குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் பேச்சுவார்த்தை தொடராது- சம்பந்தன் செவ்வி!

07.08.2011---அரசாங்கத்துடனான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடரவேண்டுமானால் அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவேண்டும்.  அத்துடன் எழுத்து மூலமான தனது நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தலைவர்
இரா.சம்பந்தன் தினக்கதிருக்கு தெரிவித்தார்.

‘தமிழ்த்தேசியக்கூட்டடமைப்பு தற்போது எடுத்திருக்கும் முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டது ஒன்றல்ல. ஆற அமர ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது. எமது பொறுமையை,  நாங்கள் வழங்கிய கால அவகாசத்தை அரசாங்கம் தனக்கு சாதகமாகவே பயன்படுத்தியே வந்துள்ளது. நாங்கள் எழுத்தில் வழங்கிய யோசனைகளுக்கு அரசாங்கம் சரியான பதிலை எழுத்தில் வழங்கவில்லை. அரசியல் தீர்வு காணுவதை இழுத்தடிப்பதே அரசாங்கத்தின் ஒரே நோக்கம் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

இச்சூழ்நிலையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடருவது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. சர்வதேச சமூகமும் தற்போயை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றது’ என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசாவிடம் தினக்கதிர் தொடர்பு கொண்டு கேட்ட போது பேச்சுவார்த்தை என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கம் எம்மை ஏமாற்றிக்கொண்டு காலம் கடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

எங்களை நம்பியிருக்கும் தமிழ் மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும், நாம் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறோம். ஆனால் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அரசாங்கம் எம்மை ஏமாற்றுவதற்கு இடம் கொடுக்க முடியாது. எமது மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், சர்வதேச நாடுகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் நடந்து இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தை நாங்கள் கையாளுவோம் என்றும் மாவை சேனாதிராசா தினக்கதிருக்கு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையும்!

07.08.2011--இலங்கை அரசும் தமிழ் தேசய கூட்டமைப்பும் அரசியல் தீர்வு விடயமாக கடந்த எட்டு மாதங்களாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி இருந்தபோதும் அரசு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு வந்ததனால் பத்தாவது சுற்றுடன் பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது.

இந்த பேச்சுவாத்த்தையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளிலும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல போரிக்கைகளை முன்நிறுத்தி அரசுடன் பேசி வந்தது ஆனால் இலங்கை அரசோ அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அதிக அக்கறை காட்டாமல் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை தொடர்ந்து உதாசீனம் செய்துகொண்டே வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தையும் இடையில் முறிவடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துவிட்டோமெனவும் நாட்டில் தற்போது பூரண சமாதானம் நிலவுவதாகவும் அரசு சர்வதேசத்திற்கு கூறிக்கொண்டு வருகின்றது அத்துடன் சரணடைந்த புலி உறுப்பினர்களையும் புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலைசெய்வதாகவும் அரசு கூறுகின்றது

ஆனால் அவசரகால சட்ட விதிகளின் கீழ் சந்தேசத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கு அரசு தயக்கம் காட்டுகின்ற விடயமானது தமிழ் மக்களை தொடர்ந்தும் அடிமைகளாகவே வைத்திருக்க போகின்றோம் என்பதனை பறைசாற்றுகிறது.

அரசியல் கைதிகளின் விடுதலை இன்றி அரசு மேற்கொள்ளுகின்ற எந்த அரசியல் தீர்வு யோசனைகளும் தமிழ் மக்களுக்கான உண்மையாக தீர்வு விடயமாகவும் அமையமாட்டாது.

எனவே இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச சமூகமும் எதிர்காலத்தில் எடுக்கப்போகின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் படியாக அமையப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை.

அனைத்திலங்கை அரசியல் கைதிகளின் ஒன்றியம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.