குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கப்படுகின்றன – சிறீதரன் பூநகரிமுட்கொம்பனில்300ஏக்கர்

 19 .08. 2011தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கப்படுகின்றன – சிறீதரன் பூநகரி முட்கொம்பனில் 300ஏக்கர் தென்னம் தோட்டம் அரசால்அபகரிப்பு என்பதையம் குமரிநாடு இணையம் அறியப்படுத்திக் கொள்கிறது.  தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடாகவே அரசாங்கத்தின் அறிவிப்பை நோக்க முடிகிறது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
 
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வடக்கின் சில பிரதேசங்களில் தற்போதைக்கு மீள்குடியேற்றம் செய்வது சாத்தியம் இல்லை என நேற்று அரச முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பாகவே அவர் இதனைn கூறியுள்ளார்.
 
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நந்திக்கடல் கடற்கரைப் பகுதி முற்றுமுழுவதுமாக இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் வடக்கு, மேற்கு, தெற்கு அம்பலவன் பொக்கனை ஆகிய பிரதேசத்து மக்களை கோம்பாவில் பகுதியில் இப்போது அரசு மீள்குடியமர்த்தியுள்ளது.
 
இது அகதி முகாம் போலவே உள்ளது. இந்தப் பகுதியிலேயே இவர்களுக்கு நிரந்தர காணிகள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவத்தினர் சிங்கள மக்களை இரகசியமாக குடியமர்த்த திட்டமிட்டு வருகின்றனர்  மீன் வளத்தைச் சுரண்டுகின்றனர்.
 
தவிர போர்க்குற்றத்தை மறைக்கும் வகையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அதனை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களது உடலங்கள் எச்சங்கள் அழியும் வரை அவற்றை உயர்பாதுகாப்பு பகுதியாகவே வைத்திருக்க அரசு முயல்கிறது. தற்போது வடக்கில் புதிய காணிச் சட்டங்களை அமுல்படுத்தி தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்று எவையும் இல்லை என இராணவத்தினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஏன் யாழ். அரச அதிபரும் கூடக் கூறுகின்றனர்.
 
ஆனால் மயிலிட்டி, கட்டுவன், தெல்லிப்பளையில் பல இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த அனுமதி வழங்கப்படவில்லை.இவைதவிர வடக்கில் மண்டைதீவில் 42 செம்மண் தோட்டத்தில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பூநகரியில் இரணைதீவு 12 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டது அங்கு 1990 க்கு முன்னர் 900 குடும்பங்கள் இருந்தன. இப்போது இராணுவத்தினரே அங்கு நிலை கொண்டுள்ளனர்.
 
கிளிநொச்சி பரவிப் பாஞ்சான் கிராமம் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. இங்கு வசித்த 400 குடும்பங்கள் வேறு இடங்களிலேயே தங்கியுள்ளன. 120 ஏக்கருக்கும் அதிகமான பரப்புடைய வெள்ளாங்குளம் பண்ணை கார்கில்ஸ் நிறுவனத்துக்கு அரசு இரகசியமாக விற்றுள்ளது.இவ்வாறு தமிழ் மக்களது பூர்வீக நிலங்களில் பல்வேறு கோணங்களில் அரசு ஆக்கிரமித்து வருகிறது.
 
இவ்வாறான அரசின் இனப்பாரபட்சமான நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இதனை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துவதுடன் பொதுமக்களை இணைத்து ஜனநாயக ரீதியில் வெகுஜனப் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.