குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

வரியுருமாப் பயனகம் யுனிக்கோட் பயன்பாடு

வரியுருமாப் பயனகம் 
 
பார்க்கா படிக்க முடியாத வடிவில் கணித்திரையில் தோன்றும் தமிழ் இயலை படிப்பதற்கு ஏற்றவாறு மாற்றித் தருகிறது பார்க்கா.  கணியத்தில் இல்லாத எழுத்துருவில் இயல் அமைந்திருந்தாலும் யுனிக்கோட் சீருருவில் படிக்குமாறு வெளிப்படுத்துகிறது.
மாற்றா ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இயலை நாம் விரும்பும் வேறு எழுத்துருவிலோ அல்லது யுனிக்கோட் சீருருவிலோ மாற்றித் தருகிறது மாற்றா.
கடிதா யுனிக்கோட் சீருருக்களை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வரியுருமாவின் பயன்பாட்டு மெல்லியமே கடிதா. ஒரு பொது வடிவமைவு யுனிக்கோட் சீருருக்களுக்கு உண்டு என்பதால் அதனைப் பயன்படுத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் தமிழால் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதே இம்மெல்லியமாகும். 
ஓருலா பயனாளர் எந்த ஒரு யுனிக்கோட் இயைபுள்ள பயன்பாட்டு மெல்லியத்திலும் நேரடியாக யுனிக்கோட் சீருருக்களில் தட்டச்சு செய்ய ஓருலா பயன்படுகிறது. 
சேர்க்கா சேர்க்காவில் உள்ள விசை சேர்க்காவை பயன்படுத்தி நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் விசை ஒழுங்கிலேயே யுனிக்கோட் சீருருக்களை பயன்படுத்த வழி செய்கிறது.
யுனிக்கோட் சீருருக்கள் வரியுருமாவுடன் வெவ்வேறு வடிவிலான யுனிக்கோட் சீருருக்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.