குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

கோதபாயவை தூரவிலக்கி வைக்க வேண்டும்- மகிந்தவின் நண்பரான இந்து பத்திரிகை ஆலோசனை!

 17.08.2011-இந்த ஒரு கருத்துக்காக மட்டுமே கொதபாய ராயபக்சா மீது நடவடிக்கை எடுக்க முடியும்’சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபச்ச தனது சகோதரர் கோதபாய ராசபச்சவை தூர விலக்கி வைக்க வேண்டும் என சென்னையிலிருநது வெளியாகும் ‘இந்து’ நாளிதழ் தனது ஆசிரிய தலையங்கத்தில் மகிந்த ராசபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் மகிந்த ராசபக்சவின் நெருங்கிய நண்பராவார்.

மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சிக்கப்பட்டு வரும் இந்து பத்திரிகை கோதபாய ராயபக்ச இந்தியா கொட்லைன்சு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தொடர்பாக ‘கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் ஒரு சகோதரர்’ என்ற (A brother out of control) தலைப்பில் எழுதிய ஆசிரிய தலையங்கத்தின் இதனை தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு தோற்கடித்த சிறிலங்கா அரசாங்கம் சில முக்கிய பிரச்சினைகளிலிருந்து வெளிவர சிரமப்படுகின்றது.

ஒன்று- சமாதானத்தின் தன்மை,
பெரும்பான்மை சிங்களத்திற்கும் சிறுபான்மை தமிழர்க்கும் இடையே அரசியல் நல்லிணக்கம் ஒன்றைக்காணுவதாகும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியானது சனாதிபதி ராயபக்சவிற்கு பாராளுமன்றத்தில் பலத்தை வழங்கியிருக்கின்றது. போரிற்கு முன்னதாக இருந்து வரும் தமிழ் மக்களின் மனக்குறைகளுக்கும் 30 ஆண்டு கால போரின் ஏற்பட்ட காயங்களை தீர்க்க்ககூடியதானதுமாக அமையும் முன்னேற்றமான அரசியல் வரைவு ஒன்றை முன்வைக்கும் வாய்ப்பை என்றுமேயில்லாத ஒரு வாய்ப்பை- அவரின் அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின்போது சிறிலங்காவுடன் நின்றிருந்த சிறிலங்காவின் நண்பனான இந்தியாவிற்கு இது அக்கறையான ஒன்றாக கருதப்படுகின்றது.

இரண்டாவது- 2009 இல் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்ட நிகழ்வில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சனல் 4 ஆவணப்படம் மற்றும் ஐநா நிபுணர் குழு அறிக்கை ஆகியனவாகும். இரண்டும் சிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளன.  நன்றாக தெரிந்தும் சிறிலங்கா இராணுவம் சிவிலியன்கள் மீது சுட்டு ஆயிரக்கணக்கானவர்களை கொன்றதாகும். சிறை பிடிக்கப்பட்டவர்களை படுகோலை செய்தது மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படத்தியது ஏனைய குற்றச்சாட்டுக்களாகும்.

சரியான உணர்வுடன் இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யாமல் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்பதவி வகிக்கும் அதிகாரியான பாதுகாப்பு செயலாளர் கொதபாயா, (சனாதிபதியின் சகோதரர்) தற்போதைய சூழ்நிலையை மேலும் சீர்குலைக்கும் முகமாக வரம்புக்கு மீறிய தன்னடக்கமற்ற முறையில் முதலமைச்சர் யெயலலிதா மீது அவரின் உள்நோக்கத்துடன் கூடியதாக தமிழ்நாடு சட்ட சபையில் சிறிலங்கா பற்றி
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

கெட்லைன்டசு ருடேயில் தெரிவிக்கப்பட்ட கொதபாயா ராயபக்சாவின் கருத்துக்கள் தமிழ் சிறுபான்மையினரின் மீதான கவலையைத்தருகின்ற இகழ்ச்சியாக அமைகின்றது.

தற்போது நடைபெற்றுவரும் அரசியல் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை குப்பைக்கூடைக்குள் வீசுவதாக அவரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையை ‘பொருத்தமற்றது’ என்றும் ‘ நாம் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம்’ என்றும் ‘ 13 ஆவது அரசமைப்பு திருத்த சட்டத்தை தயாரிப்பதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் சம்பந்தப்படவில்லை’ என்றும் ‘ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அரசமைப்புச்சட்டத்தை மேலும் திருத்த வேண்டிய தேவை இல்லை’ என்றும் தெரிவித்திருக்கின்றார்.

உணர்வுபூர்மான பயணங்களில் கொதபாய ராசபக்ச தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்து சனதிபதி ராசபக்ச தூர விலகிக்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றோம்.

இவ்விடயங்களில் கருத்துத் தெரிவிக்க கொதபாய ராயபக்சிவிற்கு உரிமையில்லை.   சனல்  4 க்காக பேட்டி கண்ட பிரித்தானியாவாசியான கவர்ச்சிகரமான அப்பெண் எப்படி கற்பழிக்கப்படாமல் அல்லது கொல்லப்படாமல் எவ்வாறு சிலங்கா படையினரிடமிருந்து தப்பினார் என்பது உண்மையாக இருக்கமுடியாது என்று கொதாபாய ராயபக்ச தெரிவித்த அவமதிக்கும் கருத்து இதில் அடங்குகின்றது. இந்த ஒரு
கருத்துக்காக மட்டுமே கொதபாய ராயபக்சா மீது நடவடிக்கை எடுக்க முடியும்’

இவ்வாறு ‘இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.