்வாறில்லாமல் எம்மவர்களின் வெளிப்பாடுகளைப் பரவலாக்கக்கூடிய களமாக கிராமியப் பண்பாட்டு விழாக்கள் அமைதல் வேண்டும். அரிதான கலைகளை ஆற்றுகை செய்யும் கலைஞர்கள், ஊர்வாழ உழைக்கும் உத்தமர்கள் போன்றோர் கௌரவிக்கப்படும் களமாகவும் இது அமையலாம்.

கிராமம் குறித்த மலர் வெளியீடுகள்

கிராமம் குறித்த ˜காலத்தின் பதிவாக மலர் வெளியீடு மேற்கொள்வதும் ஆரோக்கியமானது. இம்மலர் கிராமம் சார்ந்த தரவுகளையும் வரலாற்றுச் செய்திகளையும் கொண்டிருத்தல் நலம். எதிர்காலச் சந்ததியினருக்கான மிக வலுவான ஆவணமாக இம்மலர்கள் அமையும். கிராமம்சார்ந்த கொண்டாட்டங்கள் மெல்லமெல்லத் தனித்துவம் இழந்து வருகின்றன என்பதை பிரபல எழுத்தாளர் யெயமோகனும் ஓரிடத்தில் சுட்டியிருக்கின்றார்.  கிராமியக் கொண்டாட்டங்கள் அனைத்துமே இன்று இல்லாமலாகிவிட்டிருக்கின்றன. கிராமங்கள் நகர்களின் சூம்பிய வால்கள் போலத் தனித்துவமிழந்திருக்கின்றன என்று தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று மிகஆழ்ந்த பொருளுடையது.

சடங்காசாரமாகாமல் பார்த்துக் கொள்ளல்

இன்றைய உலகில் கிராமங்களின் நிலை பற்றிய மதிப்பீட்டிற்குப் பிரபல தமிழ் எழுத்தாளர் யெயமோகனின் கூற்று ஆதாரமளிப்பதாக இருக்கின்றது. எனவே காலத்தின் தேவையே கிராம மட்டப் பண்பாட்டு விழா என்ற அருட்டுணர்வைத் தோற்றுவித்துள்ளது. இத்தகைய செயற்பாடுகளே நம்மவர்க்குத் தேவை என்பதை உணர்ந்து தூர நோக்குடன் கிராம மட்டப் பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்பட இருப்பது மனமகிழ்வைத் தருகின்றது. மாதந் தோறும் விழா என்பது நினைத்த மாத்திரத்தில் மனமகிழ்வுக்குரியதாக அமைந்தாலும் இதன் நடைமுறைச் சாத்தியத் தன்மை மிகுந்த சவாலுக்குரியதாகவே விளங்கும். பண்பாட்டு விழாக்கள் பற்றிய உணர்வெழுகையே இதன் சாத்தியப்பாட்டிற்கு உரஞ் சேர்க்கும்.

 

 


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.