குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது சுரேசு.த.தே.கூ.இந்தியாபயணம்.

14.08.2011-இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களையும் உலகையும் ஏமாற்றுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேச் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சனாதிபதி கிந்த ராசபசவின் அதிகாரமிக்க சகோதரரான் கோத்தபாய தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவை இல்லை என்கிறார். மற்றொரு சகோதரரான பசில் ராயபசவோ, பேச்சு மூலம் தீர்வு எட்டப்படும் என்கிறார். இவர்களில் எவரின் பக்கம் தான் இருக்கிறார் என்பதைசனாதிபதி மகிந்த ராயபச நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சுரேச் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
 
 
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய, புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்பதால் இனி தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வுகள் எதுவும் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.
 
தற்போது நடைமுறையில் இருக்கும் ஒற்றையாட்சி அரசமைப்பு முறை மாற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு வலியுறுத்தி வரும் நிலை யில், நடைமுறையில் இருக்கும் அரசமைப்பின் கீழேயே இரு இனங்களும் சேர்ந்து வாழ முடியும் என்று கோத்தபாய ராஜபக்ஷ அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
 
'இந்த அரசமைப்பு, அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது. அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் ஏற்கனளூவ போதியளவு வழங்கப்பட்டு விட்டது. இதைவிட தமிழர்களுக்கு மேலதிகமாகக் கொடுக்க வேண்டிய தேவை ஏதுமில்லை'' என்று அவர் தெரிவித்திருந்தார்.
 
அவரது பேட்டி வெளியாகி 5 நாள்களின் பின்னர் தமிழ்ப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, இனப் பிரச்சினைக்குத் தெரிவுக்குழு ஊடாக 6 மாதங்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்றார்.
 
'அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். 6 மாதங்களுக்குள் தீர்வை எட்டவேண்டும் என்று அதற்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குழுவின் முடிவு நாடாளுமன்றத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதித் தீர்வு தயாரிக்கப்படும்'' என்று பஸில் ராஜபக்ஷ கூறியிருந்தார்.
 
'மகிந்த ராசபசவின் ஒரு சகோதரர் சொல்கிறார், எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று; மற்றொரு சகோதரர் சொல்கிறார் தமிழர்களுக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்களே போதும் என்று. இவர்களில் எவரின் பக்கம் சனாதிபதி இருக்கிறார் என்பதே எமது கேள்வி'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேச் பிரேமச்சந்திரன்.
 
கோத்தபாயவின் உறுதியான கருத்துக்களைப் பார்க்கும்போது இலங்கை அரசு தமிழ் மக்களையும் ஏமாற்றி உலகையும் ஏமாற்றுகிறது என்றே உணர முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 'அதேசமயம் ஒரு சனாதிபதியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள, இரு சகோதரர்களும் இருவேறு விதங்களில்  மாறுபட்ட கருத்துக்களுடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளதால் அரசு மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு முகம், சிங்கள மக்களுக்கு ஒரு முகம், உலகத்துக்கு இன்னொரு முகம் என்று ஆரம்பம் முதலே அரசு நம்பகத்தன்மை அற்ற விதத்திலேயே செயற்பட்டு வருகின்றது.

 எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு ஏற்ற அரசியல் நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து முன்னெடுக்கும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ளனர்.
 
சர்வதேச அபிவிருத்திக்கான மனித உரிமைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புது டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளனர்.
 
எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
நாட்டின் தற்போதைய சூழ்நிலை, அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய பயணத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென இந்தியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இதுவரையில் அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.