குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

தமிழர்களை இழிவு செய்த அமெரிக்க துணைத் தூதருக்கு யெயலலிதா கடும் கண்டனம்.

14 .08. 2011  தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் மவுரீன் சாவ் தனியார் பலகைக்கழகம் ஒன்றில் உரையாற்றிய போது, 'டில்லியிலிருந்து ஒரிஸ்ஸாவுக்கு நான் ஒரு முறை ரயிலில் பயணாமானேன். அது 24 மணி நேரப்பயணம்தான். ஆனால் 75 மணி நேரமாகியும் ரயில் போய்ச் சேரவில்லை. நான் தமிழர்களைப் போல் கறுத்து, அழுக்காகி விட்டேன் என்று பேசியிருக்கிறார்' இது தமிழகத்தில் கடும் சர்ச்சைகளை உருவாக்கியது. அமெரிக்க தூதரின் இப்பேச்சுக்கு தமிழக முதல்வர் கடும் கண்டத்தை வெளியிட்டதோடு தூதரகத்திற்கு கடிதமும் எழுதியுள்ளா.
 
அக்கடிதத்தில் ,''அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், 'நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''என்று கூறியுள்ளார்.
 
தூதரகம் வருத்தம்.
...............................
 இந்த பேச்சு தமிழகத்தில் கடும் சர்ச்சைகளை உருவாக்கியவுடன் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம்  ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் ஃஃமவுரீன் சாவ் அருமையாக உரையாற்றினார் ஆனால் அந்த உரையின் இடையே அவர் பொறுத்தமற்ற கருத்துக்கள் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறார். அக்கருத்து எவரையாவது புண் படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம்ஃஃ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்படுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.