குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஈழத்தமிழர் துயரிலும் நேரானோர் பணிகண்டு மகிழ்கின்றோம். பன்னாட்டு தமிழுறவு மன்றத்திற்கு நன்றி.

1330
பொ.முருகவேள்.ஆசிரியர்இலங்கை.
தமிழாண்டு2042-14.08.2011
சுவிற்சர்லாந்து.
                       திரு.கவியரசு.வ.மு.சே.திருவள்ளுவர் அவர்களுக்கு!
                         வணக்கம்.
            ஈழத்தமிழர் துயரிலும் நேரானோர்    பணிகண்டு மகிழ்கின்றோம். பன்னாட்டு தமிழுறவு மன்றம் என்ற உங்கள் அமைப்பு தமிழகத்தில் மட்டுமல்ல மசேியா சிங்கப்பூர் வடஇந்தியா டில்லியிலும் ஈழத்தமிழருக்காக போராட்டம் நடத்தியிருப்பது ஈழத்தமிழர்கள் சனநாயகவாதிகள் சனநாயகவழியில் போராடி இலங்கையில் அடிவாங்கியதாலே  ஆயுதம் ஏந்திப்போரிட்டனர். அப்போரினால்  இந்தியா ஆசியா சீனா அய்ரோப்பா அமெரிக்கா என உலகளவில் ஈழத்தமிழர் நிலை பேசப்படுகிறது.அவர்களை இலங்கை அழிக்கிறது என்பது ஏற்கப்பட்டு விட்டது.

 அதை மறுத்து உரைக்கும்படி அயல்நாடான இந்தியா மறைமுகமாக இலங்கை அரசைத் துாண்டி வருகிறது.தமிழகம் ஈழத்தமிழருக்கு ஆரவுக்கரம் நீட்டினாலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகமட்டுமல்ல ஈழத்தமிழர்கள் மீட்கப்படாமல் அழிந்து போகவும் சிங்களவர்கள் தமிழர்களை இழிவுபடுத்தி நடத்தவும் காரணமாக இருப்பதோடு இலங்கை அரசின் செயலுக்கு எந்தமுட்டுக்கட்டையும் செய்யாது ஈழத்தமிழர்களின் முன்னேற்றத்திற்கு சிங்கள அரசைமீறி ஏதும் செய்யாது இருப்பது தமிழகமக்கழுக்கு மட்டுமல்ல உகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இந்தியாமீது விரோதமனப்பக்குவத்தை வளர்க்கிறது என்று  டில்லியில் வைத்து நேரே பிரதமருக்கு கூறியமை நல்லவிடயம்.

சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் ஈழஎதிலிகள் என்று இனம்கண்டவர்களுக்கு வீட்டுவசதி உணவு வசதிகளுடன் மருத்துவ வசதிகளையும் சுவிசுப்பிள்ளைகளுக்குப்போல் கல்விவசதிகளையும் செய்துகொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டியமை மிகமிக நல்லது.

 தமிழகத்தமிழர் ஈழத்தமிழர்கள் என்ற அரசியல்வாதிகளின் குண்டான் சட்டிக்குள் குதிரையோட்டும் தமிழர்களிடத்தில் மட்டும் படம்காட்டும் பகட்டுத்தனத்தை பன்னாட்டுத் தமிழுறவுமன்றம் தகர்திருக்கிறது.

பணமின்மை டில்லியில் மொழிப்பிரச்சனை இவற்ரை எதிர்கொண்டு ஆடி 26.ல் டில்லியில் ஈழத் தமிழர்கழுக்காக உண்ணாவிரதமிருந்தமை நல்ல முன்மாதிரிச் செயல் என்று சுவிசு தமிழ்ப்பண்பாட்டியக்கம் பாராட்டுகிறது.

சுவிசில் இயங்கும் குமரிநாடு.நெற் இணையம் இச்செய்தியினை வெளியிட்டுக்கொள்ளும் வேளையில் ஏனையதமிழ்க் கட்சிஅமைப்புகளும் டில்லியிலும்  பிறமாநிலங்களிலும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து மாற்று இனத்தாரும் தமிழருக்காகப் போராடும் நிலையை உருவாக்கியமைக்கு உரிமையாளர்கள்  நீங்கள் தான் என்பதை தங்களுக்கும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய தந்தையார் வ.முஇ.சேதுராமன் அவர்களுக்கும் இணைந்து இயங்கிய அனைத்து அமைப்பினருக்கம் குமரிநாடு.நெற்(kumarinadu.net) பாராட்டுக்களைத் தெரிவித்தக்கொண்டிருக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.