குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மிகப்பெரிய கட்டிடம்

  உயரமான கட்டிடம்--உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ச் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் யெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என அழைக்கப்படுவது புர்ச் கலிபர் தான். மொத்தம் 822 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், ஹோட்டல்கள், ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுப் போக்கு தளங்கள் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.

ஆனால், யெட்டாவில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள கட்டிடம் 1000 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். இதற்காக 2 சதுர மைல் பரப்பளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கிங்டம் டவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை கட்டப் போவதாக, 2008ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு கட்டிடப் பணிகளுக்கு தடையாக அமைந்தது.

உலகப் பொருளாதாரம் சீ்ரடைந்துள்ள நிலையில், சிக்காகோ கட்டிடக் கலை நிபுணர் ஆபிரியன் ஸ்மித் மற்றும் கோர்டன் கில் ஆகியோரின் வடிவமைப்பில் வரும் 2016ம் ஆண்டிற்குள் கிங்டம் டவர் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்திற்குள், பிரபல ஹோட்டல்கள், குடியிருப்புகள், சொகுசு அறைகள், அலுவலகங்கள் ஆகியவை அமையும் எனத் தெரிகிறது. கட்டிடத்தின் மொத்த கட்டுமான செலவாக, 20 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த கட்டிடத்தின் பணிகள் சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணிகளில் நிபுணரான இறந்த தீவிரவாதியான பின்லாடனின் நிறுவனமான சவுதி பின்லாடன் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.