குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மேற்கின் அழுத்தங்களை முறியடிப்பதற்குசனாதிபதி சீனா பயணம் செய்துள்ளார்? கீழே இன்னும் பல செய்திகள்

10.08.2011.த.ஆ.2042--ற்குலக நாடுகளினால் அண்மைக் காலமாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு தேவையான ஆதரவினை திரட்டும் நோக்கில்சனாதிபதி மகிந்த ராசபட்ச சீனாவிற்கு பயணம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வலுவான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், போர்க் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பான அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கும் இந்த பயணத்தை சனாதிபதி பயன்படுத்திக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனாதிபதி மகிந்த ராசபட்ச, சீனப் சனாதிபதி யு யின்டாவோ மற்றும் பிரதமர் வென் யியாபோ ஆகியோரை பெய்யிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனாவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதே தமது பயணத்தின் பிரதான இலக்கு என சனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால், சீனாவுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது சனாதிபதியின் முதன்மை நோக்கமல்ல என ராசதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரக் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களிலிருந்து மீளும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது என சமூக சனநாயகத்திற்கான மத்திய நிலையத்தின் ஆய்வாளர் கௌசால் பெரேரா தெரிவித்துள்hளா.

எனினும், நாட்டில் இன மற்றும் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதற்கு இன்னமும் கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
சீனக் குடியரசு சனாதிபதியின் அழைப்பை ஏற்று மகிந்த சீனா செல்கிறார்:-

மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோவின் அழைப்பொன்றை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு செல்ல உள்ளார்.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அண்மையில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்றிருந்த போது, சீன ஜனாதிபதியால், இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கை சனாதிபதி தனது சீன பயணத்தின் போது, சீன சனாதிபதி, பிரதமர் வென்ஜியாபாவோ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அத்துடன் சீனாவில் நடைபெறும் சில கூட்டங்களிலும் அவர் கலந்துக்கொள்ள உள்ளதாக சனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றப்படாது அரசியல் தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்த முடியாது – ரிசாட்
10 .08. 2011 
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் கௌரமான முறையில் மீள் குடியேற்றப்படாது, தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் சாத்தியம் கிடையாது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அவசரகாலச் சட்ட நீடிப்பு குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இடம்பெயர் முஸ்லிம்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
வடக்கு பிரதேச அரசாங்க அதிபர் ஒருவர் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
புத்தளத்தில் போதியளவு வசதிகள் காணப்படுகின்ற நிலையில் ஏன் முஸ்லிம்கள் வடக்கில் குடியமர்த்தப்பட வேண்டுமென குறித்த அரசாங்க அதிபர் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த அரசாங்க அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஆதிக்கம் செலுத்த முனைப்புக் காட்டக் கூடாது எனவும், முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டும் - ரவூப்
10.08.2011  தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
முஸ்லிம் தரப்பினர் உள்ளடக்கப்படாது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் அது வெற்றியளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரித்தானிய தூதுவராலய அதிகாரிகளுடன் நடைn;பற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் உள்ளடக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதனை, முஸ்லிம் காங்கிரஸ் காங்கிரஸ் தடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏதேனும் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அது சகல இன சமூகங்களையும் திருப்தி படுத்தக் கூடிய வகையில் அமையப் பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது முஸ்லிம் காங்கிரஸூடன் சந்திப்பு நடத்தாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் - மாவை
10 .08. 2011 
மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழ வேண்டும்.தமிழ் மக்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும். எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழவேண்டும். அரசு மேற்கொள்ளும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதை எமது மக்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மக்களின் உணர்வுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் தீர்ப்பு அளித்துள்ளன. இதனை இந்த அரசு உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராயா நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
 
நேற்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தின்போது உரையாற்றிய போதே மாவை சேனாதிராயா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
 
அவசரகாலச் சட்டத்தை கைகளில் வைத்துக்கொண்டு, இராணுவ பலத்துடன் இன ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது.இதற்கு உதவியாக சனாதிபதியின் கட்டளையை பிரதமர் இந்தச் சபையில் சமர்ப்பித்துள்ளார்.யுத்தம் முடிந்துவிட்டது; பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு விட் டது என்று கூறுகின்றீர்கள். அப்படியானால், எதற்கு அவசரகாலச் சட்டம்?
 
உடனடியாக அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அரசு பிரகடனப்படுத்தியது. அன்றுமுதல்தான் எமது இனம் திட்டமிடப்பட்டு ஒழிக்கப்படுகின்றது. இன அடையாளங்கள் ஒழிக்கப்படுகின்றன. தமிழ்ப் பிரதேசம் திட்டமிடப்பட்டு சிங்கள, பௌத்த மயப்படுத்தப்படுகின்றது. இது போர்க் குற்றச்சாட்டுகளைவிட மிகவும் பயங்கரமானது.
 
நாம் தனிப்பட்ட முறையில் இராணுவத்தை குறை கூறவில்லை. இராணுவமும்,  அரசும்சனாதிபதியின் தலைமையிலேயே இயங்குகின்றன.சனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும்.இறுதி யுத்தத்தின்போது முல்லைத்தீவில் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இருந்தனர் என்று அரச பதிவுகள் சான்று பகிர்கின்றன.
 
ஆனால், அரசிடம் சரணடைந்தவர்களில் 3 இலட்சத்து 17 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் பதிவுகளின்படியே பார்த்தால் எஞ்சியுள்ள ஒரு இலட்சத்து மூவாயிரம் பேரும் எங்கே என்று கேட்கின்றேன்.
 
 
இறுதி போரின்போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க,  இந்த ஒரு லட்சத்து மூவாயிரம் பேரும் எங்கே இருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்துக் கொடுப்பாரா என்று சவால் விடுக்கின்றேன்.
 
எமது நிலம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. கடல் வளம் தென்பகுதி சிங்கள மீனவர்களால் சூறையாடப்படுகின்றது. எமது மண்ணில் அரைவாசிக்கும் மேல் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. சம்பூர் மக்கள் இன்றும் தமது சொந்த மண்ணில் கால் பதிக்க முடியவில்லை.இப்படியான நிலையில்தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெற்றன. எமது மக்கள் தொடர்ச்சியாக அறுபது ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.
 
இந்த அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் கருணா அம்மான் முரளிதரன் கூட தமிழ் மக்கள் அபிவிருத்தியை அல்ல, உண்மையான அரசியல் தீர்வையே விரும்புகின்றனர் என்றார். இதனை சனாதிபதி பொறுப்புடன் அவதானித்து செயல்படவேண்டும் எனக் கூறியுள்ளார். அதனைப் பாராட்டுகின்றேன்.எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் வெறும் பேச்சில் மட்டுமே. ஆனால், தேர்தல் முடிந்த சூட்டோடு உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆனால், இன்றுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.இதுவரை எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; தாக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராச், யோசப் பரராயசிங்கம், சிவமகாராசா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு இக்கொலைகளுடன் தொடர்புடைய ஒருவரையாவது கைதுசெய்துள்ளதா என்று கேட்கிறேன்.
 
கிளிநொச்சியில் எமது இளைஞர் அணித் தலைவர் தாக்கப்பட்டார். இந்த நிலைமைகளைப் பார்த்தால் அரசே ஜனநாயகத்தை ஒழித்துக்கட்ட முனைகின்றது. இவற்றுக்கு எல்லாம் பாதுகாப்பதற்காகவே அரசு அவசரகாலச் சட்டத்தை நீடித்துக்கொண்டே செல்கின்றது. இதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என மாவை சேனாதிராயா தெரிவித்துள்ளார்.
 வலயங்களில் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களில் அதிகரிப்பு – ICRC
10 .08. 2011  போர் வலயங்களில் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
 
மருத்துவ நிலைகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2008 முதல் 2010ம் ஆண்டு வரையில் மருத்துவர்கள், தாதியர், அம்பியூலன்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது சுமார் 600 தாக்குதல்கழள் நடத்தப்பட்டுள்ளன.
 
லிபியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் கொலம்பியா உள்ளிட்ட 16 நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்த புள்ளி விபரத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
சில சந்தர்ப்பங்களில் தற்செயலான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் அநேக சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே மருத்துவ அல்ல சுகாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
 
போர் வலயத்தில் கடமையாற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சகல தரப்பினரினதும் தலையாய கடமை எனவும், ஜெனீவா பிரகடனத்திலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தப் பிரடகனம் அமுல்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அண்மைக்காலமாக அடிக்கடி பிரகடனம் மீறப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
போர்க் களத்தில் மருத்துவ சேவையின் அவசியத்தை எவரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
 
கடந்த காலங்களில் மருத்துவ நிலைகள் மீதோ அல்லது மருத்துவ பணியாளர்கள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் பாரியளவில் எதிர்ப்பு கிளம்பும் எனினும், தற்போது துரதிஸ்டவசமாக தற்போது அவ்வாறு எதிர்ப்பு கிளம்புவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.