குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

மன்னாரின் படுகைக் கடலில் எண்ணெய் தோண்டுவதற்கான பணிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது:-

07.08. 2011  கீழே சில செய்திகள்.... மன்னாரின் படுகைக் கடல் பகுதியில் இலங்கை எண்ணெய் தோண்டுவதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பசில் ராயபக்ச தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
 
இலங்கை எண்ணெய் இருக்குமிடத்தைச் சரியாகக் கண்டு பிடித்தால் எண்ணெய் இறக்குமதிக்காக  ஏனைய நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து இது குறித்துக் குறிப்பிடுகையில் இலங்கை எண்ணெய் இருக்குமிடத்தைச் சரியாகக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் மேற்கு நாடகளால் மத்திய கிழக்கு நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்வதைப் போன்று நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
 
ஹைர்ன் இந்தியா என்ற நிறுவனத்திற்கே மன்னார் படுகையில் மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இன்னும் சில மாதங்களில் அவை தோண்டப்படுமிடத்து  மன்னார்க் கடல்பிரதேசத்தலிருந்து ஒரு பில்லியன் பரல் எண்ணெயை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இலங்கையின எண்ணெய் தோண்டும் முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் 2014இல் வர்த்தக ரீதியிலான எண.ணெய் உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என்று முன்னதாக ஹைர்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.
 
மன்னாரின் இரண்டு பிரதான எண்ணெய்ப்படுகைப் பிரதேசங்களை முறையே சீனாவும் இந்தியாவும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஷ்யாவின் பிரதான எண்ணெய்க் கம்பனியான ஹஷ்ப்ரம் என்ற நிறுவனமும் இந்த எண்ணெய் தோண்டும் பணியில் ஈடுபட ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய முயற்சி – விமல்
07.08. 2011 
பயங்கரவாதம் இல்லா தொழிக்கப்பட்ட போதிலும்
வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு முயற்சி செய்வதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் சில வெளிநாட்டு சக்திகள் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் தலையீடு செய்ய முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டு வரும் காணொளிகளும் இந்த முயற்சிகளின் ஓர் அங்கமாகவே நோக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சில சர்வதேச ஊடகங்கள் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த முன்னரங்குகளில் கடமையாற்றிய படையினர் சம்பளம் பற்றியோ மேலதிக நேரக் கொடுப்பனவு பற்றியோ கவலைப்படாது நாட்டுக்கா உயிர்த்தியாகம் செய்து போராடியதாகத் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக பொருளாதார அபிவிருத்தியை தாங்கிக்கொள்ள முடியாத சில வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு எதிராக சேறு பூசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான முயற்சிகளை ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலம் முறியடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரை நாடு கடத்தக் கூடாது – கனேடிய நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவு:-
.07.08. 2011 
ஷன் ஷீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற தமிழர் ஒருவருக்கு சார்பாகவே இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

தற்கொலை தாக்குதலுக்காக தனது உடமைகளை பயன்படுத்தியதாக இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இலங்கை தமிழர் ஒருவரை நாடு கடத்தக் கூடாது என கனேடிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
 
 
கடந்த வருடம் ஷன் ஷீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற தமிழர் ஒருவருக்கு சார்பாகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புக்கு இந்த நபர் உதவியதற்கான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.