குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, மாசி(கும்பம்) 22 ம் திகதி சனிக் கிழமை .

நில எடுப்பு மசோதாவுக்கு யெயலலிதாவும் எதிர்ப்பு!

16.07.2015-சென்னை: மோடி அரசு கொண்டுவரவுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக சில சட்டத் திருத்தங்கள் இருக்கின்றன என்றும், அதனால் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற  கூடாது என்றும் தமிழக முதல்வர் யெயலலிதா கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக மத்திய அரசுடன் அவர் இணக்கமாக இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், இன்று முதன்முதலாக நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மோடியின் கனவுத் திட்டமான நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு,  நாடு முழுவதும்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் தாண்டி பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது. கடந்த ஓராண்டில் மோடி அரசு, மூன்று முறை நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்ற முடியாமல் போனது.

 

மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும், மாநிலங்களவையில் போதிய அளவிற்கு உறுப்பினர்களின் பலம் இல்லாததால் பாஜகவின் நில எடுப்பு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் இந்த முறை கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலாவது தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள பிரதமர் மோடி, பகீரத பிரயத்தனம் செய்துவருகிறார்.

 

இந்நிலையில்,  இன்று (புதன்கிழமை) பிரதமர் மோடி தலைமையில் `நிதி ஆயோக்`  ஆலோசனைக்  கூட்டம் நடந்துவருகிறது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா,மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 12 மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை. இதனால் பரபரப்பு நிலவியது.

 

இதனையடுத்து,  தான் பங்கேற்காதது குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், " சில அவசர அரசு அலுவல்கள் இருப்பதாலும், அவற்றை வேறு தேதிக்கு மாற்ற வாய்ப்பில்லாததாலும் நான் இன்று நடைபெறும் 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு

 

மேலும் அந்தக் கடிதத்தில்,   நிலம் கையக சட்டத்திருத்த மசோதாவின் 3வது பிரிவிலுள்ள அம்சங்களை ஏற்க முடியாது என்றும், சில சட்ட திருத்தங்கள் விவசாயிகள் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும், எதிர்ப்புக்குரிய சட்டத்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்றக் கூடாது என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

 

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதையும், மோடி அரசு கொண்டு வந்த நிலம் கையக சட்டத்திருத்த மசோதாவுக்கு இதுநாள் வரை அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாமல் இருப்பதையும் முடிச்சு போட்டு,  இம்மசோதாவுக்கு ஜெயலலிதா ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே மேற்கூறிய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் ஜெயலலிதா.

 

ஏற்கனவே இம்மசோதாவுக்கு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த எதிர்ப்பில் தற்போது அதிமுகவும் இணைந்துள்ளது.

 

ஜெ. எதிர்ப்பு உறுதியானதுதானா?

 

அதே சமயம் நிலம் கையக சட்டத்திருத்த மசோதாவின் சில பிரிவுகளுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவிப்பது உறுதியான நிலைப்பாடுதானா அல்லது விவசாயிகளுக்கு எதிரான கட்சி அதிமுக என்ற முத்திரை குத்தப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, பெயரளவுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

 

ஏனெனில் மோடியின் ஆத்ம நண்பர் அதானியின் நிறுவனத்துடன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், சுமார் ரூ.4,536 கோடி மதிப்பீட்டில் சூரிய மின்சக்தி நிலையம் அமைத்து 648 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க அண்மையில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதனையடுத்து,  அதானி குழுமத்திற்கு ஏன் இத்தனை சலுகை என்ற கேள்வியுடன், தமிழக எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை. எனவே மோடி அரசுடன் ஜெயலலிதா இணக்கமாகவே உள்ளார் என்றும், நில எடுப்பு மசோதாவுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது தெரியவில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.