குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி.... 04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்

இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம். பற்றி....

04.08.2015-இத்தாலியில் அமைந்துள்ள சாய்ந்த கோபுரம்.

கி.பி  1174 முதல் 1350 இல் கட்டி நிறைவு பெற்றது-175 ஆண்டுகளில்  கட்டி நிறைவு கண்டுள்ளார்கள்.

இத்தாலியில் பீசா என்ற அழகான நகரத்தில்  ஒரு மாதா தேவாலயத்தின்  மணிக்கூட்டு  கோபுரமாகவே  இது   எட்டு மாடிகளைக்கொண்ட  கோபுர மாக இருக்கின்றது.

இக்கோபுரமே  நகரத்தின் பெயரால் பீசா  என்றழைக்கப்படுகின்றது.

 

வெள்ளைச்சலவைக்கல்லால் ஆனது  நேரில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். சூரிய ஒளியுடன்  காண்கையில் கண்ணும் மனதும்  களிப்புறவதை  கலையுணர்வு மிக்க மாந்தர் உணர்வர்.

 

ஏனையோர்  ஒரு  பொருளைப்பார்ப்பதுபோல்  பார்ப்பர்கள் சற்று   வியப்புடன் பார்ப்பார்கள்  இது மனிதர்களுக்கிடையிலான   களிப்பு கலையுணர்வுகளுக்கிடையிலான  வேறுபாடு.

 

இந்த  நகரத்தின் பெயரில்  பிரசித்தமான  இத்தாலிய உணவுவகைகளில் ஒன்றான  பீசாவும் உலகமக்களி டையே அறியப்பட்டது.  இந்த உணவு இந்தியாவின் குப்பங்களையும்  ஆக்கிரமிக்கின்றது.   அந்தந்த இன மக்களின் உணவுப்பழக்கங்களை மேற் உலக வியாபார  உணவுகள் பாதிக்கின்றன- உடல் நலக்கேடுகளும் அதிகரிக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு  காக்கா முட்டை என்ற சினிமாப்படம் தமிழகத்திலும்   தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரபல்யம். தமிழர்கள்பாடத்தைப்படிப்பாகப் பார்ப்பது போல்  இப்படத்தின் நோக்கத்தையும் உணர்வதாகத்தெரியவில்லை.  இது இப்படியே இருக்கட்டும் நாம் சாய்த கோபுரத் தகவலுக்கு  மீண்டும் செல்வோம்.

 

பீசா நகர சாய்ந்த கோபுரம்  என்றே  அழைக்கப்டுகிறது.

 

இதுவரையில் 16  அரை அடி வரை சாய்ந்துள்ளது. இக் கோபுரத்தை  கட்டிக் கொண்டு   இருக்கும்போதே  சாய்யத் தொடக்கிவிட்டது   என்பது  உண்மை.

 

மூன்றாம் மாடியைக்கட்டிக் கொண்டு இருக்கும் போதே அது  சாயத் தொடங்கிவிட்டதாம்.

 

எனினும் சாய்விற்கமைய  போராடிப்போராடி  கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு மிகுதி 5  மாடிகளையும் கட்டி  நிறைவு  செய்துள்ளனர் கி.பி 1350 ஆம் ஆண்டில்.

 

கோபுரத்தின்  உயரம்   179 அடிகளாகும். கீழ் மடிகளின் சுவர்கள் 13 அடி கனதியிலும். இறுதி மாடிகள்  6 அடி  கனதிதிச் சுவராகவும்    அமைக்கப்பட்டுள்ளது.

 

முதல் மாடியில் 15 துாண்களும்  அடுத்த மாடிகளில் 30 துாண்களும்  மேல் மாடியில் 12 துாண்கள் உள்ளன. உச்சி மாடியில் மணிகள் உள்ளன. இந்த உச்சிவரை செல்வதற்காக கோபுரத்தின்  உள்ப்பகுதியிலே 296 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கோபுரத்தின் உச்சியில் நின்று  ஒரு கல்லினைப்போட்டோம் என்றால்   கோபுரத்தின்  கீழ் சுவரைவிட 16 அரை அடி  விலத்தியே கல் விழுந்திருக்கும்.

 

கோபுரத்தின் உச்சியில் நகரைப்பார்த்து இரசிப்பதற்கு  மேடையுள்ளது.  மத்திய தரைக்கடலையும் பார் க்கலாம்.

 

இந்தமேடையில்  இருந்து   தான்1859 ஆம் ஆண்டு இத்தாலிய விஞ்ஞானியான   கலிலியோ  மேலிருந்து விழும்  பொருட்களின்  விசைபற்றிய ஆவினைச்செய்தார்.

 

சேர் மன் நாடு கொப்பநிக்கசு  தான்  முதன்முதலில் பூமி உருண்டை  என்றும் பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற தன் ஆய்வு நுாலை  30 ஆணடுகள்  மறைத்து வைத்திருந்து  விட்டு    இறக்கமுன் வெளியிட விரும்பி மரணப்படுக்கையில் இருந்தபோது  வெளியிட்டார். மதவாதிகள்  கிளர்ந்தெழுந்தார்கள். தமது   வேதத்தை (வைபிளை ) அவமதிக்கின்றார் என்றார்கள் மதச்சட்டப்படி   தண்டனை வழங்கவும்  முயன்றார்களாம் அதற்கு முன்  கொப்பநிக்கசு  இறந்து  விட்டார்.

 

இதன்  பின் கலிலியோ பூமி உருண்டை என்பதை நிரூபித்துக்காட்டியதும்   உலகமக்கள் ஏற்கத் தொடங்கியதும்  புதியஏற்பாடு  மதவாதிகளால் உருவாக்கப்பட்டது. இதுதான் பழைய  ஏற்பாடு புதிய ஏற்பாடு  என்ற இரு நிலைகளை  வேதத்தில் ஏற்படுடுத்தியது.

 

இக்கோபுரத்தின்  சாய்வினைத்தடுக்க  கட்டிடத்துறைவல்லுனர்கள் முயன்றனர் முயற்சி  வெற்றி கொடுத்துள்ளது.

 

ஐ.நா.சபையின்   யுனசுகோ அமைப்பும் 1989 இல்  இக்கோபுரத்தை  பாதுகாக்கும் பணியைப்பொறுப்பேற்றுக் கொண்டது.

 

பழுதுபார்க்கும் பணிகள்  தொடர்ந்தன  கற்களுக்கு இடையிலான  மண்கள் கழிவுப் பொருட்கள் லேசர்  மற்றும்  உளி  சிறிய வகை ஊசிகள் மூலும் அகற்றப்பட்டன.

 

6 மில்லியன் பவுண் செலவில் கிட்டத்தட்ட 5.5 டிகிரி பாகை  என்ற வீதத்தில் சாய்திருந்த  கோபுரத்தை மீட்கும் விதமாக தற்போது 3.9 டிகிரி அளவிற்கு சரி செய்து  விட்டார்கள்.

 

இன்னும் 200 ஆண்டுகளுக்கு  சாய்ந்த கோபுரத்திற்கு  எந்த ஆபத்தும் இல்லை  ஓபரா பிரமாசியால் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சாய்ந்தகோபுரம்  பார்த்தோம் என்பதுடன் நிற்காது  அதனைப்பற்றி அறிதல்  நன்றுதான்.

 

தொகுப்பு-பூநகரி. பொ. முருகவேள் ஆசிரியர். சுவிற்சர்லாந்து.04.08.2015-