குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா இலகுரக விமானங்கள்! மேற்கத்தேய நாடுகளின் தொழில்நுட்பத்துடன் போட்டி.

28.02.2016-மேற்கத்தேய நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளும் ஆளில்லா இலகு ரக விமானங்களை உருவாக்குவதில் சாதனை படைத்துள்ளனர்.இலங்கையின் மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞா னிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இயற்கைப் பேரிடர்களின் போது வானிலை பற்றிய துல்லியமான தகவல்கள் மற்றும் விவசாய பயிர்ச்செய் கைக ளின் சேதம் குறித்த ஆய்வுகளுக்கு இவற்றைப்பயன்படுத்தும் வகையில் குறித்த இலகுரக விமானங்கள் வடிவமை க்கப்பட்டிருப்பதாக இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவின் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பரந்துவிரிந்துள்ள விவசாய நிலங்களில் இவற்றைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.