குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

பரிசுத்தமிழ்இளைஞன் சென்னையில் இன்று திருக்குறள்நெறித் திருமணம் செய்துகொண்டார்.

  18.08.2011.த.ஆ.2042-பரிசுத்தமிழ்இளைஞன் சென்னையில் இன்று திருக்குறள் நெறித்திருமணம்  செய்துகொண்டார். பாண்டுச்சேரி பேராசிரியர்திரு. கதிர்முத்தையன் அவர்கள் நிகழத்தினார். திருக்குறளாண்டு  2042 இன்று 18.8.2011 காலை 11.00முதல் பிற்பகல் 13.00மணிவரை இடம்பெற்றிருக்கிறது. இத்திருமணத்திற்கு சென்ற தமிழுணர்வாளர்கள் பலர் பாராட்டிச் சென்றுள்ளனர். குறிப்பாக இரா.யனார்தனம் பெரும் கவிக்கோவின் மகன் கவிஞர் திருவள்ளுவர் அவர்களும் இன்னும்பலரும்  கலந்து கொண்டு வாழ்தினர். பாண்டுச்சேரியைச்சேர்ந்த பேராசிரியர் கதிர்முத்தையன் அவர்கள் தமிழியத்திருமணமான திருக்குறள் நெறித்திருமணத்தினை கட்டொழுங்கான முறையில் திருக்குறள் ஓதி. மணமக்களின் மனஏற்பு வாசகங்கள் இடம்பறச்செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து மங்கலநாண் அணியும் நிகழ்வு மனநிறைவாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பெரியோர்களின் வாழ்துரைகள் இடம்பெற்றன. அய்ரோப்பாவில் வாழும் இலங்கைத்தமிழர்களிடம் பார்பணமோகம் மேலோங்கி இருக்கும் காலத்தில் அய்ரோப்பாவிலிருந்து தமிழகம் வந்து தமிழகத்தினரே வியக்கும் வண்ணம் இந்ததமிழியத் திருமணம் நிகழ்ததாக பலரும் வாழ்த்துரையில் பாராட்டிப் பேசினார்கள்.தமிழியத்திருமணம் செய்து கொண்ட கெங்காகுலரத்தினம் கெயிந்தன். இராசேந்திரம் காந்தவேணி.இணையரை குமரிநாடு இணையமும் வாழ்த்தி நிற்கிறது.இதற்கான வேண்டுதலை மலேசியத்தமிழர்களினுாடாக  கதிர்முத்தையன் அவர்களுடன் சுவிசிலிருந்து தொடர்பு கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு திருமணத்தைச் சிறப்பாக நடத்தித்தந்த திரு.பேராசிரியர் கதிர்முத்தையன் அவர்களுக்கு மணக்களின் உறவினர்களும் நண்பர்களும் பிரான்சு சுவிசிலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள். கலகலப்புகளில்லாது. கொள்கைவழி தமிழியவிடயங்களை உலகெங்கும் சாதிப்போம் உலகில் தமிழை உயர்த்துவோம் ஆரியக்கலப்பை திணிப்பை தமிழ்ப்பண்பாட்டு அழிவைத்தடுப்போம்  பல்லவிகள்படபடப்புகள் இல்லாது  காரியங்கள் சாதிப்போம்  ஊடகங்களில் அல்ல. உண்மையாகச் செயல்படும் இளைய தலைமுறையினருக்கு வாழ்துக்களை குமரிநாடு தெரிவித்து நிற்கிறது..

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.