குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இ.பாராளுமன்றத்தி்ல்-ஒற்றைவழியில் வரும்பண்டியும் யானையுமாக கொ-யெ- முட்டிமோதி தமிழர்களுக்கு என்னபயன்.

12.08. 2011 விதி எண் 193 ன் கீழ் இலங்கை போர்க்குற்ற விதி மீறல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டுமென்று மழைக்கால கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டுமென்று திமுக எம்பி டி.ஆர்.பாலு விண்ணப்பாத்தை கொடுத்திருந்தார் விதி எண் 193 ன் கீழ் இலங்கை போர்க்குற்ற விதி மீறல் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டுமென்று திருச்சி சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்களும் தமிழக நாடாளுமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களுமே நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அனால் கடந்த இரண்டு நாட்களாக காமன்வெல்த் ஊழல் தொடர்பாக எதிர்கட்சிகள் புயல் கிளப்பியதால் மாநிலங்களவை மக்களவை ஆகியவை முடங்கின. இதனால் இலங்கை தொடர்பாக எந்த கேள்விகளையும் தமிழக எம்பிக்களால் எழுப்ப முடியாமல் போனது. ஆனால் இன்றூ அவை கூடியதுமே டி.ஆர்.பாலு இன்று இலங்கை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றார். இந்நிலையில் காமன்வெல்த் தொடர்பான விவாதம் இன்றூம் தொடரும் நிலையில் இன்று பிற்பகலில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு இலங்கை பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்புவார் அதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதம் நடக்கும் விவாதத்தின் பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளித்துப் பேசுவார் என்று தெரிகிறது. இன்னும் விவாதம் துவங்காத நிலையில் இந்த விவாதம் அதிமுக, திமுக சண்டையாக பாராளுமன்றத்தில் மாறி விடக்கூடாது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை தமிழக எம்பிக்களால் உபயோகமான முறையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றே அனைவரும் எதிர்ப்பாக்கின்றனர்.

இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - சீனப் பிரதமர்
 
சீனப் பிரதமருக்கும் சனாதிபதி மகிந்த ராசபசவிற்கும் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டுள்ளன.
இலங்கைக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்கப்படும் என சீனப் பிரதமர் வென் யியாபோ தெரிவித்துள்ளார்.
 
சீனப் பிரதமருக்கும் சனாதிபதி மகிந்த ராசபசவிற்கும் இன்று விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
 
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், இதனால் பரசுபர ரீதியில் நன்மைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் பொருளாதார விருத்திக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உட்கட்டுமான வசதி, கட்டிட நிர்மாணம், கலாச்சாரம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, சீனாவுடன் நீண்ட காலமாக உறவுகள் நிலவி வருவதாக சனாதிபதி மஹிந்த ராசபட்ச குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
சகல துறைகளிலும் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோத்தாபய ராயபட்சேவுக்கு தமிழக சட்டமன்றத்தில் யெ கடும் கண்டனம்-ஒற்றைவழியில் வரும் பண்டிகளாக கொ-யெ- முட்டிமோதி தமிழர்கழுக்கு என்னபயன்.
இலங்கை இறுதிப்போரின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் மற்றும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரும் படியும் தான் நிறைவேற்றிய தீர்மானத்தை  விமர்சித்திருக்கிறார் கோத்தாபய என தனது கடுமையானn கண்டனத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.
 
தனது தீர்மானம் என்பது இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்குத்தான் என்னும் நிலையில் தமிழக மக்களின் விருப்பப்படி தனது தீர்மானத்தை இந்திய அரசு ஏற்றுக் கொண்டு இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்திருக்கும் என்றால் இப்படி தடித்தனமாக கோத்தாபயெ ராஜபக்ஸ பேசியிருக்கமாட்டார். இந்த தீர்மானத்தை இந்தியா கண்டுகொள்ளவில்லை எனப்தால்தான் அவர்கள் இப்படி எல்லாம் பேசுகிறார்கள். உடனடியாக தன்னை விமர்சித்த கோத்தாபய ராஜபக்ஸவை கண்டிக்கும் நோக்கில் டில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிக்க  வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் கேட்டுக் கொள்கிறது என நட்டமனிறில் ஜெ முழங்கியிருக்கிறார்.
 
ஆத்துடன் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இல்லை என்று சொல்லியிருக்கிறார் கோத்தாபய இது இந்தியா கச்சத்தீவு தொடர்பாக இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவின் மீது முழு உரிமை உண்டு. அவர்கள் அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவார்கள் அவர்களை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டு. 'மேலும்  ஈழத் தமிழர்களுக்கு சம அரசியல் உரிமை கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை.'  என்று கடுமையான தொனியில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றி உள்ளார்.
 
அதிமுக ஆட்சிக்கு வந்ததும். முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா முதல் தீர்மானமாகக் கொண்டுவந்தது இலங்கை இனப்படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் என்பதனை நிறைவேற்றியிருந்தார். இதனை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் நேரடியாகவும் வலியுறுத்தினார் ஜெயலலிதா. இந்நிலையில் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபஸ தமிழக சட்டமன்ற தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சுயநலங்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் ஜெயலலிதா செயல்படுகிறார் என்றும் சாடியிருந்தார் இந்நிலையில் தமிழக கட்சிகள் பலவும் கோத்தாபயவின் இக்கருத்துக்கு கண்டம் தெரிவித்திருந்தனர். தோடர்ச்சியாக இன்று தமிழக சட்டமன்றம் கூடியதும்; கோத்தாபயவின் இக்கருத்தை தமிழக சட்டமன்றம் கண்டிக்க வேண்டும் என்று  எதிர்கட்சிகள வேண்டுகோள் விடுத்தன. இந்த கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசியபோதே முதல்வர் ஜெயலலிதா  கோத்தாபய ராஜபஸவுக்கான தனது கண்டனத்தை வெளியிட்டார்.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.