குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

கடவுளின் பெயரால்விபச்சாரம் இந்துசமயத்தின் சடங்கு

 18.08.2011.த.த.ஆ.2042-- இந்தியாவில் தேவதாசி முறைமை. இந்து சமயம் தமிழர்சமயம் அல்ல தமிழர்வேறு இந்தியர் வேறுஎன்பதை வெளிநாடுகளில் புட்டுவைக்கவிட்டால் தமிழர்களை மதிக்கமாட்டார்கள். சமூக பாரம்பரிய முறைமைகள், சமய வழக்காறுகள் ஆகியன தொன்று தொட்டு நின்று நீடித்து நிலைத்து வருகின்ற ஒரு நாடு இந்தியா ஆகும். இங்கு மிகவும் பழைமையான சமய நடைமுறைகளில் ஒன்றுதான தேவதாசி முறைமை. தேவதாசி என்பதற்கு கடவுளின் அடிமை என்று அர்த்தம். கடவுள் அல்லது உள்ளூர் தெய்வத்த்துக்கு மணப் பெண்ணாக தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் அமையப் பெற்று உள்ளது தார்வாட் நகரம். இந்நகரத்தில் Saundatti என்று ஒரு கிராமம் உண்டு. இங்கு ஜெல்லம்மா என்கிற தெய்வத்துக்கு ஒரு சிறிய கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு உள்ளது. சிறுமிகள் காலம் காலமாக ஆனால் இரகசியமாக ஜெல்லம்மா தெய்வத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றனர். இச்சிறுமிகள் வேறு யாரையும் திருமணம் செய்கின்றமை முடியாது.குடும்பத்துடன் தொடர்பு வைத்து இருக்க முடியாது.

ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள் , நகரத்திலும் ஊரிலும் பணம், பிரதாபம் ஆகியன உள்ள பெரிய மனிதர்கள் போன்றோருக்கு இச்சிறுமிகள் சேவையாற்றுதல் வேண்டும். பாலியல் திருப்தியை கொடுக்க வேண்டும். இது தெய்வத்துக்கு செய்கின்ற திருத்தொண்டாகவே கொள்ளப்படுகின்றது. இத்தேவதாசிகள் ஆலயமே கதி என்று வழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியமைதான். தப்பிச் செல்ல முடியாது.

தப்பிச் செல்ல முயல்கின்றவர்களை சமுதாயம் மன்னிக்காது, ஏற்றுக் கொள்ளாது. தேவதாசி முறைமை பெண்கள் மீதான சுரண்டலுடன் சம்பந்தப்பட்டது. பொருளாதா மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய சிறுமிகள் விபச்சாரத்தில் கடவுளின் பெயரால் ஈடுபடுத்தப்படுகின்றார்கள். இச்சிறுமிகள் தலித் என்று சொல்லப்படுகின்ற தீண்டத் தகாத சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேவதாசி முறைமை பகிரங்க விபச்சாரம் ஆகும்.

அறியாமை மற்றும் வறுமையில் வாடுகின்ற பெற்றோர் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் பிள்ளைகளை கடவுளுக்கு தாரை வார்க்கின்றார்கள். தேவதாசிகள் கன்னித் தன்மையை வயதான ஒருவருக்கு அர்ப்பணிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தேவதாசியாக செயல்படுகின்றமை மூலம் பெண்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற பணம் பெற்றோரைச் சென்றடைகின்றது. ஒரு விதத்தில் கூட்டிக் கொடுப்பவர்களாக பெற்றோர் செயல்படுகின்றனர்.

இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கையின்படி தேவதாசி முறைமை பணம் சம்பாதிக்கின்றமைக்கான பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளில் ஒன்றாக அண்மைய காலங்களில் நவீனத்துவம் அடைந்து உள்ளது. தேவதாசிப் பெண்கள் நகரங்கள், தூர இடங்கள் ஆகியவற்றுக்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள். இங்கு 45.9 சதவீதமான தேவதாசிப் பெண்கள் விபச்சாரிகள் ஆவர். தேவதாசிகள் பிச்சை எடுக்கின்றமையையும் காண முடிகின்றது.

தென்னிந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேவதாசி முறைமையை காண முடிகின்றது. 1934 ஆம் ஆண்டு தேவதாசிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தேவதாசி முறைமையை தடை செய்கின்றது. இச்சட்டத்துக்கு 1980 களில் மீண்டும் உயிர் ஊட்டப்பட்டது.

ஆனால் இச்சட்டம் ஒவ்வொரு நாளுமே மீறப்படுகின்றது. தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்றமைக்கு துணை புரிபவர்கள் அல்லது தேவதாசியாக சிறுமியை ஆக்குகின்ற சடங்குக்கு செல்பவர்கள் இரு வருட சிறைத் தண்டனையுடன் அதிக பட்சம் இந்திய ரூபாய் 2000 அபராதமாக விதிக்கப்படுகின்றமைக்கு உரித்து உடையவர்கள். சிறுமியை தேவதாசி ஆக்குகின்றனர் என்று குற்றவாளிகளாக காணப்படுகின்ற பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிக பட்சம் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகின்றது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.