குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தெரிவுக்குழுவில்பசில் கக்கீம், டக்ளசுடன் 31பேர் அங்கம்வகிப்பர் கக்கீம்முசுலீம் பசில்அரசு டக்ளசுஏன்?

20.8.2011-மருந்தில்லாது செத்துப்போ! தமிழர்களின பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சனாதிபதியால் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 31 பேரே அங்கம் வகிப்பர். இவர்களில் அரச தரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் பசில் ராயபட்ச, ரவுப் கக்கீம், டக்ளசு தேவானந்தா ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவர்  என்று இந்திய செய்தி முகவர் நிலையமான பி.ரி.ஐ. தெரிவித்தது.நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

6 மாத காலத்திற்குள் தெரிவுக் குழு தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சனாதிபதி மகிந்த ராசபட்ச உத்தரவிட்டுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராயபட்ச தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே 6 மாத காலத்துக்குள் தனது பணியை முடிக்கும் என்று அறிவிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக் காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அதன் விசாரணைகள் நீடித்துச் செல்வதை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று தெரிவுக் குழு 6 மாதங்களிற்குள் தனது பரிந்துரைகளைக் காணும் என்ற காலக்கெடு நிறைவேறும் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே அமையும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதற்படியாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி வந்த ஜனாதிபதி, தற்போது தெரிவுக் குழுவை அமைப்பதானது தனது முன்னைய திட்டத்தை அவர் கைவிட்டுவிட்டார் என்பதும், தீர்வு தொடர்பாக காலத்தை இழுத்தடித்து சர்வதேச நாடுகளை ஏமாற்றும்  அறிகுறியே என்றும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.