குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

தவறான தமிழ்மொழி பெயர்ப்புகள்- அகரன்- வெளியிட்ட இணையத்திற்கு நன்றி மேயர்-stadt prasidant-நகரத்தலைவர்

 13.08.2011த.ஆ.2042-  ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரம். இதற்கு முன்னுதாரணமாக இங்கு கற்றுக் கொடுத்தோர் இருக்க வேண்டுமல்லவா?எமது தமிழ் வழக்கத்தில் சில ஆங்கில சொற்களை தவறாக அல்லது மிகைநவிற்சியாக பயன்படுத்தி வருகின்றோம். இச் செயலினை பெருமளவு எமது ஊடகங்களே நீண்ட காலமாக செய்து வருகின்றன. சான்றோர்களும் அப்பதவியை முன்னர் வகித்தோரும் தமக்குத் தெரிந்தும் அவற்றைத் திருத்துவதில்லை. சரியான விளக்கத்தை அளிப்பதுமில்லை. மற்றவர்களின் அறியாமையில் தமக்குத்தாமே மாலை போட்டு மகிழும் புத்தியாகச் சீவிப்பவர்களாகவே இவர்கள் உலவுகின்றனர்.யாழ்ப்பாணத்தவரின் பொதுப் பண்பான மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் பழக்கம் பேராசிரியர்களையும் விட்டு வைக்கவில்லை என்றே இதிலிருந்து தெரிகிறது.  ஏன் வீரகேசரி ஈழநாடு பத்திரிகைகள் கூட தவறான முறையில் தலையங்கங்கள் தீட்டுகின்றன என்று இங்கிலாந்து வந்தபோது  திரு. வித்துவான் சொக்கன் ஆசிரியர் அவர்கள் அய்.பீ.சி. வனொலி நேர்கணலில் விளக்கினார் . 2002 இல்  யாழ் மணிக்குரல் இராயன் அவர்கள் நேர்காணலை நடத்தியிருந்தார். மன்னார் மாவட்டத்தில் படுமோசமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இது தவறு என்ற விளக்கத்தை கொடுத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் படுமோசமான வெயில் இவ்வாறான தவறுகளைக் சுட்டிக்காட்டியிருந்தார்.
            ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரம். இதற்கு முன்னுதாரணமாக இங்கு கற்றுக் கொடுத்தோர் இருக்க வேண்டுமல்லவா? இவ் விடயத்திற்கு முதல் உதாரணமாக ‘வாழ்நாள்பேராசிரியர்’ என்ற பதத்தினை ஆராய்வோம். Emeritus என்றால்    Retired or honorably discharged from active Professional duty, but retaining the title of one’s office or position (dean emeritus of the graduate school: editor in chief emeritus  ஒக்ஸ்பேர்ட் ஆங்கில அகராதி விளக்கமளிக்கிறது.
                    மேற்படி  ஆங்கில வாசகத்தினை இவ்வாறு மொழிபெயர்க்கலாம். கடமையாற்றிய பதவித் தலைப்பை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டவரையே Emeritus என வழங்கலாம். இவர் தான் செயற்பட்ட தொழில்சார் கடமைகளிலிருந்து கௌரவமான முறையில் நீங்கியிருக்க வேண்டும். அல்லது ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
                   வாழ்நாள் பேராசிரியர் என்று பயன்படுத்தும் போது ஓய்வு என்ற கருத்து வருகின்றதா? வாழ்நாள் என்பது பிறந்தது முதல் இறக்கும் வரையான காலப்பகுதியை குறிப்பதாகும். பிறந்தது முதல் ஒருவர் பேராசிரியராக இருப்பதில்லை. உண்மையில் இதனை தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் என வழங்குவதே பொருத்தமாகும். அமரர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் Emeritus என்ற பதத்தினை தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர் என்றே பயன்படுத்தி வந்தமை தெரிந்ததே. ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் பெரும் புலமை உள்ள இவர் பயன்படுத்தியதை சரி எனக் கொள்வதில் தவறில்லை. யாழ்ப்பாணத்தவரின் பொதுப் பண்பான மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் பழக்கம் பேராசிரியர்களையும் விட்டு வைக்கவில்லை என்றே இதிலிருந்து தெரிகிறது.
                    யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வாழ்நாள் பேராசிரியர் எனப் பயன்படுத்துவோர் பல்கலைக்கழக மாணவர்களிடையேயும், விரிவுரையாளர்களிடையேயும் பல்கலைக்கழகம் வாழ்நாள் முழுவதும் தமக்கான வசதியை தர வேண்டுமென முரண்டுபிடித்து அவர்கள் முன்னர் பயன்படுத்திய துறைசார்ந்த அறைகளைக் கூட காலி செய்யவில்லை என தெரிகிறது. உண்மையில் இச்செயல் பெரும் மோசடியாகும். இதற்கு உடந்தையாக இருக்கும் துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உட்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
                  மேற்குறிப்பிட்டது போன்று ஆங்கிலப்பதத்தின் கருத்து முறையாக மொழிபெயர்க்கப்படாது மிகைநவிற்சியாக இன்னும் சிலரின் உத்தியோகபூர்வமான  பெயர்களையும் பிழையாக பயன்படுத்தி அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
Municipal Commissioner   என்பதற்கு மாநகர ஆணையாளர் என வழங்கி, அவரது ஆணைக்காகக் காத்திருப்பது எமது அண்மைய வரலாறாக உள்ளது. அதுபோன்றே  Mayar of Municipal  Council  என்பதனை மாநகர முதல்வர் என்றும் , மாநகர முதல்வர் திலகம் என்றும் தமிழில் போட்டுக் குழப்பி அடிக்காது தமிழில் மேயர் என்று   பொதுவாக மக்கள் வழங்கி வருவதால் அதனையே வழங்கி வருவது பொருத்தமாகப் படுகிறது.  Government Agent (G.A) என்பதன் கருத்து ‘அரச முகவர்’ என்பதாகும். இவ்வாறு அழைக்காது மிகை நவிற்சியாக ‘அரச அதிபர்’ என அழைத்து அரச முகவராக பணி ஆற்றுபவரை நாட்டிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் அதிபதியாக்கி வழிபடும் வரலாறும் எமக்குரியதாகும்.
         பதவிக்கான ஆங்கிலப் பதத்தின் கருத்துடன் ஒட்டாது ஏனோ தானோ என மொழிபெயர்த்து வழங்கினால் அது பொதுமக்களைக் கல்வி கற்றோரே ஏமாற்றும் செயல் என்பதில் அய்யமில்லை. ‘கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்பதை மறந்தோரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற எமது பிரதேச ஊடகங்கள் துணைநிற்க  வேண்டும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.