குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

நல்லூர் முருகா உன்னை ஏன் வணங்குகிறேன்?நன்றி வலம்புரி

 19.8.2011-நல்லூர் கந்தப்பெருமானுக்கு பல் கோடி வந்தனங்கள் உங்கள் திருவருள் மீது வற்றாத ஈர்ப்புக் கொண்ட இச்சிறியேன் எழுதும் திருமடல் இது. தமிழ் மக்களின் தலைவன் முருகன் என்றால் அது நல்லூரில் இருந்து ஆட்சி செய்யும் உன்னையே குறிக்கும்.(கததிர்காமக் கந்தனையும் என்று இணைக்கிறது குமரிநாடு.) அந்தளவிற்கு தங்கள் மீது அளவு கடந்த அன்பு தமிழர்களுக்கு உண்டு. அதனாலன்றோ உங்கள் திருமுகத்தை காண்பதற்கும் நல்லூர் திரு வீதியில் புரண்டு அழுது பாவம் போக்குவதற்கும் நல்லூர் முன்றலில் வந்து நின் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து மன்னவனே! உன் குடிமகன் வந்திருக்கிறேன் அருள் தந்தருள்க என்று இரப்போரும் காவடி எடுப்போரும் கந்தஷ்டி கவசம் பாடுவோரும் உன் பள்ளியறை வரை திருப்புகழ் பாடி திருக்கதவு முடும் வரை உன்னை விட்டகல விருப்பமின்றி உள் வீதியில் முருகா...முருகா என்று நா உழல்வோரும் பாதயாத்திரையாக நின் தலம் நாடி வ்ருவோரும் என எராளம் அடியவர் கூடி உன்னை கும்பிடுவதற்கு தாரளமான காரணங்கள் இருக்கலாம்.ஆனால்,யாம் உனைக் கும்பிடுவதற்கு முன்று காரணங்கள் உண்டு.

அதில் ஒன்றுமாங்கனியைப் பெறுவதற்காக உலகை வலம் வந்த நீ,கனி கிடைக்காத போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு ஆண்டியாகச் சென்று,பார் நான் செய்து காட்டுகிறேன் என்று உரிமைக்காகப் போராடிய உன் மனத்திடம், இரண்டாவது காரணம் தந்தையாயினும் தெரியாததை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற இறுக்கமான நின் முடிபு. முன்றாவது காரணம் போர்க்களத்தில் நின்ற சுரனை இனந்தெரியாத உருவில் சென்று சுட்டுக் கொல்லாமல், நின் திருப்பெருவடிவத்தைக் காட்டி அவனை ஆட்கொண்டு அவன் வீரத்திற்கு மதிப்பளித்து, சேவல் கொடியாக துலங்க விட்டாயே!அந்தப் பெருந்தன்மை;இந்த முன்றுக்காகவும் தான் உன்னை எனக்குப் பிடிக்கும்.ஆனால் இங்கோ,உரிமையை விட்டுக்கொடுகிறார்கள்.பிழையென்று தெரிந்திருந்தும் பேச மறுக்கிறார்கள். போர்க்களம் நின்றவரை காணாமல் செய்கிறார்கள். ஏன்முருகா!இப்படி நடக்கிறது.நீ இதை தண்டிக்காததன் காரணம் யாதோ?நல்லூர் முருகா சொல்!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.