குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

பூநகரி செல்வியாதீவுக் கிராமத்தில் இறைச்சிக்காக வெட்டப்பட்டது உழவுமாடு

பூநகரி செல்வியாதீவுக் கிராமத்தில் இறைச்சிக்காக வெட்டப்பட்டது. உழவுமாடு அச்சத்தில் உறைந்து போயுள்ள கிராமவாசிகள்இவ்ஊரையே(ஊர்ப்பெயர்களும்  அவற்றின் வரலாறுகளும் தெரியாதோர் செல்விபுரம் என்று எழுதிவிட்டனர்) மிகவும் பழமையான கண்ணகை அம்மன் கோவில் இருப்பதாலும் மூன்று பக்கமும் கடல் இருப்பதாலும் பழையகாலத்தில் மழைகாலத்தில் நீரால் சூழப்பட்டு தீவாக இருந்திருக்கலாம்.அக்கிராமத்தில் மக்கள் தற்போது அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். செல்வியாதீவு கிராமத்தைச் சேர்ந்த வல்லிபுரம் தெய்வேந்திரம் என்பவர் ஓர் ஏழை விவசாயி. இவர் உழவு மாடுகளை வைத்துக் கூலிக்கு உழவு வேலைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 29 ஆம் திகதி இரவு இவரது 40 ஆயிரம் ரூபா பெறுமதியான உழவு மாடொன்றை அவிழ்த்துச் சென்ற சிலர் தம்பிராய் கிராமத்தில் உள்ள மருதடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் வைத்துக் கொன்றபின் இறைச்சிக்காக உரித்துள் ளனர். சம்பவ இடத்தில் அதன் தோல் மற்றும் கழிவுப்பாகங்களை விட்டுச் சென்றமை அடுத்த நாள் காலை தெரியவந்தது.

மேற்படி சம்பவம் தொடர்பாக உழவு மாட்டின் உரிமையாளரால் பூநகரிப் காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

கா.துறையினரும் வழமை போல சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். மேலும் மாட்டின் எச்சங்களையும் படம் பிடித்துச் சென்றனர்.இது போன்ற சம்பவம் ஒன்று செல்விபுரத்தில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது.

ஆனால் அதில் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்களால் கறவைப் பசுக்களையும், உழவு மாடுகளையும் வளர்ப்போரும், ஆடு, மாடுகளைப் பட்டியிலிட்டு வளர்ப்போரும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

எனவே உரிய தரப்பினர் விரைந்து செயல்படுவதோடு இத்தகைய சம்பவங்கள் மேலும் நடைபெறாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள் வதோடு சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.