குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

இலங்கையின் இன்றைய நிலவரமும் வள்ளுவரின் குறளும் குமரிநாடு.இணையம்.சுவிசு

 படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு

சேனை நாடு(மக்கள்) பொருள்(உற்பத்தி)புத்திக்கூர்மையான ஆலோசகர்களான அமைச்சர்களும் நட்பும்(பிறநாடுகளுடன் அன்பானநட்புத்தொடர்பு)  அரண்(திறனுடைய பாதுகாப்புத்திட்டங்கள்.) இந்த ஆறுவகையும் ஒன்றுக்கொன்று குறையாது கவனித்துக் கொள்பவனே ஆண்சிங்கம்போன்று ஆட்சி  செய்யத்தக்கவன் . இந்த நிலை இலங்கையில் எப்படி இருக்கின்றது என்று பார்த்தால் தலமை இறுமாப்பு கொள்ளுமளவுக்கு ஒன்றுமில்லை. நாடுகளுடனான
நட்பும் கேள்விக்குறியாகிவருவதையும் உணராது இருப்பது இலங்கையர் என்றமுறையில்  எமக்கு கவலையாக இருக்கிறது.

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.

குடிமக்களை நீதிதவறாது ஆட்சிசெய்வதும் அறன். நீதியல்லாதவற்றை நீக்குவதும் அரசின் கடமை.இந்த இரண்டையும் செய்யும் அரசுகளே மதிப்புடன் தொடரும் அரசுகளாகும். ஏனையவை கெட்டுப்போகும்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து

வகுத்தலும் வல்லது அரசு

பொருள்வரும் வழிகளை உருவாக்குவதும் பொருளைச் சேர்த்தல் காத்தல் அவற்றை நீதியான வழியில் செலவிடல் வல்லவனின் அரசுஎன்று பொருளாகும்.

இதை எமது நாட்டில் பொருத்திப் பார்த்தால் அமைச்சர்களின்  தலைவர்களின் வருவாய்கள் உயரும்படியாக சரியாகச்சிந்திக்கிறார்கள். ஆனால் அந்தவருவாயால் சிங்கள ஏழை மக்களுக்கும் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும்  தமிழ்மக்களுக்கும் ஏதும் சென்றடைய வாய்ப்புகள் செய்யப்படவில்லை.

 அவர்களுக்கு உலகஉதவிநிறுவனங்களே உதவிசெய்கின்றன. பெரும்வருவாய் பெறும் அமைச்சர்கள் இந்ததொண்டு நிறுவனங்கள் நிதித்தட்டுப்பாட்டில் திண்டாடும் போது கண்டுகொள்வதில்லை.

இன்னுமொருவிடையம்  கூர்மையாகப் பார்க்கப்படவேண்டியிருக்கிறது.

 இன்று இலங்கைக்கு அதிகவருவாய் தேடிக்கொடுத்துக் கொண்டு இருப்பவர்களே தமிழர்கள் உலகில்பலநாடுகளில் வாழ்கின்றார்கள்  இவர்கள் விடுமுறைக்கு இலங்கைக்க செல்கிறார்கள் பெரும்தொகைபணத்தை உறவுகள் கோவில்கள் வாசிகசாலைகள் என்று இறைக்கின்றார்கள். சிறு சிறு முதலீடுகளும் செய்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு பொருட்களை எடுக்கின்றார்கள் இவற்றைக் கருத்தில் எடுத்து நீதியாக ச் சிந்தித்து வாடு்ம் வீடு இல்லாத உடமைகள் இழந்த குடும்பங்களுக்கு அரசுதனதுபணத்தில் செய்ததை பட்டியல் இடட்டும் பார்க்கலாம்.

பக்கத்தில் தமிழக அரசு மாதம் 1000 காசு கொடுப்பனவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. எமது அரசு என்னசெய்கிறது.

 மக்களைப் பாதுகாப்பு வலையங்களுக்குள் போகச் சொன்னது. மக்களும்சென்றார்கள் நடந்தது என்ன?

வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க தொலைக்காட்சிப்பெட்டிகள் குளிர்சாதனப் பெட்டிகள்  மின்உபகரணப் பொருட்கள் நகைகள் வீட்டு உபகரணங்கள் விவசாயப்பொருட்கள் உழவுஇயந்திங்கள் போன்றவை வீட்டின் சாளரங்கள் கதவுகள் கூரை மரங்கள் ஓடுகள் இவற்ரை எல்லாம் இராணுவம்கழற்றிச் சென்ற தாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

மாட்டு வண்டிகளைக்கூட எடுத்துச் சென்றவிட்டார்கள். கால்நடைகளை சுட்டுத்தின்று விட்டார்கள். வீட்டு ஓடுகளைப்பிடுங்கிவிட்டார்கள். இவை தென்பகுதிகளுக்கு ஏற்றி விட்டார்கள். இவர்கள் நீதியானவர்களா?

அரசு புதியதாக ஒன்றும் உதவிசெய்யத் தேவையில் எடுத்தவற்றை உயிருடன் இருப்பவர்களுக்கு திருப்பிக் கொடுத்தாலே போதும்.

இலங்கையில் இதுதான் நிகழ்கின்றது. 

 கடினமாகத்தமிழர்கள் உழைத்து சேமிப்பதும் பெரிய பெரிய வீடுகளைக் கட்டுவதும் உடமைகளைச் சேர்ப்பதும் வழமை இவற்றை காலத்திற்கு காலம் சிங்களவர்கள் சூறையாடுதே இருந்துவரும் நீண்டகாலப் பிரச்சனை இதைத்தடுப்பதற்கான அரசியல் சுதந்திரத்தை தமிழர்கள் நாடினால் அரசு செய்யும் பிரச்சாரமே பிரிவினைவாதம். பயங்கரவாதம்.

எனவே இன்றைய  இலங்கை விடுதலை அடைந்தபின் வள்ளுவரின் அறகருத்தில் அறவே முரன்பட்டு நிற்கிறது புத்தரின் கருத்திலும் இல்லை  என்றநோக்கோடு தற்போது நிறைவு செய்கின்றேன்.

பூநகரி .பொன்னம்பலம்.முருகவேள்.சுவிற்சர்லாந்து.திருவள்ளுவராண்டு2042-07.08.2011

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.