குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

ஏற்றஅரசியல் தீர்வு முன்வைக்கப்படும் இந்தியா நம்பிக்கை.புங்குடுதீவில் சிங்களமீனவர்குடியேற முயற்சி.

15 .08. 2011  இலங்கையில் யதார்த்தமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வடக்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அரசாங்கம் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாட்டின் சகல மக்களும் கௌரவத்துடன் சம உரிமைகளை அனுபவிக்கக் கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கையில் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியம் நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அண்டை நாடாக இலங்கையுடன் எப்போதும் இந்தியா நெருங்கிய தொடர்புகளைப் பேணும் என அவர் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவில் தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்த முயற்சி உள்ளுர் மீனவர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது...
15 .08. 2011 
யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
 
நேற்று மாலை கடற்படையினரது ஏற்பாட்டினில் நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் புங்குடுதீவுப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
 
இவர்கள் சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கப்போவதாக கடற்படையினரால் உள்ளுர் மீனவர்களுக்கு தெரிரிவிக்கப்பட்டது.
 
ஏற்கனவே இந்திய மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை அனுமதித்தால் தமது நிiலைமை மேலும் மோசமடையுமென எச்சரித்தனர்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கடற்படையினர் வலுக்கட்டாயமாக தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த முற்பட்டனர். இதையடுத்து உள்ளுர் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. நேற்றிரவு ஆரம்பமான இக்குழப்பகரமான நிலை இன்று காலை வரை நீடித்தது.
 
தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த கடற்படையினர் மேற்கொள்ளும் கெடுபிடிகள் பற்றி உள்ளுர் மீனவ அமைப்புக்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளென அனைவரதும் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தனர். இன்று காலை வரை இதே நிலையே நீடித்திருந்தது.
 
இதனிடையே அரசின் அகைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பினில் சுமுகமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக தமக்கு உறுதி மொழி வழங்கியுள்ளதாக உள்ளுர் மீனவர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டது.
 
ஏற்கனவே வடமராட்சி கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்ந்து சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கும் தொழிலில் ஈடுபடடுவருகின்றளர்.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.