குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

சீனாவும் இலங்கையும் நல்லநண்பர்கள். இந்தியாவும் இலங்கையும் நரித்தந்திரநட்பு

15.08. 2011 பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர் இலங்கை சனாதிபதி மகிந்த ராசபட்சகடந்த வாரம் மீண்டும் சீனா சென்றிருந்தார். சனாதிபதி பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் சீனாவுக்குப் பல தடவைகள் பயணம் மேற்கொண்டிருந்தமை தெரிந்ததே. ஓவ்வொரு பயணத்தின் போதும் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவது வழமையான ஓர் அம்சமாகவே இருந்து வருகிறது.
 
ஆனால், இம்முறை சற்று வித்தியாசமானதாகவே அவரது பயணத்தின் நோக்கம் அமைந்திருந்தது.அரசதந்திர ரீதியான சந்திப்பு, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல் என்ற வழமையான விடயங்களுக்கு அப்பால் இம்முறை மேலும் ஒன்று சனாதிபதி மகிந்தவின் இந்த பயணத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
 
அதாவது, சீனாவின் தலைநகர் பீயீங்கிலுள்ள சர்வதேச கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகத்தினால் சனாதிபதி மகிந்த ராயபக்சவுக்குக் கௌரவ கலாநிதி பட்டமும் இந்த பயணத்தின் போது வழங்கப்பட்டுள்ளது.
 
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமை பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததமைக்காக மட்டும் இந்தப் பட்டம் சனாதிபதி மகிந்தவுக்கு வழங்கப்படவில்லை.
 
இலங்கையில் அனைத்து இன மக்களும் வாழ்வதற்கேற்ப சூழலை உருவாக்கியமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புறவை கட்டியெழுப்பியமை ஆகிய நடவடிக்கைகளையும் பாராட்டும் வகையிலுமே சனாதிபதிக்கு இந்த கலாநிதி பட்டம் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சீனாவில் அவர் ஆற்றிய உரை கூட அவரது பயணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பின்னணியையும் தெளிவாக வெளிக்காட்டி நின்றது.
 
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது வழங்கிய ஒத்துழைப்புக்காக இலங்கை மக்கள் சீனாவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக சனாதிபதி மகிந்த ராசபட்ச அங்கு தெரிவித்திருந்தார். பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து துரித பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
 
இதன் மூலம் இரு விடயங்களை அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். போரின் போது அன்று சீனா வழங்கிய ஒத்துழைப்பும் இன்று உள்ளுர் அபிவிருத்திக்காக அது வழங்கி வரும் உதவிகளுமே அந்த இரு விடயங்களுமாகும்.
 
சீனா இலங்கையின்; அபிவிருத்திக்குத் தாராளமாக உதவுகிறது என சனாதிபதியும் இலங்கை அரசும் தெரிவித்தாலும் அப்படி அல்ல.. போரிற்கு உதவிய சீனா இப்போது இலங்கையில் காலூன்றும் சுயநல நோக்குடனேயே இலங்கைக்கு உதவி வருகிறது என்பதே உள்ளுர் அரசியல்வாதிகளின் கருத்தாகவுள்ளது.
 
இது இவ்வாறிருக்க, சனாதிபதி மகிந்தவின் சீன பயணமானது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிடிக்கவில்லை போல்தான் தோன்றுகிறது.சனாதிபதி மகிந்தவின் சீன பயணம் தொடர்பில் புதுடில்லி அதிருப்தி கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னர் ஒத்தி வைக்கப்பட்ட  இலங்கை விடயம் தொடர்பிலான விசேட விவாதத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி இந்தியாவின் ராச்ய சபா மற்றும் லோக் சபா ஆகியவற்றில் விவாதத்துக்கு எடுத்தே தீருவது என எடுக்கப்பட்ட தீர்மானமும் சனாதிபதி மகிந்தவின் சீன பயணத்தின் எதிரொலியே எனவும் பேசப்படுகிறது.
 
அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணையை இலங்கை சந்திக்க நேரிடும் என ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் மீண்டும் கடுந்தொனியில் தெரிவித்துள்ளது கூட சனாதிபதி மகிந்தவின் சீன பயணத்தின் பின்னரே என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இது இவ்வாறிருக்க, இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் ஏதாவது தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அதனை சீனா தனது இரத்துரிமை அதிகாரத்தைப் (வீட்டோ பவர்) பயன்படுத்திச் செயலிழக்கச் செய்யும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
எது எப்படி இருப்பினும் சனாதிபதி மகிந்த ராசபட்ச பலமுறை சீனாவுக்குச் சென்றிருந்தாலும் இறுதியான இந்த விஜயமானது மிக முக்கியத்துவம் கொண்டதாகவே கருதப்படுகிறது. உள்ளுரிலும் சர்வதேசத்திலும் சிறிலங்கா அரசு மீது எழுந்துள்ள அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் அவரால் மேறகொள்ளப்பட்ட ஒரு துணிச்சல் மிக்க பயணம் என்ற இதனைக் கூறலாம்.
 
 
மன்னாரில் எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட தினத்தன்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராயபட்ச சிலாபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார்.
 
மன்னாரில் எண்ணெய் அகழ்வு வேலைகள் ஆரம்பமாகி விட்டன இனி எமது நாட்டின் மீதான மேற்கத்தேய நாடுகளின் பிடி இறுகும். அவ்வாறு ஏற்பட்டால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என அவர் மிகுந்த வேதனையுடன தனது கவலையையும் வெளியிட்டிருந்தார்.
 
அமைச்சர் பஸில் ராயபக்ச இவ்வாறு தெரிவித்து மறுநாளே சிறிலங்காவின் வான் பரப்புக்குள் சுமார் பத்து அமெரிக்க யுத்த விமானங்கள் அத்துமீறி நுழைந்து விட்டன என்ற செய்தி கடந்த வார இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
 
இலங்கை வான் பரப்புக்குள் அமெரிக்க போர் விமானங்கள் பறந்தன என்பதனை  சிறிலங்கா வான் படை உறுதிப்பட அடித்துக் கூறியிருந்த நிலையில், இலங்கையின் சிவில் விமான சேவைகள் அமைச்சரான பிரியங்கர ஜயரத்ன கடந்த புதன்கிழமை இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார். இலங்கை வான் பரப்புக்குள் அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது பொய் என ஒரேடியாகத் தெரிவித்திருந்தார். 
 
இலங்கையின் வான்பரப்புக்கு மேலாக எந்தவொரு வெளிநாட்டு விமானமும் ஊடுருவவில்லை குறித்த விமானங்கள் சர்வதேச வான்பரப்பிலேயே பறந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
 
ஆனால், சிறிலங்கா விமானப் படையோ..இல்லை..இல்லை எமது நாட்டின் வான் பரப்புக்குள்தான் அந்த விமானங்கள் பறந்தன அடித்துக் கூறி ஒற்றைக் காலில் நிற்கிறது.
 
எமது வான் பரப்புக்குள் பறந்து கொண்டிருந்த விமானமொன்றை நாம் கண்டோம் என்பதே எமது நிலைப்பாடு என விமானப் படையின் பேச்சாளரும் குரூப் கெப்டனுமாகிய அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கெப்டன் விஜேசூரிய, நாம் எமது வான் பரப்புக்கு அப்பாலும் கவனித்து வருகின்றோம். எமது ராடார்களினால் இயன்றளவுக்கு நாம் அவதானிக்கின்றோம்  என்றார்.
 
ஆக, அமெரிக்க யுத்த விமானப் பறப்பு என்பது இன்று அரசு இயந்திரத்துக்குள்ளேயே முரண்பாடான கருத்துகளைத் தோற்றுவித்துள்ளன.
 
பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விமானப் படை ஒரு கருத்தினையும் விமான சேவைகள் அமைச்சர் ஒரு கருத்தினையும் தெரிவித்து வருவதால் பொதுசனத்தார் இதில் எதனை நம்புவது என்ற குழப்படியான நிலை உருவாகியுள்ளது.
 
இவ்வாறானதொரு நிலையில் இவ்விடயம் குறித்து ஆரம்பத்தில் மௌனம் காத்த அமெரிக்கா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அமைச்சரின் கருத்தே தமக்குச் சாதமாக இருப்பதானால் அதனை ஒரு சந்தர்ப்பமாகவே பயன்படுத்தி தங்களது யுத்த விமானம் எதுவுமே இலங்கை வான்பரப்புக்குள் அத்துமீறிப் பறக்கவில்லை என்று திட்டவட்ட அறிவிப்பைச் செய்து தனது பக்கத் தலையிடிக்கு மருந்தை சிறிலங்கா அரசு தரப்பிலிருந்தே பெற்றுக் கொண்டது.
 
ஆனால், அமெரிக்கா  இரண்டு விடயங்களைச் சூசகமாகச் சிறிலங்கா அரசுக்குச் சொல்லி உள்ளது.
 
அமெரிக்காவின் விமானம் தாங்கிகள் கப்பலான, யு.எஸ்.எஸ் றொனாலட் ரேகன் அல்லது அதிலுள்ள விமானம் இலங்கையின் கடல் அல்லது வான் பாரப்பை அணுகவில்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்ததன் மூலம் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலொன்று இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடல் எல்லையில் நிலை கொண்டுள்ளது என்பதே அதன் முதல் செய்தி
 
இலங்கை விமானப்படை தனது வான் பரப்புக்கு வெளியேயும் கண்காணித்து வருகின்றது. இதன்போதே விமானம் தாங்கிக் கப்பலின் விமானத்தை அவதானித்திருக்கலாம் என்று இலங்கையின் வான் படையின் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கூரிய அவதானிப்பைச் செலுத்தி வருவதனையுமே இரண்டாவது செய்தியாகவும் அது கூறியுள்ளது
 
இந்த விடயம் அரச மற்றும் அமெரிக்கத் தரப்புடன் முற்றுப் பெறுமா என்ன? சிறிலங்கா அரசியல் கட்சிகளுக்கு இந்த விடயமும் வாய்க்குக் கிடைத்த அரிசிதானே?
 
அமெரிக்க யுத்த விமானங்கள் சிறிலங்காவின் வான்பரப்புகள் நுழைந்தமையானது சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்க அரசுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என ஜே.வி.பி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.
 
2007 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்க அரசுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அந்த விமானங்கள் இவ்வாறு பறந்திருக்க முடியும். ஆகவே, இந்த ஒப்பந்தம் தொடர்பில் தற்போது சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அத்துமீறல் சம்பவம் சம்பவம் குறித்து உண்மையான விசாரணைகளை மேற்கொண்டு அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். என்று 2007 ஆம் ஆண்டின் சிறிலங்கா – அமெரிக்க ஒப்பந்தத்தையே நடுத் தெருக்வுக்குக் கொண்டு வந்துள்ளது ஜே.வி.பி.
 
நாட்டுக்குள் அத்துமீறி அமெரிக்க யுத்த விமானங்கள் பறப்பதனை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட  சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா?
 
பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா இலங்கையை வேவு பார்க்கின்றது. எனவே,அரசாங்கம் படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். அது மட்டுமன்றி, உள்ளுர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாகக் கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்து இன்று நாட்டையே உலுப்பி விட்டு வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தள்ளது.
 
அத்துடன் நின்று விடுமா சிறிலங்காவின் தேசப் பற்றாளர்களைக் கொண்ட முன்னணி? இல்லவே இல்லை..
 
போரிற்ற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே உள்ளது குறிப்பாக அமெரிக்கா இலங்கை விடயத்தில் மிகவும் தீவிரமாகவே செயற்படுகின்றது.
 
அமெரிக்க இராயங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவின் விஜயத்தின் போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். தற்போது ஆசிய பசுபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் 7 ஆவது விசேட கூட்டுப் படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் ஊருவிச் சென்றுள்ளன. இந்த ஊருவல் முதல் தடவையாக இடம் பெற்றதாக கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவைகள் மிகவும் மர்மான முறையில் அமெரிக்க விமானங்கள் வேவு பார்த்துள்ளமை தெரிய வந்துள்ளது.
 
எனவே அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் உஷார் நிலையில் இருக்க வேண்டும். இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவினால் எப்போதும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போட்டுள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கழுத்துக்கு மேல் இப்போது கூரிய கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. கத்தி அவரை வந்து வெட்டுவதும் அல்லது வெட்டுப்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும் இப்போது அவரது கைகளின்தான் தங்கியுள்ளது
 
பிரித்தானியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் அவருக்குக் கட்சி மட்டத்தில் வழங்கப்பட்ட வரவேற்போ அலாதியாகத்தான் இருந்தது. ஏன்தான் பிரித்தானியாவிலிருந்து திரும்பி வந்தோமோ என்று ரணிலை நினைக்கச் செய்யும் அளவுக்கு அந்த வரவேற்பு அமைந்திருந்தது.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் உயர்பீடத்தைச் சேர்ந்த பலரும் ரணில் விக்கிரமசிங்கவை சேர்..சேர் போட்டே கடந்த காலங்களில் அழைத்து வந்தனர். ஆனால் இப்போதோ மிஸ்டர் ரணில் விக்கிரமசிங்க என்று விழிக்கும் அளவுக்கு நிலைமை மாறிப் போயுள்ளது. அதாவது ரணிலின் இன்றைய நிலைமை தலைக்கு மேல் கத்தி மட்டுமல்ல.. வெள்ளம் போன நிலைதான்.
 
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றக்குழுக் கூட்டம் இடம்பெற்றது. அப்போது அங்கு காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன் காரணமாக ரணில் திக்குமுக்காடிப் போய்விட்டார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்றதால் அன்றைய பாராளுமன்ற அமர்வுகளைக் கூட அவர்கள் மறந்துவிட்ட நிலையிலேயே இருந்தனர்.
 
சம்மேளனத்தை உடனடியாகக் கூட்டி கரு ஜயசூரியவை தலைவராக நியமிக்க வேண்டுமென கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ எம்.பி. அங்கு பிரேரணை ஒன்றினை முன்வைத்தார்.
 
கட்சிக்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சி கண்டுள்ளதோடு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் கட்சிமீது நம்பிக்கையை இழந்துள்ளனர். அத்தோடு பல தேர்தல்களில் போட்டியிட்டு தோல்விகளையும் சந்தித்துள்ளோம். இவ்வாறான நிலையில் கட்சிக்குப் புதிய தலைமைத்துவம் அவசியமானதாகும். என சஜித் எம். பி தெரிவித்திருந்தார். சஜித்தின் இந்த ஆலோசனையை ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. உடனேயே வழிமொழிந்திருந்தார்
 
அப்போது கருத்துத் தெரிவித்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பிலான பிரேரணையினை முன்வைக்க முடியாது. அவ்வாறானதோர் பிரேரணையை கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே முன்வைக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.
 
இவ்வாறு அவர் தெரிவித்ததுதான் தாமதம் கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பிக்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு ரணிலுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.  எதிர்பாராத சொற்கணைகளால் திக்கு முக்காடிப் போன ரணில் எதனைப் பேசுவது என்று தெரியாமலேயே தடுமாறியுள்ளார்.
 
இனியும் சமாளிக்க முடியாத என்ற நிலையில்  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இருப்பினும் இவர்கள் மூவரையும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மீண்டும் உள்ளே அழைத்து வந்துள்ளார்.
 
இப்படியெல்லாம் கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கலவரம் வெடித்தும் ரணில் விக்கிரமசிங்கவோ இன்றுவரை எதற்கும் மசியாமலேயே உள்ளார்.
 
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, சஜித் பிரேமதாச தரப்பினர் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர். தலைமைத்துவப் பிரச்சினைக்கு இந்த வருட இறுதியில் தீர்வு காண முடியும் என ரணில் தெரிவித்த யோசனையை சஜித் தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக விலக வேண்டும் என்பதே சஜித் பிரேமதாச உள்ளிட்டோரின் விடாப்பிடியான கோரிக்கையாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக வேண்டுமென்றால் ரணில் இருந்து போகட்டும்;. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக அவர் இருக்க முடியாது. எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் எமது கட்சித் தலைவர் கரு ஜயசூரியவே எனவும் சஜித் அடித்துக் கூறியுள்ளார்.
 
இது ஒரு புறமிருக்க, ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமாச் செய்வதே அதாவது பதவி விலகுவதே நல்லது என்பதே இலங்கை அரசியல் நோக்கர்கள் பெரும்பாலானோரின் அபிப்பிராயமாக உள்ளது. வெளியேறாவிட்டால் அவர் நிச்சயம் வெளியேற்றப்படும் நிலையே கட்சிக்குள் காணப்படுவதால்; அது அவருக்குப் பெருத்த அவமானமாகவே முடிந்து விடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் கட்சியின் வளர்ச்சி, கட்சிக்கான தனது அர்ப்பணிப்பு குறித்து அவர் ஒரு சுயவிமர்சனத்தைத் தனக்குள்ளேயே செய்யத் தவறியதன் விளைவாகவும் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது என்றும் கூற முடியும்.
 
இலங்கையின் கடந்த வார அரசியல் பூகம்பத்தில் கிறீஸ் பூதங்களும் கணிசமான பங்கை எடுத்துக் கொண்டன. முழு நாட்டையுமே இன்று உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த கிறீஸ் பூதங்களால் இலங்கை மக்கள் இரவில் தூக்கம் விழிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. கஹவத்தையில் வயயோதிபப் பெண்களின் படுகொலைகளுடன் ஆரம்பித்த இந்த அட்டகாசம் இன்று யாரையும் நிம்மதியாக இருக்க விடவில்லை.
 
மர்ம மனிதர்கள் என்று ஒரு தரப்பினரால் கௌரவமாக அழைக்கப்படும் இந்தக் கிறீஸ் பூத ஆசாமிகள் விவகாரம் இன்று அரசியலுக்குள்ளும் நுழைந்து விட்டது. இந்த விடயத்தில் அரசியல் பின்னணி உள்ளதாகவே பொதுசனத்தார் அடித்துக் கூறும் அதேவேளை, இல்லை..இல்லை அரசாங்கத்தைச் சங்கடப்படுத்துவதற்காக ஒரு சாரார் மேற்கொள்ளும் திட்டமிட்ட சதி என்கிறது அரசு தரப்பு.
 
இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில்  பொதுமக்கள், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையங்களைத் தாக்கினால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அண்மைய நாட்களில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பாக அப்பாவிகளும் பொலிஸாரும் பொதுமக்களால் தாக்கப்படும் சம்பங்களை நாம் கண்டுள்ளோம். இத்தகைய நடவடிக்கையை மக்கள் எதிர்காலத்தில் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நாம் கடும் நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
 
நாட்டின் பல மாவட்டங்களிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் பீதியடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹக்கீம், கிறீஸ் பூத அச்சத்தைக் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும்படி அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி விடுத்த அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் பாகாப்புச் செயலாளருடன் தொடர்பு கொள்ள நீதி அமைச்சர் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
 
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயம் குறித்து உள்ளுர் ஊடமொன்றுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்
 
 
ஆனால் ஜே.பி.வி இந்த விவகாரம் குறித்து என்ன கூறுகிறது தெரியுமா? துட்டகெமுனு மன்னனின் வாளைத் தேடும் அரசின் முயற்சியே இது என்கிறது.
 
அத்துடன் மலேசியாவிற்கு சென்று கே.பியை பிடித்து வர முடியுமென்றால் உள்ளுரில் நடமாடும் மர்ம மனிதர்களை அரசாங்கத்தால் பிடிக்க முடியாதா? என்று கேள்வியெழுப்பியுள்ள ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அரசாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இவை ஒரு புறமிருக்க, மர்ம மனிதர்கள் என்று கூறப்படும் பலரும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நாம் பிடித்துக் கொடுத்தாலும் பொலிஸார் அவர்களை விட்டு விடுகின்றனர் என்கிறனர் பொதுசனத்தார்.
 
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மலையகம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் மக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்ட இந்த மர்ம மனிதர்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தால் மறுகணமே அவர்கள் விடுவிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த மர்ம மனிதர்கள் தொடர்பில் பொலிசாருக்குத் தகவல் கொடுத்தும் பொலிசார் வருவது இல்லை என்பதும் அவர்களது மனக்குறை. அது மட்டுமல்ல. தம்மால் பிடித்து வைக்கப்பட்டவர்களை பொலிஸார் வந்து அழைத்துச் சென்று பின்னர் விடுவிக்கின்றனர் என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு
 
தம்மைப் பயமுறுத்தும் அல்லது சேட்டைக்கு உட்படுத்த முயற்சிக்கும் இந்த கிறீஸ் பூதங்களைப் பிடிக்கச் சென்றால் அவர்கள் பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து கொள்கின்றனர் என்றும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் காரணமாக இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பொலிசாருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். இதனையடுத்து இருதரப்புக்குமிடையிலும் கைகலப்பு, கண்ணீர்ப் புகை மற்றும் குண்டாந்தடிப் பிரயோகம் என்று தொடர்கிறது.பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கிறீஸ் பூதங்களால் பாதிக்கப்பட்ட பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சொத்துகளுக்கு நிறையவே சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 
இதேவேளை, நாட்டின் 21 பிரதேசங்களில் இவ்வாறான கிறீஸ் பூதங்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இவை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் அவ்வாறான பூதங்கள் எதுவும் கிடையாது என்பது தெளிவாகியுள்ளது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர், போதை பொருள் பாவனையாளர்கள், மனநோயாளிகள் உள்ளிட்டவர்களே இவ்வாறு பூதங்களாக மாறி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இவற்றுக்கு எல்லாம் மேலாக இன்னொரு விடயம் என்ன தெரியுமா? பாராளுமன்ற உறுப்பினர் ராதா கிருஷ்ணனின் வேண்டுகோள்தான் அது
 
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளை பெரிதும் அச்சத்துக்கு உள்ளாக்கி வரும் மர்ம மனிதர்களினால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது ஏதோ உண்மைதான். ஆனால் அதற்காக இராணுவத்தினரையோ அல்லது விசேட அதிரடிப் படையினரையோ ஈடுபடுத்த வேண்டாம் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
 
உண்மையில் இவ்வாறெல்லாம் செயற்படுவோர் அரசியல் பூதங்களா அல்லது மனநோயாளிகளான பூதங்களா என்பதுதான் இன்றைய கேள்வி.
 
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
 
இலங்கை அரசியலின் கடந்த வார முக்கிய நிகழ்வுகளின் கண்ணோட்டம்    பிரதியாக்கம்: ஏ.எச். சித்தீக் காரியப்பர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.