குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுதர்சன நாச்சியப்பன் நாடகம்டில்லியில் குழம்பியது.தமிழக உறுப்பினர் இலங்க்கைக்கு சேவையா?

20.08.2011 திமுக ஆட்சி அப்புறப்படுத்தப்பட்டு அதிமுக ஆட்சி பதவியேற்ற பின்னர்.  ஈழத் தமிழர் இனப்படுகொலை தொடர்பான வலுவான போராட்டங்கள் தமிழகத்தில் மீண்டும் நடக்கத் துவங்கியுள்ளன.  கடந்த திமுக ஆட்சிக்கும் இன்றைய அதிமுக ஆட்சிக்கும் என்ன விதமானவேறூ பாடு என்றால். கலைஞர் ஈழத் தமிழர் விவாகரங்களை வைத்து அப்பட்டமான நாடகங்களை நடத்தினார். ஒரு முறை தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகளுக்காக இலங்கை அரசை கருணாநிதி கண்டித்த போது இலங்கை அமைச்சர் ஒருவரே இப்படிச் சொன்னார் // எங்களின் நண்பர் கருணாநிதியே இப்படிச் சொல்லலாமா? // என்று. காலப்போகில் அது உண்மைதானோ என்று நம்பும் அளவுக்கு ஈழ மக்களுக்காக போராடிய மக்கள் திமுக போலீசார் ஒடுக்கப்பட்டனர். தமிழினத் தலைவன் என்று எந்த தமிழார்வர்லகள் அவரை ஏற்றி வைத்தார்களோ அவர்களே கலைஞரை தமிழினத் துரோகி என்றார்கள். திமுகவுக்கு எதிராக ஈழத் தமிழர் விவாகரமும் தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு அவர் வீழ்த்தப்பட்டார். பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றிய உடனேயே ஈழ விடுதலை ஆதரவளர்கள் உற்சாகமானார்கள். மீண்டும் ஈழ மக்களுக்கான போராட்டங்கள் உற்சாகம் பெற்றன. கோத்தபய ராஜபஷே தமிழக முதல்வரை விமர்சிக்கப் போய் தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்களே அவரின் கொடும்பாவியை எரித்ததோடு இலங்கை தூதரத்திற்குள் புகுந்தும் போராட்டம் நடத்தினர். திமுக அணியினர் கூட வேறு வழியில்லாமல் பாராட்டும் படி ஜெயலலிதா நடந்து கொண்டார். அப்போது கூட கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் இலங்கையைக் கண்டிக்கிறேன் என்று துவங்கி ஜெயல்லைதாவைக் கண்டித்து விட்டி ஓய்ந்தார்.
 
தமிழகத்தின் இந்த நிலை டில்லி வரை எதிரொலித்தது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜெயலலிதாவின் வெற்றியும். அவர் ஆதரவு பெற்று விட்ட ஈழ ஆதரவுப் போராட்டங்களும் நிச்சயம் பாராளுமன்றத்தில் புயலைக் கிளப்பலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் கூடியது. ஸ்பெக்டரம். காமன்வெல்த் ஊழல், அன்னா அசாரே வின் போராட்டங்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் தலையாய பிரச்சனைகளாக இருந்த போதிலும் ஈழத் தமிழர் விவாகரத்தையும் நாடாளுமன்றத்தில் எழுப்பி விடத் தீர்மானித்தனர் தமிழக எம்பிக்கள். மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரை சிறப்பு விருந்தினராக அழைத்த இந்தியா அவரை நாடாளுமன்றத்திலேயே கௌரவித்தது. இதற்கு அதிமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மீராகுமாரின் அதட்டலில் தமிழக எம்பிக்கள் அடங்கி விட்டாலும், பின்னர் திமுக எம்பி திருச்சி சிவா இலங்கை சபாநாயகர் கலந்து கொண்ட சந்திப்பில் இருந்து கொலை பாதகம் செய்தவர்களுடன் உறவு கொள்ள முடியாது என்று சொல்லி எதிர்ப்பை பதிவு செய்து வெளியேறினார். பின்னர் அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் பலரும் இலங்கை தொடர்பாக விவாதம் தேவை என்று நாடாளுமன்ற சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தனர். அதிமுகவோ ஒரு படி மேலே போய் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இன்னொரு நாட்டின் அமைச்சர் விமர்சனம் செய்கிறார் என்பதால் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் அவரையும் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசையும் தண்டிக்கக் கோரும் தீர்மானம் தேவை என்று கடிதம் கொடுத்தது. 
 
நோட்டீஸ் கொடுத்த பின்னர் அது விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  2009ம் ஆண்டு இலங்கை ராணுவ மீறல் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கை மீதான விவாதம் என்ற ஒன்றும் இடம் பெறும் என்றும் அதில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலுவும், சமாஜ்வாடிக் கட்சி சைலேந்திர குமாரும் இதில் கலந்து கொண்டு பேசுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அப்படி அறிவித்த அன்றே மதியம் வெளியான நாடாளுமன்ற விவாதக் குறிப்புப் பட்டியலில் காலையில் இராணுவ போர் விதி மீறல் என்று இருந்த பதத்தை இலங்கையில் தமிழர் மறுவாழ்வு குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் நலன்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகள் என்று மாற்றி விட்டனர். லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
 
தமிழக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்து விவாதத்திற்கு ஒப்புதல் பெற்ற ஒரு விஷயம் எப்படி மாற்றப்பட்டது அதை மாற்றியவர்கள் யார்? சபாநாயகர் மீராகுமாரே மாற்றினாரா?அல்லது மீராகுமருக்கு மாற்றும் படி யாரும் சொன்னார்களா?என்றால் இப்போதுதன் செய்திகள் கசிகின்றன இராணுவ விதி மீறல், போர்க்குற்றம், என்றிருந்த வாசகத்தை தமிழர் மறுவாழ்வு என்று மாற்றும் படி சபாநாயகர் மீரா குமாரை வலுயுறுத்தியவர் தமிழக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சுதர்சன நாச்சியப்பன் என்று. எங்கிருந்தோ வந்த உத்தரவுக்கிணங்க அவர் அன்று அவசரமாக சபாநாயகரைச் சந்தித்தார்.
 
யார் இந்த சுதர்சன நாச்சியப்பன்.
............................................................
 
 
தமிழகத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாத சுதர்சன நாச்சியப்பனை நியமன உறுப்பினராக லோக்சபாவுக்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ் கட்சி. திமுக ஆட்சியின் போது ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சென்று ராஜபக்ஸவோடு விருந்து உண்டு திரும்பி வந்து பெயரைக் கெடுத்துக் கொள்ள காரணமாக இருந்த அந்த பயணத்தை மத்திய அரசோடு கலந்து பேசி முடிவு செய்தவர் இந்த சுதர்சன நாச்சியப்பந்தான். இலங்கை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது சுதர்சன நாச்சியப்பன் இலங்கை ஆட்சியாகளோடு கொஞ்சிக் குலாவியதுதான். நீண்டகாலமாக ஈழப் போராட்டத்தில் அக்கறையோடு போராடிக் கொண்டிருக்கும் திருமாவளவன் போன்றவர்களை நிர்பந்தித்து கொழும்பில் விருந்துண்ண வைத்தது. அதை திட்டமிட்டு புகைப்படம் எடுத்து திருமாவின் பெயரைக் கெடுக்க முயன்றதும் இதே சுதர்சன நாச்சியப்பந்தான். இவர் இப்போது அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற N.G.O  அமைப்பைத் துவங்கியுள்ளார். அந்த அமைப்பு சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகச் சொல்லிக் கொள்கிறது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான எல்லா சட்ட விரோத தொழில்களையும் செய்யும் சுதர்சன நாச்சியப்பனின் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பில் இணைந்து செயல்படுவது என். சத்தியமூர்த்தி என்பவருடன். இவர் ஹிந்து பத்திரிகை அதிபர் என்.ராமின் நெருங்கிய கூட்டாளி என்பது உலகறிந்த ரகசியம். இந்த பவுண்டேஷந்தான் நேற்று ஏதோ இந்திய அரசே இலங்கைத் தமிழ் கட்சிகளின் தமிழர் தரப்புத் தலைவர்களை டில்லி அழைப்பது போன்று ஏமாற்றி அழைத்திருக்கிறது. மிகவும் நுணுக்கமாக நடந்த இந்த விஷயம் ஏற்கனவே கசிந்து விட்ட நிலையில் பெரும்பலான தமிழக எம்பிக்கள் சுதர்சன நாச்சியப்பனின் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்ட பல எம்பிக்கள் துவக்க நிலையிலேயே இதை கண்டித்திருக்கிறார்கள்.
 
எதைக் குழப்ப?
..............................
 
இப்போது முதலில் இருந்து வருவோம். அதிமுக பதவியேற்ற பின்னர் இலங்கை அரசால் நினைத்தது போன்று தமிழகத்தைக் குழப்ப முடியவில்லை. கடந்த திமுக ஆட்சியின் போது கூட ஆளும் காங்கிரஸ், திமுக எம்பிக்கள் இனப்படுகொலை விவாகரத்தை திசை திருப்ப முயன்ற போது அதற்கு போராடும் சக்திகள் இடம் கொடுத்ததில்லை. ஆனால் போராடும் சக்திகளுக்கு எதிராக அன்றைய திமுக அரசு நடந்து கொண்டது. அதுதான் இலங்கை அரசு தனக்குச் சாதகமான போக்காக அதை எடுத்துக் கொண்டது. ஆனால் இன்று நிலமை வேறு சட்டமன்றத்தில் தீர்மானம், இலங்கைக்கு எதிரான போராட்டங்களை அரசு ஒடுக்கவில்லை. ஆனால் எங்காவது ஒரு சின்ன பிரச்சனை என்றால் கூட அதை ஊதிப்பெருக்கி தமிழக அரசுக்கு நெருக்கடியை உருவாக்க நினைக்கிறது இலங்கை அரசு. சமீபத்தில் அப்பாவி சிங்களப் பயணிகளின் பனியன்களைக் கிளித்தது தொடர்பாக இலங்கை தூதரகம் தமிழக அரசுக்கு நெருக்கடியை உருவாக்க முயன்றது. காங்கிரஸ் கட்சியை தூண்டி விட்டு தமிழகத்தில் புலிகள் ஊடுறுவிட்டார்கள் என்று ஜெயலலிதாவை மிரட்டுகிறது. இதுவே கடந்த திமுக ஆட்சி என்றால் உடனே ஐம்பது அப்பாவிகளைக் கைது செய்து விஷயத்தை ஊதி விட்டிருக்கும். ஆனால் ஜெயலலிதாவுக்கு இப்போது உண்மைகள் தெரியும் என்பதால் அவர் இதை கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு அமைதியாகவும் இருக்கிறார்.  ஒரு காலத்தில் ஆரியப் பெண் என்றும் பாப்பாத்தி என்றும் தமிழார்வலர்களால் திட்டப்பட்ட ஜெயலலிதா இன்று மரியாதையாகப் பார்க்கப்படுகிறார். இது தேசிய அளவில் இலங்கைக்கு எதிராக குறிப்பாக நாடாளுமன்ற விவாதம் வரை போய் விடக்கூடாது என்பதால் அதைத் தடுக்கவே முதல் நாள் கூட்டத்தில் இலங்கை சபாநாயகர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அழைப்புக்கு அஸ்திவாரமாக இருந்ததே சுதர்சன நாசியப்பந்தான். அதே சுதர்சன நாச்சியப்பந்தான் நாடாளுமன்ற விவாதம் கோரும் தமிழக எம்பிக்களை திசை திருப்பும் நோக்கில் அரசியல் தீர்வுக்காக கூடிப் பேசுவது போல நடிக்கிறார். இப்போது தமிழக மக்களிடம் இருப்பதெல்லாம்  ஒரே கெள்விதான் இவர் தமிழக மக்களுக்குச் சேவை செய்ய நாடாளுமன்றம் சென்றுள்ளாரா? அல்லது இலங்கை அரசுக்கு சேவை செய்யவா? என்பதுதான்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.