குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

யாழ்.கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்! மாநகர முதல்வர் எதிரியாக இருந்தாலும்சரியே

20.08.2011-யாழ்.கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்! மாநகர முதல்வர் எதிரியாக இருந்தாலும்சரியே  யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேசுவரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.சமீப காலமாக யாழ்.நகரத்தில் கலாசார சீர்கேடுகள் குறித்த  பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். நகரில் இயங்கும் விடுதிகளில் (லொட்ச்)  சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அந்த விடுதிகளைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் மேலும் தெரிவிக்கையில்,

இங்குள்ள விடுதிகளில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படாமல் இயங்கிவருகின்றன என்பது உண்மையாகும். இவற்றைப் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.

இங்கு நகரிலுள்ள வீடுகளே விடுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விடுதிகள் அனைத்தும் புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானது. அவர்களுக்குப் பணம் தேவை என்பதால் வேற்று இனத்தவர்களுக்கும் அதிகம் லாபம் தேடித்தருபவர்களுக்கும் வாடகைக்கு விடுகின்றனர்.

பணம்தான் முக்கியம் என்ற நோக்கில் விடுதி நடத்துனர்களும் சமூகம் தொடர்பில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அக்கறையுடைய நடத்துனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கலாசாரம் சீரழிகிறது எனக் கண்ணீர் வடிக்கும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் சமூகம் மீது அக்கறையுடையவர்களா எனத் தெரியவில்லை.

இந்த விடுதிகளைப் பதிவு செய்வதாயின் உரிமையாளர்கள் அவ்விடத்தில் இருக்க வேண்டும். காணி அல்லது வீட்டு உரிமைப் பத்திரம் அவசியமாகும். ஆனால் அவை விடுதி நடத்துனர்களிடம் இல்லை. ஏனெனில் விடுதிகளின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தமிழர்களேயாகும்.

எனினும் இவற்றைப் பதிவு செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என முதலவர்  தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.