குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கோலாவால் கோளாறுகள் இப்படியானமக்கள்நலச் செய்திகளை எத்தனைஊடகங்கள் வெளியிடும்.

 உடல்நலச்செய்திகள். குமரிநாட்டின் பழைய வெளியீடுகளில் உடல்நலப்பகுதியும்  கட்டுரைகளில் தமிழின வரலாறும் தமிழ்மொழியின் வரலாறும் நன்கு தொகுத்துவெளியாகிவந்தது. சவுதியில் இருந்து சில விசமிகளால்  குமரிநாடு இணையமே முற்றாக அழிக்கப்பட்டதிலிருந்து அவைதற்போது இல்லை மீண்டும் கொண்டுவருவோம்.....கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக்கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்களின்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கொக்கோகோலா, பெப்சி, லிம்கா போன்றவை பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட் டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக்கின்றனர்.

கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல்,  குழந்தைகள் , நீரிழிவு நோயாளிகள், கருவுற்ற பெண்கள்,  ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை யூட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவைக் கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண் ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்படச் செய்யும் பாஸ்பாரிக் அமிலம், இதில் 55 சதவிகிதம் உள்ளது.

இதனால், கோலாவில் அமிலத் தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத் தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை யூட்டியும் சேர்க்கப்படுவதால், வினிக்கரை விட சுவையாக உள்ளது. கோலாவை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும் பல்லில் குழி விழும், நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி .பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்களோ, வைட்டமினோ, தாதுப் பொருள்களோ இதில் இல்லை.

இதில் உள்ள சர்க்கரை, உடனடி யாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.

குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின் றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70-_125. தேநீரில் 15_75, கோகோவில் 10-17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60_70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில் 50-_65 அளவு உள்ளது.

இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் உள்ள புண்ணை அதிகரிக் கின்றன. உடலிலிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது.

காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய்மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது.

காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்கு விக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகி யவை ஏற்படுகின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன் தூக்கம் வராமல் அவதிப்படுவர்.

தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண் டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

 நெல்லி

நீர் கலக்காத ஒரு நெல்லிக் கனியின் சிறப்பு 1 கிலோ அன்னாசி அல்லது 2 கிலோ கொய்யா அல்லது 9.5 கிலோ ஆரஞ்சு அல்லது 10 கிலோ -திராட்சை அல்லது 52 கிலோ வாழைப்பம் அல்லது 102 கிலோ ஆப்பிள் அல்லது 150 குவளை பால் இவற்றிற்குச் சமமாம் ஒரு நெல்லிக்கனியின் சாறு. அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி ஏன் கொடுத்தார்? காரணம் இப்பொழுது புரிகிறதா?

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.