குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

அறுபது ஆண்டுகாலம் புரையோடிய இனப்பிரச்சினை பிரசவத்திற்கு சர்வதேமருந்துதேவை.வி.தேவராச்வீரகேசரி

07.08.2011த.ஆ-2042--உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. யாழ்ப்பாணத்தில் அரச தரப்பும், அரசு சார்பான தரப்பும் தமிழ் மக்களின் இந்த தீர்ப்பு குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. அபிவிருத்தியை மேற்கொள்கின்றோம். தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கின்றோம். அப்படியிருந்தும் தமிழ் மக்கள் அரச தரப்புக்கும், அரசு சார்பானவர்களுக்கும் ஏன் வாக்களிக்காமல் விட்டனர் என்ற கேள்விக்கான விடையை மிக ஆழமாக தேடிக் கொண்டிருக்கின்றன.

அபிவிருத்திக்கும் அப்பால் இலவசங்களை வாரி வழங்கினோம். எவராவது சிரித்த முகத்துடன் அவற்றை வாங்கவுமில்லை. வாக்களிக்கவுமில்லை. இது ஏன் என்பது தான் அரச தரப்பினரினதும் அரசு சார்பானவர்களினதும் தற்போதைய ஆராய்ச்சியாக இருக்கின்றது.

இது குறித்து யாழ். குடாநாட்டு மக்களிடமும் புத்திஜீவிகளிடமும் வினவியபோது நாம் வாய்திறந்து எமது உணர்வுகளை வெளியில் கொட்ட முடியாது. எனவே தான் வாக்குச்சீட்டுகள் மூலம் எமது தீர்ப்பினை வழங்கினோம். தமிழ் மக்களின் இந்த தீர்ப்பு குறித்து பலர் பல விதமான கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால் நாம் வாக்களித்தது தமிழ்த் தேசியத்திற்கேயன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அல்ல! என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கடந்த 31 ஆம் திகதியில் இருந்து 4ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த பெரும்பாலானவர்களின் உணர்வலைகளாக இவையே காணப்பட்டன.

பெரும்பாலான தமிழ் மக்களும் புத்திஜீவிகளும் இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டினர்.

முறையான தேர்தல் பிரசாரங்கள் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை போன்றன உறுதிப்படுத்தப்பட்டிருக்குமாயின் தீவுப் பகுதிகளின் தீர்ப்பும் வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால் என்ன செய்வது தீவுப் பகுதிகள் தனிமைப்பட்டுப் போய் கிடந்ததால் தீர்ப்புகள் வேறுவிதமாக எழுதப்பட சாத்தியமாயிற்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக புத்திஜீவிகள் என்ற முறையில் சுதந்திரமான கருத்துகளைத் தெரிவிக்கலாமே என்று ஒரு சிலரிடம் கேட்டபொழுது எமக்கு சாப்பிடுவதற்கு மாத்திரமே வாயைத் திறப்பதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதைவிடவும் நாம் வாய் திறக்க முயன்றால் உதயன் செய்தியாசிரியர் குகநாதனுக்கு நடந்ததைவிட மோசமாகக் கூட எமக்கு நடக்கலாம் என்று தெரிவித்தனர்.

கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை, தமிழ் தேசியத்திற்கே வாக்களித்தோம் என எப்படி நீங்கள் உறுதியாகக் கூற முடியும் என்று வினவியபோது, வாக்களிக்காமல் நாம் ஒதுங்கியிருந்ததால் ஏற்பட்ட விளைவுகள் பல. அவ்வாறான ஒரு நிலை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் உருவாகக் கூடாது என்பதற்காகவே தமிழ்த் தேசியத்தை இதயத்தில் சுமந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தோம்.

தேர்தலில் நாம் அளித்த தீர்ப்பை எவருமே சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அது அரச தரப்பாக இருக்கட்டும், அரசு சார்பானவர்களாக இருக்கட்டும். தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வழங்கிய செய்தியை சரியான றையில் அர்த்தப்படுத்துவதாக இல்லை.

ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட இந்த தீர்ப்பினை சரிவர புரிந்து கொண்டதாகவோ, இதனை வைத்துக் கொண்டு அரசியல் பாதையை செப்பனிடுவதாகவோ, ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து முன்னெடுப்பதாகவோ இல்லை என்பது மனவருத்தத்திற்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டினர்.

தேர்தல் வெற்றியுடன் தனது பணி முடிந்துவிட்டதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவதுடன் தமிழ் மக்கள் வேறு வழியின்றி தம்மை ஆதரிக்கின்றனர், இந்த அரசியல் மூலதனத்துடன் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையை அள்ளிக் கொண்டு சென்று விடலாம் என்ற நோக்கில் சிந்திப்பதாகவுமே உள்ளது.

ஆனால் தமிழ்த் தேசியத்தின் பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் சவாரி செய்து தேர்தல் ளில் வெற்றிகளை குவித்து விடலாமென நம்புவது மடமையாகும்.

அதற்கு தற்பொழுது கைகளில் கிடைத்துள்ள உள்ளூராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றது என்பதிலேயே வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் பெறுபேறுகள் அமையும் என்பதையும் யாழ். குடாநாட்டு மக்கள் திட்டவட்டமான செய்தியாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பிற்கு தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கைப்பற்றிக் கொண்ட உள்ளூராட்சி சபைகளை ஒன்றிணைத்ததான சம்மேளனத்தை உருவாக்கி செயற்பட சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென்றும் யாழ். குடாநாட்டு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கும் அப்பால் சிவில் அமைப்புகளை உருவாக்குவதும், கிராம மட்டம் வரை கட்சியைப் புனரமைப்பதும், இளைஞர்களை உள்வாங்கிக் கொண்டு கட்சிக்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டிய உடனடி பணிகளாகும் என்றும் யாழ். குடாநாட்டு மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசாங்கம் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றது. காலத்தை இழுத்தடிக்கின்றது என்று பலமுறை இப்பத்தியில் குறிப்பிட்டமை தமிழ் மக்கள் அறிந்ததே. ஆனால் ஏனோ தெரியவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

““ரொபர்ட் புரூஸ் '' ஐந்து முறை படையெடுத்து தோல்வி கண்ட நிலையிலும் துவண்டு போகாது இறுதியில் ஆறாவது முறை படையெடுத்து வெற்றி கொண்டான். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் “ரொபர்ட் புரூஸ் பாணி'யில் பத்துமுறை பேச்சுவார்த்தை மேசைக்குச் சளைக்காது சென்றபோதும் இறுதியில் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இதில் விசித்திரம் என்னவெனில் கூட்டமைப்பு அரசுடன் பேசுவதாக பாவனை செய்து கொண்ட போதும் அரச தரப்பு தம்மிடம் அல்ல சுதந்திரக் கட்சியுடனேயே இப்பேச்சுவார்த்தைகள் அமைந்ததாக நாசூக்காக கூறி நாடாளுமன்ற தெரிவுக்குழுவை முன்னிலைப்படுத்தி பேசியுள்ளளது.

தமிழரின் தலைவிதியை ஒரு கட்சியுடன் பேசி முடிவு காண கூட்டமைப்பு புறப்பட்டது என்ற பழிச்சொல்லை தற்போது கூட்டமைப்பு சுமந்து நிற்கின்றது.

இதற்கிடையில் அரசாங்கம் ஒரு பக்கம் அமைச்சர் திஸ்ஸ வித்தாரணவை பேச வைத்துள்ளது. அவர் தலையில் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகள் என்ன வாயிற்று என்பதற்கு அப்பால் மத்திய அரசின் சரிபாதி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் சுயகௌரவம் உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். யாரைத்திருப்திப்படுத்த இந்த வார்த்தைகள் வெளிவந்தன என்பது தெரியவில்லை.

ஆனால் சும்மா, பேச்சுக்காகக் கூறியது கூட ஆவணமாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஹெல உறுமய, வடக்கு கிழக்கிற்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் அதிகார பகிர்வு குறித்துப் பேச அமைச்சர்களுக்கு அருகதை இல்லையென்றும் கூறியுள்ளது.

இடதுசாரி தத்துவதற்குள் ஊறித் திளைத்தவரும் சமதர்ம கருத்தியல் வாதியுமான வாசுதேவ நாணயக்கார வடக்கு மக்களுக்கு சுய நிர்ணய உரிமை அல்ல சுய நிர்வாக உரிமையை வழங்கவேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்.

இதேவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விதித்த காலக்கெடு பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று ஆசிரியர் தலையங்கத்தை தீட்டியுள்ளது.

குழந்தை பெறுவதற்குக் கூட ஒன்பது மாதங்கள் தேவை. பத்து சுற்றுப் பேச்சுவார்த்தையில் காலக்கெடு விதித்து புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எட்டு மாதங்களுக்குள் தீர்வுகாண முயல்வது சாத்தியமா? என்று கேள்வியெழுப்பியுள்ளது.

அறுபது வருடங்களுக்கு மேல் இனவிவகாரத்தில் ““தீர்வு'' என்ற குழந்தையைப் பெறமுடியாமல் இருப்பதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் தமிழ் மக்களுக்கே தெரியும்.

எனவே சர்வதேச மற்றும் இந்திய மருத்துவிச்சிகளாலேயே சுகப் பிரசவத்திற்கு உதவ முடியும் என்பதை தமிழ் மக்கள் திரும்பத் திரும்பக் கூறுவதை இங்கு பதிவு செய்கிறோம்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.