குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு?- பிரித்தவனே அழித்தவனே அழைத் திருக்கின்றான்.

  18.08.2011 த.ஆ.2042-இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு?-  இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் ஏற்படத் தொடங்கி உள்ளன.அழிந்த இயக்கங்களுக்கு வலுசேர்ப்பதாக  எண்ணுவது தவறு சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழர்கள் ஒன்றாவோம். வடககு கிழக்கைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஏழு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சர்வதேச அபிவிருத்திக்கான மனித உரிமை அமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் இந்த கருத்தரங்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ரெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கருத்தரங்கில் தங்களது பிரதிநிநிதிகளை அனுப்பி வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாகத் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
 
இலங்கை அரசுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பாகத் தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையின் அரசதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய அரசியல் தலைவர்களுடனான ஒரு சந்திப்பாக இந்தக் கூட்டம் இருக்கும் என்றார்.இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், போர் முடிந்த பின்னரும் தமிழருக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிக்கும் கொழும்பின் போக்கு என்பவற்றால் இந்தியாவின் ஆளும் காங்கிரசு தலைமையிலான அரசுக்கு எதிர்க் கட்சிகளால் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
 
அதேவேளை, இலங்கை அரசு சீனா பக்கம் அளவுக்கு அதிகமாகச் சாய்கிறது என்று புதுடில்லி நம்புவதால், 80களைப் போன்று அது மீண்டும் இனப்பிரச்சினை விடயத்தில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளத் தயாராகிறது என்று சென்னையில் உள்ள அரசதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
 
இதன் முதற்கட்டமாக தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் தீர்வு தொடர்பான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த புதுடில்லி விரும்புகிறது என்றார் அவர். அதற்காகவே தமிழ்க் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.'தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார்'' என்று உதயனுக்குத் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
 
எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இரு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அழைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உத்தியோகபூர்வ அழைப்பு இன்னும் அனுப்பப்படவில்லை.
 
தமிழரசுக் கட்சியில் இருந்து மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியில் இருந்து வரதராயப் பெருமாள் மற்றும் சுகு, சுரேச் அணியில் இருந்து சுரேச் பிரேமச்சந்திரன்,   சிவசக்தி ஆனந்தன்  ஆகியோரும் ரெலோவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன், புளொட் சித்தார்த்தன், ஈஎன்டிஎல்எவ் பரந்தன் ராயன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரியவருகிறது. முதல்நாள் கூட்டத்தில் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை இந்திய அரச பிரதிநிதிகள் கேட்டறிவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 
முதல்நாள் அமர்வில் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தீர்வு தொடர்பில் எமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று நினைக்கிறோம். அனைத்துக் கட்சியினரும் இணக்கப்பாடான கருத்துக்களைத் தெரிவிப்பது நன்மையளிக்கக்கூடும். இரண்டாம் நாள் அமர்வில் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைக்கும்  என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
 
இந்தியா செல்வதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துக்கும் இடையில் தீர்வு தொடர்பான பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உள்ளூராட்சி சபைகளில் வெற்றிபெற்ற தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நடைபெறும் 20ஆம் திகதி, கட்சித் தலைவர்கள் இது பற்றிக் கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிகிறது. இந்தியா செல்வதற்கு முன்னர் பொது இணக்கப்பாடு பற்றிய புர்ந்துணர்வு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மத்தியில் எட்டப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.