குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

சோனியா காந்திக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை.அப்பாவிகளின் அடிவயிற்றில்அடித்தவரை அறம்தண்டித்தே ஆகும்

06.08.2011  சோனியாகாந்தியின் உடல் நலம் குறித்து பல் வேறு செய்திகளும் கசிந்துள்ளதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 8ஆம் மாதம் 21-ஆம் தேதியே சோனியாகாந்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும். அவரால் இயல்பாக இருக்க முடியாத அளவுக்கு அவதிப்பட்ட நிலையில் சோனியாவை பரிசீலித்த டில்லி மருத்துவர்கள். மிகவும் கவலையடைந்துள்ளனர்.

உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லும் முடிவும் அங்கு எடுக்கப்பட்ட அதே நேரத்தில் சோனியாகாந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களுக்குக் கூட இந்த தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே சோனியாவை தனி விமானத்தில் வைத்து அமெரிக்காவின் புகழ் பெற்ற  நியூயார்க் ஸ்லோவான் கேட்டரிங் புற்று நோய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

உலகிலேயே புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவமனையில் சோனியா கொண்டு செல்லப்பட்ட போது இந்தியாவிலிருந்தும் ஒரு மருத்துவக்குழு அவருடன் பயணித்திருக்கிறது.

ராகுல்காந்தி, ப்ரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரரா ஆகியோர் அவருடன் உள்ள நிலையில் தத்தாத்ரேய் நோரி என்ற உலகப்புகழ் பெற்ற மருத்துவர் சோனியாவின் அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் கசிந்துள்ளன. 

சோனியா ஏற்கனவே ஒரு முறை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று வந்த நிலையில் இந்த முறை செய்திகளை மறைக்க இயலவில்லை. மிகவும் கவலைக்கிடமான சூழல் நிலையிலெயே அவரை அமெரிக்கா கொண்டு சென்றூ அவசர அவசரமாக அறுவை சிகிச்சையையும் முடித்துள்ளனர். இதனால் இந்தியா முழுக்க அரசியல் வட்டாரங்களின் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

 
 சோனியா காந்திக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை.
 
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் சோனியாகாந்தியை கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக எங்கும் காணவில்லை.பின்னர்தான் தெரிந்தது அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதென்று. ஆனால் இது குறித்து காங்கிரஸ் கட்சி எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் அதையும் மீறி இந்த செய்தி கசிந்த பின்னர் ஊடகவியலாளார்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜனார்த்தன் திவேதி  வெளிநாட்டில் சோனியா சிகிச்சை பெறுகிறார் என்று மட்டும் சொன்னார்.
 
ஆனால் எந்த நாடு என்பதைச் சொல்லவில்லை. எந்த நாடு, என்ன உடல் நலக் கோளாறு என்று கேட்ட கேள்விக்கு  பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட உரிமைகளும் உணர்வுகளும் உள்ளன. அவர்கள் உடல் நலம் குறித்த ரகசியத்தை பாதுகாக்க உரிமை உண்டு.இதை ஊடக நண்பர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். உண்மையில் சோனியா பல நாட்களுக்கு முன்னால் அவர் அமெரிக்கா கிளம்பிப்போய் விட்டதாகவும். அமெரிக்காவின் புகழ் பெற்ற மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்படிருப்பதாகவும் அவருக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சோனியா வகித்து வந்த பொறுப்புகளை கவனிக்க நான்கு பேர் கொண்ட உயர் குழுவை கட்சி அமைத்திருக்கிறது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.