குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது எனப்பேசத் தேவையில்லை.

 06.08.2011-இலங்கையில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதால் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை எனவும் அரசியலமைப்பு ஒன்று இருப்பதாகவும் அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் அரசால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும் எனவும் ஏனெனில் வடக்கு கிழக்கில் இப்போது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராயபச தெரிவித்துள்ளார்.
 
 
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தத் தொலைக்காட்சியே இந்தியாவில் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. இதனால் இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் மட்டுமன்றி மற்றைய மாநிலங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
 
கொலைக்களம் ஆவணப் படத்தை இரு தடவைகள் ஒளிபரப்பியதைத் தொடர்ந்து ஹெட்லைன்ஸ் டுடே கோத்தபாயவின் பேட்டியையும் இப்போது ஒளிபரப்பி உள்ளது.அந்தப் பேட்டியில் தமிழர்களுடனான நல்லிணக்க முயற்சியில், புலம்பெயர் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளலாமே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே கோத்தபாய, தீர்வு என்று இனியும் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 
 
இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது. இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. மிகப் பெரிய பயங்கரவாதிகளை நாம் தோற்கடித்திருக்கிறோம். ஆனால் இதனைச் செய்ய முடியாமல் பல நாடுகள் திண்டாடி வருகின்றன. அப்படியிருக்கையில் அனைத்துலக விசாரணையைக் கோருபவர்கள் எம்மை நம்ப வேண்டும்.
 
ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு. சர்வதேச சமூகத்தில் உள்ள ஒரு சில நாடுகள் இதனைச் செய்யக் கூடும். ஆனால் மீதி மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா வரைக்கும், நிச்சயமாக இந்தியாவும் எங்களை ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் என்று அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. இவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா தனது நாட்டுக்குள் அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எந்த ஒரு இறைமையுள்ள நாடும் அப்படி அனுமதிக்காது.
 
போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் எம்மைச் சந்தேகப்பட வேண்டும், ஏன் அவர்கள் அரசு மீது சந்தேகங்கொள்ள வேண்டும், ஏன் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான்.
 
 
 
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியது அவரது அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக.  உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது அவருக்கு அக்கறை இருந்தால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிப்பதை அவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களே.
 
அப்படிப்பட்ட விடயங்கள் வரும்போது அவர்கள் மௌமாகிவிடுவார்கள். அப்போது இலங்கைத் தமிழர்களின் நலன்கள் குறித்து அவர்கள் பேசமாட்டார்கள்.ஜெயலலிதாவுக்கு உண்மையான நிலைவரத்தைப் புரிய வைக்க முயன்றிருக்கிறோம். அதற்காகவே அவருடன் ராஜதந்திர மட்டத்தில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. 
 
 
அரசியல் தீர்வு தாமதிக்கப்படுவதால் மீண்டும் ஒரு ஆயுத வன்முறை தோன்றக்கூடுமா?
 
 
அரசியல் தீர்வு பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. ஏனெனில் இந்தியாவின் போதனையுடன் 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது அது பற்றிப் புலிகளுடன் பேசப்பட்டது. அந்தத் திருத்தச் சட்ட மூலம் வரையப்பட்ட போது இலங்கை அரசுக்கு அதில் எந்தப் பங்கும் இருக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு என்று வந்தபோது நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்கத்தயாராக இருக்கவில்லை.
 
இப்போதும் அதுதான் எனது பொறுப்பு. நானும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்கப் போவதில்லை. பாதுகாப்பு விடயத்தில் எந்தவொரு தளர்வையும் நான் அனுமதிக்க மாட்டேன். ஏனெனில் அதனை நாம் செய்ய முடியாது. நாங்கள் தொடர்ந்தும் எமது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்திக் கொண்டே செல்வோம்.
 
அங்கே சண்டையிடுவதற்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் இல்லை என்ற போதும், புலனாய்வுப் பணிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள், ஆயுதங்கள் இலங்கைக்குள் எடுத்து வரப்படுவதைத் தடுப்பதற்கான பணிகள், கரையோரப் பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் இருப்பதால் பாதுகாப்பை நாம் ஒருபோதும் தளர்த்த மாட்டோம்.
 
 
இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதாவது இப்போது புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாயிற்று. அதனால் இப்போதிருப்பதைவிட மேலான ஒன்றைச் செய்வதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை. இந்த அரசமைப்பு அதிகாரங்களை அடிமட்டம் வரைக்கும் வழங்குகிறது. இப்போதுகூட உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி இருக்கிறோம். விரைவில் மாகாண சபைத் தேர்தலையும் ஜனாதிபதி நடத்த இருக்கிறார். எனவே அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம் என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
 
 
உதயன் மீதான தாக்குதல்
 
 
உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன.
 
ஆனால் இராணுவச் வாடிக்கு மிக அருகில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதே?
 
 
இப்படி இலகுவாகச் சொல்லிவிட முடியும். அப்படியானால் நான் உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கிளிநொச்சியில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டார். அவரது உடல் சோதனைச் சாவடியில் இருந்து 25 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மக்கள் என்ன நினைத்தார்கள் யாரோ அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று. ஆனால், உண்மை என்னவென்றால் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஒன்று அவரை மோதித் தள்ளிவிட்டுப் போய்விட்டது என்பதுதான்.
 
 
ஆனால் காயங்களைப் பார்க்கும் போது அவர் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றனவே?
 
அப்படி நடந்திருக்கலாம். அதுபற்றி நிச்சயம் பொலிஸ் விசாரிக்கும். அதற்காக ஏன் அரசையும் பாதுகாப்புப் படையினரையும் எல்லோரும் கண்டிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னர் இப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால் அதில் என்னவாவது அர்த்தம் இருந்திருக்கக்கூடும். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் இப்படிப்பட்ட சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என கோத்தபாய தனது செவ்வியில் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.