குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பூநகரிபி.ச தலைவராக.வைத்தியக்கலாநிதி(R.A.M.O) க.பொன்னம்பலம்அவர்களின்மகன் பொ.சிறிகந்தராசா.யா.இ.மு.உ.அ

 பூநகரி பிரதேச சபைத்தலைவராக திரு.பொ.சிறிகந்தராசா அவர்கள் பதவியேற்கும் நிகழ்வில் தமிழர்களின் அரசியலில் முதியவர் திரு.சம்பந்தர் அய்யாஅவர்களுடன். 

 20.08.2011.த.ஆ.2042-இன்றையதினம் பிரதேசசபைத் தலைவர்கள் உறுப்பினர்கள் யாழ்நகரில்  பதவியேற் கின்றார்கள். இதுவிடயத்த்தில் தமிழர்கள் இலங்கை வாழ்த்தமிழர்கள் விழிப்படைய வேண்டும்.  காரணம் முன்னர் கிராமசபை என்றிருந்ததை இப்போ பிரதேச சபை என்று இலங்கை அரசநிர்வாகம் மாற்றி நிர்வகிக்கின்றது. இதனடிப்படையில் இன்றையதினம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தத்தமது கட்சிகளின் தலைவர் முன்னிலையில் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. பூநகரிபிரதேச சபைத்தலைவர் பொ.சிறிகந்தராசா அவர்கள்.திரு. மாவைசேனாதிராசா அவர்களுடன் பதவியேற்பு நிகழ்வில்.

பூநகரியின் பிரதேச சபைத்தலைவராக பூநகரி முந்நாள் வைத்தியக்கலாநிதியும் உதவிக் கிராமசபைத் தலைவருமான(R.A.M.O) க.பொன்னம்பலம் அவர்களின் மகன் பொ.சிறிகந்தராசா(யா.இ.மு.உபஅதிபர்)  அவர்கள் பொறுப்பேற்கின்றமையை  அறிந்து பூநகரிவாழ் தமிழ்மக்கள்  இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் மகிழ்வுடன் காணப்படுகின்றனர்.

பாராளமன்ற உறுப்பினர் பதவிகளைவிடவும் தமிழர்களைப் பொறுத்தமட்டில் கிராமசபை முக்கியமானது. தமிழர்களின் உள்ஊர் நிர்வாகங்களைச் சிறப்புறச்செய்யமுடியும். 

 தத்தமது ஊர்மக்களுக்கு  என்ன சேவைகளை வழங்கலாம் என்பதை அரசியல் நோக்கிற்கு அப்பால் நின்று தமது ஊர்உறவுகளுக்கு உதவலாம் என்ற நிலையில் பிரதேசசபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இருப்பார்கள்.அப்படியிருக்கவும்வேண்டும்.

 இனவுணர்வோடு ஊர்உறவுப்பற்றுடன் எங்களை மக்கள்  தெரிவுசெய்திருக்கிறார்கள் என்பதை பிரதேச கபைகளுக்கு தெரிவானவர்கள் மனதில்கொண்டி ருக்கவேண்டும். இறுதியாக நடந்த பராளுமன்ற தேர்தலைவிடவும் அதிகமக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் இவர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

 சிலர் கட்டிடங்களைத்திருத்தும் ஒப்பந்தங்களை(contract)  கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்தங்களை வழங்கல் பெறுதல் வீதித்திருத்தவேலைகள் வீதி அமைத்தலில் தனிநபர் பணமீட்டல் நோக்காஇதுவரையிருந்துவருகிறது. 

இனியும் இதுஇருக்குமாயின் இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன ? என்ற மனநிலைவந்துவிடும். இதனால் தமிழின அழிப்பாளர்களுக்கு துணைபோவோருக்கு இது சாதகமாகிவிடும்.

இது கூட முன்னோர் பழழொழி. அங்கே இனவேறுபாடு பண்பாட்டு வேறுபாட்டை கருத்தில் கொண்டே அதைக் கூறிவந்திருக்கிறார்கள் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.

 இங்கு இராவணன் என்போன் தமிழினத்தவன் என்பது சுட்டப்படுவதை பிற்காலத்தமிழர் பொருட்படுத்தாமையே கம்பரின் கம்பராமாயாண ஏமாற்றுக்கு வழிவகுத்தது.

 இராமன் என்பான் வடக்கத்தையான் என்பதாகும். வயிற்றுக்குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பாதே என்பதும்  பழந்தமிழரரின்பழமொழி ஆகும்.

 இங்கே பிற்காலத்தில் இலங்கைத்தமிழர்கள் அறிவிலித்தனமாகவும் மொழி இனப்பற்றில்லாத காரணத்தாலும் தம்மைத் தாமே உயர்வாக்கிக்கொள்ளும் காரணத்தாலும் வடக்கத்தையான் என்றால் தமிழகத்தமிழர்களையும். மலையகத்தமிழர்களையும் இப்பழமொழியில் வடக்கத்தையான் என்று கருதிவாழ்ந்தமைமிகப்பெரும்தவறாகும்.

வடஇந்தியக்குணங்கொண்ட தமிழர்களையும் அப்படி எண்ணலாம் என்று கருதினால் இந்துக்கலாச்சாரத்தையும்
பிராமணத்தையும் அதிகம் துாக்கிப்பிடிக்கும் குமுகாயத்தினரே வடக்கத்தையான் என்பதே உண்மையாகும். இது ஒருகணிதசூத்திரத்தை விளங்குவது போன்றே விளங்கிக் கொள்ளவேண்டியவிடயமாகும்.

இதை உணராத கல்வியில் திறமையாளர்கள் என்று தம்மைக்கருதும் குழாமினர்  பகவத்கீதை வாசகத்தையும் மகாபாரதச் சின்னமான தேரையும் கண்ணனையும்  வீடடுச்சுவர்களில்  மாட்டுவது பகைவனை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும்.

 தமிழில் நுால்களும் சிறந்தவாசகங்களும் இல்லாதது போல் பிறமொழி மொழிபெயர்ப்பு வாசகங்களை வீடுகளிலும்  எமது தமிழர்களின் நினைவேந்தல் ஏடுகளிலும் இடம்பெறச் செய்வது தவறு என்பதை உணர்க.


இது எமது தமிழியம் சார்ந்தகருத்துப்பதிவாகும்.

பிரதேசகபை உறுப்பினர்களையும். தலைவர்களையும் வாழ்த்துங்கள் ஒத்துழைப்பு வழங்குங்கள் அலோசனைகளைத் தெரிவிப்பதுடன் உங்கள் பகுதி council-gemeinde-  உள்ஊர் ஆட்சிகளின்  நிர்வாகத்திறன்களை உள்வாங்கி எம்மவர்களுக்கு அறியப்படுத்துங்கள். அவர்களோடு தொடர்புகளை  ஏற்படுத்திவையுங்கள்.

தாயக அபிவிருத்திக்கு புலம்பெயர்தமிழர்கள் உதவ வேண்டும் – யாழ்ப்பாணத்தில் சம்பந்தன்!

தமிழர்களின் தாயக பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நேற்று சனிக்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் உரையாற்றுகையில், ”உள்ளூராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவிகளையும், நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவர்களோடு ஆலோசித்து செயற்படவுள்ளோம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.