குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைப்பது தொடர்பில் இந்தியா நேரடி பிரதிநிதி ஒருவரை நியமிக்கத்திட்டம்

07 .8.2011 நியமனம் பெறுபவர் பார்த்தசாரதியா? ரொமேசு பண்டாரியா? என்று குமரிநாடு இணையம் கேள்வி கேட்டு நிற்கிறது.  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது. வடக்கு கிழக்கு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் குறித்த பிரதிநிதி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விசேட பிரதிநிதி நியமனம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் தங்கியிருந்து அரசியல் தீர்வுது; திட்டம் குறித்த உதவிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அர்த்தமற்ற வகையில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
 
இதன் காரணமாகவே, இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படும் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
அரசாங்கத்தின் அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகளை பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், எந்தளவில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என்பதனையும் இந்த யோசனைத் திட்டத்தின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும் எனவும் குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
அநேக சந்தர்ப்பங்களில் ஏனைய தரப்பினரின் தீர்வுத் திட்டங்களை அரசாங்கம் கோரி நிற்பதாகவும், இதனை காலத்தை கடத்தும் ஓர் உத்தியோகவே நோக்க வேண்டியுள்ளது என அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
 
முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கான தீர்வுத் திட்டத்தை முதலில் முன்வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுவதாக குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
இதேவேளை, சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.