குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 11 ம் திகதி சனிக் கிழமை .

ஐரோப்பா அப்பப்பா பொருளாதார உச்சம் நாகரீக உச்சம். வாழும் மனிதரின் சொர்க்கம்.

ஐரோப்பா அப்பப்பா  பொருளாதார உச்சம்  நாகரீக  உச்சம்.

வாழும்  மனிதரின் சொர்க்கம்.

எண்ணம் அகன்றவனுக்கு   அறிவு  தலைக்கு   ஏறியவனுக்கு

இதயம்  கசங்குவது   புரிகிறது பணம்  பறக்கிறது

நடக்கும் மனிதனை பணத்திற்கு பறக்கவைக்கிற

பணநாகரீகம் புரிவாிவதில்லை.

அறிவற்ற அரக்கனுக்கு   பணமே  அறிவு

மதுவே உலக உயர்வு இருளில் வரும் பெண்ணே சொர்க்கம்.

மகிழுந்தில் இருளில் மாதுடன் மயங்கும் மாய யீவாக்கள்

மற்றவர்களையும் கெடுக்கும் சாத்தான்கள்.

இவர்களின் லீலைகள்  இரவுத் தெருக்களில்

மதுவுடன்   மாதுவுடன் துள்ளும் இசையில்

மின்னும்  ஒளியில் கள்ள அறையில்

கட்டியணைக்கும்  காமவெறியர்.

இரவுதான் இவர்களுக்குப்பகல்.

லீலைகள் புரியக்கூடிய  வேலைகள்தான்

பகுதி நேரவேலைகள்.

உழைத்து உயரவல்ல குடும்பத்தை

அழித்து பழாய்ப்பபோவதற்கு!

 

நல்லவன் வேடம் நல்லவர்களின்  நட்பில் நடிப்பு!

நல்லவர்கள் தொடர்புகளை அரனாய் வைத்து

தங்கள் தீயபசிகளைத்தீர்த்த தீயர்.

மங்கைகளை நாட அதற்கான  தொழில்களை

தெரிவு  செய்து மண்டபங்களில்  மாது  வீழ்த்தும்

மாயமான்கள் இலத்திரனியல் அம்புகளை எய்யும்

காமக்காட்டு வாசிகள் சில கமறாக்களை

கையிலெடுத்து  அலைகிறார்கள்.

நல்லநிகழ்வுகளில் சாத்தான்களை

காமவெறியரை அடையாளம் கண்டு

கொண்டாட்டங்களை நடத்துங்கள்.

 

31.01.2016