குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களை அவமதித்தால், புகலிடம் கிடைக்காது’சுவிசு சட்ட அமைச்சர் கடும் எச்சரிக்க

17.01.2016-எந்தவகையிலாயினும் அவமதித்தவர்களையும் ஏற்கனவே  ஏற்றுக்கொண்டவர்களாகினும் நடவடிக்கை எடுக்கலாம்.சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களிடம் அவமரியாதையாக நடந்துக்கொள்ளும் புலம்பெயர்ந்தவர்கள் அந்நாட்டில் தஞ்சம் கோரும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என சுவிசு சட்ட அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவிசின் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga இன்று பேர்ன் நகரில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது,யேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் புத்தாண்டு தினத்தில் பெண்களிடம் புலம்பெயர்ந்தவர்கள் அநாகரீகமாக நடந்துக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த நாடாக இருந்தாலும், பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற ஒழுக்கம் தான் முக்கிய நோக்கமாக கருத வேண்டும்.

இந்த அணுகு முறையில் எந்த தவறு நடந்தாலும், அதற்கு விதிவிலக்கு, மன்னிப்பு என எதுவும் கிடையாது.

பெண்களை ஆண்கள் நிச்சயம் மதித்து மரியாதை செலுத்த வேண்டும். இதை தான் பெண்களும் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஆண்கள் இதனை செய்வதில்லை.

அதே சமயம், சுவிசு நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு உள்ளூர் பெண்களின் பண்பாடு, நாகரீகம், பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை அவர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தால், பெண்கள் மீதான வன்முறையை தடுக்கலாம். ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டால், அவர்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என Simonetta Sommaruga கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தில் யேர்மனி மற்றும் சுவிசு நாடுகளில் பெண்கள் மீது கொடூரமான முறையில் பாலியல் தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த சம்பவத்தில் புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.