குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

கொழும்பின் வாய்ச்சொற்களை நம்பகூடாது முன்னாள் இந்திய இராணுவத் தளபதிமொழியாக்கம் நித்தியபாரதி.

20.8.2011-அதாவது இந்து சமுத்திரத்தில் நிலவும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக, இராஜதந்திர செயற்பாடுகளை முறியடித்து அதில் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதே சீனாவின் நோக்காகும்.
 மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வரப்போகும் நாடாளுமன்ற விவாதத்தில் தமிழர் பிரச்சனையே முதன்மைப்படுத்தப்படவுள்ளது. ஆனால் இந்த அமர்வின் போது சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்குத் தொடர்பான இந்தியாவின்  மூலோபாயம் தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது.

அம்பாந்தோட்ரம விவகாரம் முக்கியமானதாகும். உப்பு மேடைக்குப் பெயர் போன மற்றும் உலர்ந்த, வெப்பமான காலநிலையைக் கொண்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிலங்காவின் பிரதான துறைமுகம் ஒன்று அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன?
 
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் மாவட்டமாகவுள்ள அம்பாந்தோட்டையை 2025ல் மிகச் சிறந்ததோர் கவர்ச்சி மிக்க இடமாக மாற்றுவதென்பது ராஜபக்சவின் தொலைநோக்காக உள்ளது.

தரையை ஊடறுத்து அமைக்கப்படும் உலகின் முதலாவது துறைமுகமாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் அமைந்துள்ளது. சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் இத்துறைமுகமானது பூகோள ரீதியில் மிக முக்கிய இடத்தில் அமைந்துள்ளது.

அம்பாந்தோட்டை உள்ளடங்கலாக சிறிலங்கா மீது அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை இந்தியா எவ்வாறு விட்டுக்கொடுத்துள்ளது?

இந்தியா மீது தங்கியிருக்கவேண்டிய தேவைப்பாடுகளைக் குறைக்கின்ற ராஜபக்சவின் மூலோபாயத் தீர்மானமானது இதில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றது.

குறிப்பாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவிடம் சிறிலங்கா பெரிதும் தங்கி வாழவேண்டிய சந்தர்ப்பத்தை ராஜபக்ச தனது தந்திரோபாயம் மூலம் குறைத்துவருகிறார்.

'பழைய பட்டுப் பாதையின் முத்து' என்ற நிலைப்பாட்டில் சிறிலங்கா மீண்டும் வரவேண்டும் என்பதையே ராஜபக்ச விரும்புகிறார்.

அதாவது இந்து சமுத்திரத்தில் நிலவும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் வர்த்தக, இராஜதந்திர செயற்பாடுகளை முறியடித்து அதில் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதே சீனாவின் நோக்காகும்.

"சிறிலங்கா மீது சீனாவால் மேற்கொள்ளப்படும் பங்களிப்புத் தொடர்பாக இந்தியா அச்சப்படத் தேவையில்லை. சீனர்கள் வருவார்கள். போவார்கள். ஆனால் இந்தியர்கள் இங்கே தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள்" என ஆகஸ்ட் 2009ல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆனால் அம்பாந்தோட்டை விவகாரம் என்பது இந்தியாவின் இருப்பை நிலைகுலையச் செய்வதற்கான செயற்பாடாகும்.

நிருபமா ராவ் உயர் ஆணையாளராகக் கடமையாற்றிய போது அம்பாந்தோட்டை விவகாரம் முதலில் இந்தியாவிற்குத் தெரியப்படுத்தப்பட்டது. செலவு, துறைமுக வளப் பயன்பாடு போன்றவற்றால் அவ்வேண்டுகோள் தட்டிக்கழிக்கப்பட்டது.

சீன நிதியுதவியுடன் நவீனமயப்படுத்தப்பட்டு வரும் கொழும்புத் துறைமுகத்தில் இந்தியாவின் 70 வீதமான கப்பல்களின் நகர்வுகள் கையாளப்படுவதாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அம்பாந்தோட்டையானது சீனாவின் 'முத்துக்களின் சரமாக' மாறிவருவதாக 2009ல் இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பாகக் கருத்துரைத்த போது சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருந்தார்.

"அம்பாந்தோட்டையில் சீனாவானது முதலீடு செய்வதை நாம் எமது கவனத்தில் எடுத்துள்ளோம்" என இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் ரெட் ஒசியசிடம் சிறிலங்காவுடன் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட அதற்கான செயலர் மோகன் குமார் தெரிவித்திருந்தார் என நவம்பர் 2007ல் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்த போதிலும் சிறிலங்காவில் அகலக்கால் பதித்துள்ள சீனா தொடர்பாக இந்திய வெளியுறவுச் செயலகம் வெளிப்படையாக எந்தவொரு கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை.

அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஒருபோதும் இராணுவத் துறைமுகமாக மாறமாட்டாது என மே 2011ல் பீஜிங்கில் கருத்துரைத்த சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.

சீனாவால் நவீனமயப்படுத்தப்பட்ட Gwadar, Chittagong ஆகிய இரு துறைமுகங்களும் வர்த்தக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவையிரண்டும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விடக் குறைவான கவர்ச்சியைக் கொண்டுள்ளதுடன், கப்பற் பாதையிலிருந்து வெறும் ஐந்து மைல் தொலைவிலேயே அமைந்துள்ளன.

Gwadar துறைமுகத்தை கடற்படைச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் இது போன்ற எந்தவொரு தளமும் சிறிலங்காவில் இருப்பது தொடர்பாக தான் எதுவும் அறிந்திருக்கவில்லை எனவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜென் லியாங், மே 2011ல் சிங்கப்பூரில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது தெரிவித்திருந்தார்.

தற்போது சிறிலங்காவில் மாறிவரும் நிலைப்பாடுகள் தொடர்பாகப் பலர் மகிழ்ச்சியடைகின்றனர். "இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் நாம் தற்போது உறவைப் பேணிவருகின்றோம். நாம் சீனாவுடன் நெருக்கமாக உறவைப் பேணிவருவதில் வேறு அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை" என இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கான களஞ்சிய மற்றும் எரிபொருள் நிரப்பு வசதிகளை சீனா உருவாக்கித் தருகின்றது. ஆகவே இந்தியாவால் முடியுமா?" என வேறொரு இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவானது சிறிலங்காவில் பெருமளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ள ஒரு நாடாகும். 2005ல் ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சீனா தன செல்வாக்கை சிறிலங்காவில் அதிகரித்து வருகின்றது.

சிறிலங்காவிற்கு பெருந்தொகையான நிதியுதவிகளை மேற்கொண்ட யப்பானைவிடத் தற்போது சீனாவானது 3.2 பில்லியன் அமெரிக்க டொலரை சிறிலங்காவில் முதலிட்டுள்ளது.

2009ல் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நாட்டு முதலீடுகளில் சீனா முதன்மை வகிக்கின்றது. அனைத்துலக கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் சீனாவின் யுவான் நாணயம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் இந்தியா தனது கவனத்தை அதிகம் செலுத்தியுள்ளது. தற்போதும் இந்தியா முதன்மை நிலையிலுள்ளது.

1987ல் மேற்கொள்ளப்பட்ட இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தத்தின் பிரகாரம், "திருகோணமலைத் துறைமுகம் அல்லது சிறிலங்காவிலுள்ள ஏனைய துறைமுகங்கள், இந்தியாவின் நலனிற்கு குந்தகம் விளைவிக்கத்தக்க வேறு நாடுகளின் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட முடியாது" எனக் குறிப்பிப்பட்டுள்ளது. ஆகவே தற்போது இந்தியாவானது கொழும்பின் வாய் வார்த்தைகளை நம்பிச் செயற்படாமல் அதன் நடவடிக்கைகளுக்கு ஏற்ப செயற்படவேண்டும்.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.