குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் மாபெரும் அறப் போராட்டம் வைகோ

 09.08. 2011  தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.நா. அவை கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் ஆகஸ்ட் 12ம் திகதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் சட்டப் பேரவையில் அவசியம் - முதல்வர் யெயலலிதா தீர்மானம் கொண்டு வரவேண்டும் - ராமதாசு

 இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

 இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.

எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும்;

இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைக் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மதிமுக நடத்த இருக்கின்றது.

ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
 
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 'தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே ராமதாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
 
 
இலங்கைப் பிரச்னைக்குத் தமிழீழமே தீர்வாக இருக்க முடியும்.சூடானில் இருந்து தெற்கு சூடான் ஏன் பிரிந்தது? இந்தோனிஷியாவில் இருந்து கிழக்கு தைமூர் ஏன் பிரிந்தது? என்பதையெல்லாம் தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பேசுபவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
 
தமிழீழத்திற்கு எதிராகப் பேசுபவர்கள் எங்களோடு விவாதிக்கலாம். எந்த இடத்தில் வந்து விவாதிக்கச் சொன்னாலும் திருமாவளவனும் நானும் தயாராக இருக்கிறோம்.
 
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முசிறியில் ஜெயலலிதா பேசும்போது, 'நாங்கள் வெற்றிபெற்றால், இந்திய ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேச நாட்டை பிரித்துக் கொடுத்தது போல, இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு பெற்றுத் தருவோம்' என்று பேசினார்.
 
இதன் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 'இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்ற வரவேண்டும்.
 
கருணாநிதி மீது தாக்கு: 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, தமிழகத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும். அவர் பெயரை நான் சொல்லவில்லை. அவரை என்றைக்கும் தமிழன் மன்னிக்க மாட்டான்.
 தமிழீழம் பெறுவதற்காக நானும் திருமாவளவனும் எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 கருத்தரங்கில் உரையாற்றிய தொல். திருமாவளவன், விடுதலைப்புலிகள் நசுக்கப்பட்டுவிட்டனர். இனி தமிழீழக் கோரிக்கை எழாது என்று இலங்கை அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடைசித் தமிழன் உள்ளவரை இந்தக் கோரிக்கை எழும்.
 
இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழீழம் கூடாது என்பதுதான். இப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியும் இதைத்தான் சொல்கிறது. பாஜகவும் இதைத்தான் சொல்கிறது.
 
இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஈழப் பிரச்னையைப் போர்க்குற்றமாகக் கருதித்தான் போராடுகின்றனவே தவிர, தமிழீழம் அமைய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதில்லை.
 
திமுக தமிழீழமே தீர்வு என்று சொல்கிறது. ஆனால் இன்று சூழ்நிலை கைதியாக இருக்கிறது. அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
 முதல்வர் ஜெயலலிதா இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதனால் என்ன பயன்? இதுபோல் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரு பயனும் இல்லை.
 
ஜெயலலிதாவால் தமிழீழம்தான் தீர்வு என்று அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரமுடியுமா? முடியாது.
 ராஜீவ்காந்தி கொலை: ராஜீவ்காந்தி கொலைக்குக் காரணம் விடுதலைப் புலிகள் என்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் இன்னும் முழுமையான விசாரணை நடைபெறவில்லை. சந்திரசாமி, சுப்பிரமணிய சுவாமியை விசாரிக்க வேண்டும் என்றனர்.
 
 
அது முழுமையாக நடைபெற்றனவா? ராஜீவ்காந்தி கொலையின்போது பொதுமக்கள், பாதுகாவலர்கள் இறந்தனர். ஒரு காங்கிரஸ் தலைவர்கள்கூட பாதிக்கப்படாதது ஏன்? என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் கொலையில் சர்வதேச பின்னணி உள்ளது.
 
உலகத் தலைவர்கள் பெரும்பாலோரின் கொலையில் சிஐஏதான் பெரும் பங்கு வகித்திருந்தது என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
 பாமகவோடு கூட்டணியா? காலில் உரலைக் கட்டிக்கொண்டு நடப்பதுபோல எம்.பி., பதவியைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இதனால் ஒரு பயனும் இல்லை.
 
இந்தப் பதவியைத் துறந்துவிட்டு,தமிழீழப் போராட்டத்திற்கு வரச் சொன்னால் இப்போதேகூட வர தயாராக இருக்கிறேன்.ஏற்கெனவே, இரண்டரை ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை உதறியவன் நான்.
 
பாமகவோடு அரசியல் கூட்டணி என்றால் நிர்வாகிகளோடு விவாதிக்க வேண்டும்.பாமகவுடனான கூட்டணி குறித்து உடனே முடிவெடுக்க முடியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
 
 எம்.யி.ஆர். விரும்பிய தனி தமிழ் ஈழத்துக்காக, அனைவரும் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் - நெடுமாறன்:-
 
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பிய தனி தமிழ் ஈழத்துக்காக, அனைவரும் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார்.
 
எம்.யி.ஆர். ரசிகர் மன்றங்களின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை கண்டித்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், நடிகர் சத்யராஜ், கவிஞர் புலமைப் பித்தன், எம்.ஜி.ஆர். கட்சியின் தலைவர் லியாகத் அலிகான் உள்ளிட்டோர் இதில் கலந்துக் கொண்டனர்.
 இங்கு உரையாற்றிய பழ. நெடுமாறன்,
 
 போர் என்ற பெயரில் இலங்கையில், பல அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
 
மேலும் இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதைத் தவிர, அச்சமயத்தில் இலங்கையில் உள்ள பல தமிழ் பெண்களும், குழந்தைகளும் பல்வேறு சித்ரவதைக்குள்ளாகி பலியாகினர்.
 
இதற்கு மூலக் காரணமாக விளங்கிய ராஜபக்ஷவை போர்க்குற்றவாளி என அறிவித்து அவரிடம் நீதி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைவதற்கு எம்.ஜி.ஆர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
 
இதற்காக அவர் தன்னால் இயன்ற பல உதவிகளைச் செய்தார். ஆனால், அவர் விரும்பிய தமிழ் ஈழம் இன்றுவரை அமையவில்லை. எனவே எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள், ரசிகர்கள், அவர் மீது பற்றுள்ளவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் -
 
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ராயபட்ச அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும், அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும், தமிழர்கள் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அரசியல் ரீதியாக தீர்வு எட்டப்படும் என்று அதிபர் ராஜபட்ச உறுதியளித்திருந்தார். ஆனால், இதற்கான ஆக்கப்பூர்வ முயற்சி எதையும் இலங்கை அரசு எடுக்கவில்லை.
 
ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடனும், மானத்துடனும், சம உரிமையுடனும் வாழ வேண்டும். இதற்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
 
 பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மீள்குடியமர்ப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை இலங்கை அரசு முடுக்கி விட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவத்தின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்நிலைக் குழு அமைத்து இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.