குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

போரில் அரசின் அட்டூழியங்கள் தொடர்பானசாட்சியங்களை மூடி மறைப்பதற்கான பளபளப்பான புதிய முயற்சி இது.

 09.08. 2011  -த.ஆ.2042-வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இலங்கை அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும்போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நிபுணர் குழுவினரின அறிக்கை மற்றும் பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான காணனொளிகள் என்பவைகள் குறித்துத் தன்பக்க நியாயத்தைக் கூறும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
 
கடந்த வாரம் கொழும்பில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இறுதிக் கட்டப் போரின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணி என்று அரசு விவரிக்கும் செயற்பாடுகள் குறித்துப் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 'மனிதாபிமான நடவடிக்கை உண்மைப் பகுப்பாய்வு ஆடி 2006 வைகாசி 2009' என்ற அறிக்கை வெளியிடும் நிகழ்வாகவே அது அமைந்திருந்தது.
 
இதற்கு முன்னரும் போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மகாநாட்டைச் சிறிலங்கா அரசு நடத்தியிருந்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். இருப்பினும் அந்த மகாநாட்டில் பல நாடுகள் கலந்து கொள்ளாமையும் தெரிந்ததே.
 
கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் சனாதிபதி மகிந்த ராயபட்சவின் சகோதரருமான கோதபாய ராயபட்சக் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார்.
 
பொதுமக்கள் கொல்லப்படாமல் போர் ஒன்றை நடத்த முடியாது. ஆனால், இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்திடம் போராளிகள் சரணடைவது தொடர்பாக தனக்கு எவரும் அறிவிக்கவும் இல்லை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சுட்டுக் கொல்லப்படவும் இல்லை.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான தமிழ்ச்செல்வன், சூசை மற்றும் ரூபன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் கூடச் சரணடைந்தார்கள். புலிகளின் ஊடகத்துறைக்குப் பொறுப்பாளராக இருந்த தயா மாசுடர் மற்றும் யோச்  மாசுடர் ஆகியோரும் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
 
இந்த நிலையில் சரணடைய வந்தவர்களை நாம் சுட்டுக் கொன்றோம் என எப்படிக் கூற முடியுமெனவும் அவர்  கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இவ்வாறெல்லாம் கேள்வி எழுப்பி அரசு பக்க நியாயத்தைக் கூறிய அவர் இறுதியாக இலங்கையின் இறைமைக்கும் நற்பெயருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான புலம் பெயர் தமிழர்களும் செயற்படுகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
 
இப்படியெல்லாம் கோதபாய ராயபட்ச கூறி முடித்ததும் இன்னொரு அமைச்சரோ எழுந்து நின்று சர்வதேசமே எமக்கு நீதியை வழங்கு என்று கெஞ்சி நின்றார். புhண்டிய மன்னனிடம் நீதி கேட்கச் சென்றது போல.. இலங்கை வெளிவிவகார அமைச்சரான யீ.எல்.பீரிசு. இலங்கையின் கருத்தைச் சர்வதேச சமூகம் கவனத்துக்குக் கொண்டு வந்து, நீதியை வழங்க வேண்டும் எனக் கெஞ்சியதுடன் எந்தத் தரப்பினரும் எமக்கு எதிராக அழுத்தத்தை கொடுக்கவோ, அல்லது ஓரம் கட்டவோ, பொருளாதாரத் தடை விதிக்கவோ, முயற்சிக்க வேண்டாம் எனவும் மன்றாடி நின்றார்.
 
இவ்வாறாறெல்லாம் இந்த வெளியீட்டு விழா நிகழ்வுகள் முடிவுக்கு கொண்ட வரப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஏதாவது சொல்லாமல் இருப்பாரா? நீதிமன்றத்துக்கோ அல்லது வைத்தியசாலைக்கோ சரத் பொன்சேகாவைக் கொண்டுவரும் போது எல்லாச் சூட்டையும் வைத்து ஏதரவது ஒன்றை நறுக்கெனக் கூறி விடுபவர் அல்லவா அவர்..
அன்றைய தினம் அவரின் வாய்க்கு அரிசியாகக் கிடைத்தது இந்த அறிக்கை வெளியீட்டு விழாதான்..
 
இந்த அறிக்கை வெளியீட்டு விழா தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த அவர்
 
,கொழும்பில் உள்ள மன நோயாளிகள் போர் பற்றி நூல்களை வெளியீடு செய்து வருவதாகவும் போர் வெற்றிக்காக படையினரை வழி நடத்திய தன்னை சிறையில் அடைத்துள்ளதுடன் போரில் முக்கிய பங்காற்றிய 20 க்கும் மேற்பட்ட யெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியிருந்தார்.
 
இது இவ்வாறிருக்க, குறிப்பிட்ட அறிக்கை தொடர்பில் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரையன் அடம்ஸ் காரசாரமாகச் சில கருத்துகளை இவ்வாறு பொரிந்து தள்ளியிருந்தார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என உலகை நம்பச் செய்வதற்கான ஒரு முயற்சியே இது.
 
போரில் கடைசி மாதங்களில் பொதுமக்கள் உயிரிழந்ததை இலங்கை அரசாங்கம் இறுதியாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், திருப்தியளிக்காத வகையில், அதற்கு பொறுப்பேற்கவில்லை
 
மோதலின் போதான அரசாங்கத்தின் அட்டூழியங்கள் தொடர்பாக குவியும் சாட்சியங்களை மூடி மறைப்பதற்கான பளபளப்பான புதிய முயற்சி இது.
 
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையானது, அதிகரித்துவரும் சாட்சியங்களுக்கு முரணாக, தமிழ் புலிகளுடனான யுத்தத்தின் போது, அரசாங்கப் படைகளினால் அட்டூழியங்கள் எதுவும் இடம்பெறவில்லை என உலகை நம்பச் செய்வதற்கான மற்றொரு பலவீனமான முயற்சி.
 
அது மட்டுமின்றி ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் தொடர்பில் எந்தக் கருத்தையும் கூறாது மௌனம் காத்த கனடா கூட இப்போது இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
எதுதான் எப்படியிருந்தாலும் சர்வதேச ரீதியிலும் உள்ளுர் அரசியல் வட்டாரத்திலும் வலுமிக்கதான கருத்து ஒன்றே இந்த விடயத்தில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
 
அதாவது, இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பாக இன்று இலங்கை மீது சுட்டு விரலை நீட்டிக் கொண்டிருக்கும் சர்வதேசம் கேட்பதெல்லாம் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றினையே. தான் குற்றவாளியல்ல என்பதனை ஒருதலைப்பட்சமாக இவ்வாறான மகாநாடுகள் கருத்தரங்குகள் மூலம் நிரூபிக்க முயற்சிக்கும் சிறிலங்கா அரசானது, தான் குற்றமற்றவராகவிருந்தால் ஏன் இவ்வாறான விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க அஞ்ச வேண்டும் என்ற கேள்வியே இன்று சர்வதேசத்தினால் முன்வைக்கப்படுகிறது. நெஞ்சை நிறுத்தி முன்னின்று விசாரணைக்கு முகங்கொடுத்துத் தான் குற்றமற்றவர் என்பதனை சர்வதேச ரீதியாகவே நிரூபிக்கலாம்தானே என அவை இன்று கேள்வி எழுப்பியுள்ளன.
 
யாழ். குடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியரான குகுநாதன் தாக்கப்பட்டமையும் இலங்கையின் கடந்த வார அரசியலில் ஒலி அலைகளைத் தோற்றுவித்திருந்தது. வடமாகாணத்தின் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடைபெற்ற பின் அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் மீதான முதல் தாக்குதல் சம்பவமாக இது பதிவு செய்யப்பட்டாலும் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான முதலாவது தாக்குதல் இதுவல்ல என்பது தெரிந்ததே. உதயம் நிறுவனத்தின் மீது தாக்குதல், உதயன் ஊழியர்கள் மீது தாக்குதல், உதயன் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை என கடந்த காலச் சம்பவங்களை நாம் பட்டியலிட முடியும்.
இந்தப் படடியலில் இறுதியாக இடம்பெற்ற செய்தி ஆசிரியர் குகுநாதன் மீதான தாக்குதலானது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன. உள்ளுராட்சித் தேர்தல் முடிந்த கையுடனேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதால் இதில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்றே பெரும்பாலும் நம்பப்படுகிறது.
 
குகுநாதன் மீதான தாக்குதல் இடம்பெற்ற தினத்திலிருந்து சில தினங்கள் இந்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால,; உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புகள் மனித உரிமை நிறுவனங்கள் போன்றனவற்றின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதும் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதும் இந்த விடயம் திடீரெனக் கூர்மை பெற்றது. சனாதிபதி மகிந்த ராயபட்ச இந்தத் தாக்குதல் குறித்துப் பூரண அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபரைப் பணதித்திருந்தார். அதன்படி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. பல காவல்துறைக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 17 பேரைத் தாம் விசாரித்ததாகவும் கா.து. தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. சம்பவத்தைக் கண்டவர்கள் குற்றவாளியைக் காட்டிக் கொடுக்கலாம் என்ற வழமையான அறிவிப்பு மட்டும் செய்யப்பட்டுள்ளது.
 
இந்தத் தாக்தல் சம்பவம் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
 
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பில்; முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள அமெரிக்கா,
 
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
 
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையானது குரல்களை மௌனிப்பதுடன் கருத்து வெளிப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் இத்தகைய சம்பவங்கள் நல்லிணக்கத்துக்குப் பங்கம் உண்டாக்குவது மட்டுமின்றி சனநாயகத்தையே மலினப்படுத்துகிறது என்றும் அது மேலும் தெரிவித்திருந்தது.
 
இது இவ்வாறிருக்க, குகுநாதன் மீதான தாக்குதல் குறித்து அமைச்சர் டக்ளசு தேவானந்தாவும் தனது கருத்தைத் தெரிவிக்காமலும் இல்லை.
 
குகநாதன் தாக்கப்பட்டமைக்காக  தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதேவேளை, அவர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விடயமே என்பதுடன் அதற்கு சில விஷமிகளால் அரசியல் சாயம் பூசப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
 
இந்த விடயம் இவ்வாறெல்லாம் போய்க் கொண்டிருக்க ஊடகத்துறை அமைச்சரான கெகலிய ரம்புக்வெல இது குறித்து நகைச்சுவையாகத் தெரிவித்ததுடன் தனது கையாலாகத்தனத்தையும் மறைமுகமாக கூறியிருந்தார்.
 
ஊடகவியலாளர்கள் எவரேனும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இளநீர் வாங்கிக் கொண்டு அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு வருவேன் என்று தனது ஆசையையும் ஆதங்கத்தையும் ஏன்? ஒரு புறத்தில் தனது கருணையையும் வெளியிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் தன்னால் எதனையும் செய்ய முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சரான சனாதிபதியும் பாதுகாப்புத்துறையினரும் அதனைப் பார்க்க வேண்டும் நகைச்சுவையுடன் கூறி நழுவினார்.
 
ஆனால் இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராயபட்ச எனன கூறியிருந்தார் தெரியுமா?
 
உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன.
 
ஒன்பது தடவைகள் ஒன்று கூடிப் பேசியும் ஒன்றுமில்லை.. பத்தாவது தடவையும் படியேறி இறங்குவதுதான் மிச்சமென பலராலும் நம்பப்பட்ட ஒரு விடயம் திடீரென வேறு விதத்தில் முடிந்த கதை கடந்த வார சிறிலங்கா அரசியலில் பிரபல்யம் பெற்றுக் காணப்பட்டது. ஆமாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவாhத்தையே அது..
பேச்சுவார்த்தை கட்டம்-1, கட்டம்-2..கட்டம்-3 என ஆரம்பித்தில் சுறுசுறுப்புடனும் விறுவிறுப்புடனும்; காணப்பட்டாலும் காலப்போக்கில் அதில் கலந்து கொள்பவர்களையும் அந்தப் பேச்சுவார்த்தையில் அக்கறை கொண்டவர்களையும் அது அலுப்படிக்கச் செய்துவிட்டது.
 
ஓன்பது தடவைகள் அரசு தரப்புடன் பேசியும் ஒன்றுக்குமே அரசு மசியவில்லை.. செய்வோம்.. தருவோம் என்ற பதில்கள் மட்டும்தான் அரசு தரப்பிலிருந்து கிடைத்ததாகவும் இது காலத்தை இழுத்தடிக்கும் செயல் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால,; காலப்போக்கில் அதற்கும் ஒருபடி மேலாகச் சென்று.. அரசாங்கம் தம்மை ஏமாற்றுவதாகவும் தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பிலோ அல்லது தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காணவோ அரசாங்கம் எதனையுமே அது செய்யத் தயாராகவில்லை என்ற தாம் பொத்தி வைத்திருந்த உண்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் திடீரெனக் கக்கிவிட்டது. இவ்வாறானதொரு நிலையிலேயே இருதரப்புப் பேச்சுவார்த்தைகளும் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை மேடையானது காரசாரமான சூழ்நிலையைக் கொண்டதாக அமைந்திருந்தது.
 
அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதியில் கூட இணக்கத்தைத் தெரிவிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சில விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசானது பத்து நாட்களுக்குள் எழுத்து மூலம் விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து விட்டு பத்தாவது பேச்சுத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.  
 
ஆட்சிமுறையின் கட்டமைப்பு, மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் ஒதுக்கப்படும் துறைகள், வரி மற்றும் நிதியில் பரவலாக்கம்; தொடர்பிலேயே கூட்டமைப்பு இவ்வாறு அரசிடம் கால அவகாசம் கொடுத்து விளக்கம் கோரியிருந்தது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டவட்ட அறிவிப்பு தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியைத் தோற்றுவித்துள்ளதனையும் காண முடிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ஏனைய தமிழ்த் தரப்புகளை முழந்தாளிட வைக்கலாம் என அரசு தரப்பு நினைத்திருந்தாலும் அந்த நினைப்புக் கூடத் தவறானது என்பதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதன் மூலம் ஆளுந்தரப்புக்கு எடுத்துச் சொல்லியுள்ளது. அத்துடன் குட்டக் குட்டக் குனிவதற்கு நாம் என்ன மடையர்களா என்ற கேள்வியையும் அரசின்  பக்கம் அது கேட்டுள்ளது.
மேலும் ஒன்பது கட்டப் பேச்சுவார்த்தைகளில் கிடைத்த ஏமாற்றம்,  வடக்கில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் கிடைத்த ஏற்றம் இவை இரண்டையும் வைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு இறுக்கமுடன் நடந்திருக்கிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு..
 
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதை வரவேற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு இந்தியா உதவும் எனத் தெரிவித்திருந்தமையும் கூட்டமைப்பைக் குஷிப்படுத்தியிருக்கலாம். கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை நடைபெற்ற கடந்த வியாழக்கிழமையே கிருஷ்ணாவும் இவ்வாறு தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 
செனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்தியா குறிப்பெடுத்துள்ளதாகவும் எனினும், அதன் மீதான அழுத்தங்கள், தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் நன்மையிலேயே தங்கி உள்ளது என கிருச்ணா எச்சரிக்கை கலந்த தொனியுடன் தெரிவித்திருந்தமையும் அரசுக்குச் சங்கடத்தையும் கூட்டமைப்புக்கு சந்தோஷத்தையும் நிச்சயம் வழங்கியிருக்கும் என்றே நம்பலாம்.
 
இதேவேளை, அரசு தரப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வாஸ் குணவர்தன, பத்தாவது கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் விடுத்திருந்த கோரிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு ஒப்பானது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுகளில் இருந்து விலகிக் கொண்டால் அரசு இனி, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஆராயும் எனவும் அவரும் எச்சரிக்கை கலந்த தொனியில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சகல மக்களினதும் விருப்பங்களைப் நிறைவு செய்து நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவும் கருத்துத் தெரிவிக்க, நாட்டின் சமாதானத்தைச் சீர்குலைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் பசில் ராசபட்ச தமிழ்த்; தேசிய கூட்டமைப்பை வேண்டியுள்ளார். இந்த அமைச்சர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிந்திய நிலைப்பாடு தொடர்பிலேயே இவ்வாறு கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அதே போன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோதபாய ராயபட்ச கூட இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த போது இலங்கையில் விடுதலைப் புலிகளை அடியோடு ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. எனக் கூறியுள்ளார்
 
எது எப்படியிருப்பினும் யார் எதனைக் கூறினாலும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தென்னிலங்கைச் சிங்கள அரசுகளால் புறந்தள்ளப்பட்டும் அவர்கள் ஏமாற்றப்பட்டதன் காரணமுமாகவே தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அகிம்சைப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் முளைவிடத் தொடங்கின  என்பதே வரலாற்று உண்மை.  இந்த நிலைக்குத்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பு அல்ல என்பதனை இங்கு தெரிவித்தே ஆக வேண்டும். ஆனால்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதும் வெளிப்படையானது. தமிழ் மக்களின் பிரச்சினைக்காகத் அந்த மக்களை ஓரணியில் திரட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட்டம் நடத்தினாலும் நிச்சயமாக அது அஹிம்சை வழியிலான போராட்டமாக மட்டுமே இருக்கும் என்பதே உண்மை. இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனே அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
 
இன்னொரு புலிவால் பிடித்த கதையும் சிறிலங்கா அரசியலில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
 
சிறுபான்மை இனக் கட்சியான சிறிலங்கா முசுலிம் காங்கிரசின் அரசியல் நிலவரம்தான் அது...
 
முசுலிம் காங்கிரசைப் பொறுத்த வரை, பேரம் பேசலின் ஊடாகத்தான் அரசுடன் சேர்ந்து கொள்வது என்பது வாடிக்கையான விடயம். இறுதியாக இன்றைய சனாதிபதி மகிந்த ராசபட்சவுடன் பேரம் பேசலில் ஈடுபட்ட பின்னரே அது அரசுடன் இணைந்து கொண்டது. முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று சனாதிபதி மகிந்த அளித்த உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே அரசுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளையும் அது பெற்றுக் கொண்டது. ஆனால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமையினால் தற்போது  கொதிப்படைந்து விட்டது முசுலிம் காங்கிரசு.
 
இது தொடர்பில் அதன் செயலாளர் நாயகம் கசன் அலி ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.
 
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்படும் என்று சனாதிபதி மகிந்த ராயபட்ச எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் கக்கீமுக்கு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையிலேயே நாம் அரசுடன் சேர்ந்து கொண்டோம். ஆனால், சனாதிபதியால் அன்று வழங்கப்பட்ட வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எங்களது இன்றைய நிலைமை குறித்து முசுலிம் சமூகம் எம்மை கையாலாகாதவர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளமையானது முசுலிம் காங்கிரசு அடைந்துள்ள வேதனையையும் விரக்தியையுமே அப்பட்டமாகக் காட்டுகிறது. ஆனால், முசுலிம் காங்கிரசால் நினைத்த மாத்திரத்திலேயே அரசிலிருந்து வெளியேற முடியுமா என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை. ஏனெனில் கட்சிக்குள்ளேயே இன்று முரண்பாடான போக்குகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முக்கியமானவர்கள் அரசிலிருந்து வெளியேறினாலும் அதே கட்சியைச் சேர்ந்த சிலர் அரசுக்கு முழு ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளனர். இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு சின்னாபின்னமாகிவிடும்  என்பதனைக் கட்சியின் தலைமை நன்கு உணர்ந்துள்ளது. அது மட்டுமல்ல எரியும் வீட்டில் பிடுங்குவதெல்லாம் இலாபம் என்ற நிலை அரசுக்கும் சார்பாகி விடும்.
 
எது எப்படியிருப்பினும் அரசிலிருந்து வெளியேறுவதும் அரசினால் வெளியேற்றப்படுவதும் முசுலிம் காங்கிரசின் வரலாற்றில் சாதாரண ஒரு விடயமே..

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.