குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

டக்ளசுதேவானந்தா இந்தியா வந்த போது ஏன் கைது செய்யவில்லை மத்திய அரசுக்கு பத்திரம் அனுப்ப உத்தரவு

06.08.2011-ஈழப் போராளிகள் இந்திய அரசின் அனுசணையோடு சென்னையில் தங்கியிருந்த எண்பதுகளில், 1986-ஆம் ஆண்டு திருநாவுக்கரசு என்பரை சுட்டுக் கொன்ற வழக்கில் டக்ளசு தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார். இந்நிலையில்  2009 - ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் அவர் ராலயக்சவோடு டில்லி வந்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியான டக்ளசுதேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.
 
அப்போது பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு யாமீன் வழங்க வேண்டும் என்று டக்ளசு தரப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு டக்ளசு தேவானந்தாவுக்கு யாமீன் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவருக்கு யாமீன் மறுக்கப்பட்டது. யாமீனை மறுத்த நீதிபதி டெல்லிக்கு வந்தபோது டக்ளசு தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை.தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது  என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு பத்திரம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்..
டக்ளசுதேவானந்தா இந்தியா வந்த போது ஏன் கைது செய்யவில்லை - சென்னை உயர்நீதிமன்றம்சென்னை உயர்நீதிமன்றம் - மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

06.08.2011-ஈழப் போராளிகள் இந்திய அரசின் அனுசணையோடு சென்னையில் தங்கியிருந்த எண்பதுகளில், 1986-ஆம் ஆண்டு திருநாவுக்கரசு என்பரை சுட்டுக் கொன்ற வழக்கில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளார்.இந்நிலையில்  2009 - ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் அவர் ராஜபக்சவோடு டில்லி வந்தார். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியான டக்ளஸ்தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.
 
அப்போது பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று டக்ளஸ் தரப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஜாமீனை மறுத்த நீதிபதி ஃஃ டெல்லிக்கு வந்தபோது டக்ளஸ் தேவானந்தாவை மத்திய அரசு ஏன் கைது செய்யவில்லை.தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை கைது செய்ய முடியாத நிலை ஏன் ஏற்பட்டது  என்பது குறித்து விளக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்..

கிழக்கு மாகாண சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு மேலும் ஏழு நாள் பொதுமன்னிப்பு?

சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்போருக்கு மேலும் ஓழு நாட்கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
குறித்த பொதுமன்னிப்புக் காலப்பகுதிக்குள் ஆயுதங்களை ஒப்படைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏழு நாள் கால அவகாசம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காலப்பகுதிக்குள் ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் எனவும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்ததன் பின்னரும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய காவல்துறையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன்? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வசந்தன்.
05 .08. 2011 ராயீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைபட்டுள்ள முருகன்,சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் கருணை மனு தொடர்பாக அறிவுரை ஒன்றை உள்துறை அமைச்சகத்திடம் கேட்க இந்திய சனாதிபதி பிரதீபா பாட்டீல் அனுப்பியிருப்பதாகவும்.அந்த மனு தொடர்பாக பாதகமாக முடிவுகள் எதையும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எடுக்கக் கூடாது என்பதுமான செய்திகள் கசிந்து கிடக்கும் நிலையில் மீண்டும் இந்தியாவில் தூக்குத் தண்டனை முறைகள் தேவையா?என்ற விவாதங்கள் மீண்டும் வேர் விடுகின்றன.ராயீவ் கொலை வழக்கின் பின்னர் பலருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதுதான் தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான பொதுப் பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. அதற்கு முன்னரும் பின்னருமாக ஒரு சிலர் சில குற்றவளக்குகளில் தூக்கிலிடப் பட்டிருக்கிறார்கள். ராயீவ் கொலைக்கைதிகளுக்காக அல்ல நாகரீகமடைந்த சமூகத்தில் இம்மாதிரியான கற்கால தண்டனை முறைகளை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. தவிறவும் நவீன கால உலக வரலாற்றில் 120 நாடுகளுக்கு மேல் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அப்படி மரணதண்டனையை ஒழித்து விட்ட நாடுகள் கூட குற்றவாளிகளை பரபஸ்பரம் இன்னொரு நாட்டில் ஒப்படைக்கும் போது கூட தூக்கிலிடக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் கைதிகளை ஒப்படைக்கிறார்கள். என்னும் நிலையில், மரண தண்டனைக்கு எதிரான தீவிரமான விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.
 
 
அரிதினும் அரிது.
..............................
 
1980 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகள் அரிதினும் அரிதான வழக்குகளிலேயே இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.அந்த தீர்ப்பு வ்ழங்கப்பட்ட 1980- லிருந்து 1990 வரையிலான பத்தாண்டுகளில் 40% வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.அரிதினும் அரிதான வழக்கு என்று ஒரு நீதிபதி எதை தீர்மானிக்கிறார். அவரது சமூக,கலாசாரா,மதம் சார் விழுமியங்கள்தான் அதை தீர்மானிக்கிரதா?அவர் பெண்கள் மீதான் வன்முறையையும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளையும் அரிதான வழக்குகள் என நினைக்கிறார் என்றால் 99% வழக்குகளில் தூக்குத் தண்டனையே விதிக்க முடியும். அரிதினும் அரிதான என்ற சொல்லே இப்போது தூக்குத் தண்டனை விஷயத்தில் நீதிபதிகளை ஆட்டிப்படைக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டிட தொழிலாளியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவரின் தூக்குத் தண்டனை உறுதி செய்துள்ளது. அவர் 2007-ல் ஒரு சிறுமியை பாலியல் வன்முறை செய்தார். தடுக்க வந்த சிறுவனை கழுத்தறுத்து திட்டமிட்டு கொன்றார் என்பது குற்றச்சாட்டு. இந்த மனு மீதான தீர்ப்பிலும் நீதிபதி அரிதினும் அரிதான வழக்குகளிலேயே தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது என்று தனது தீர்ப்பை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டியிருக்கிறார்.ஆக எண்பதுகளில் அரிதினும் அரிது என்று சொன்ன உச்ச நீதிமன்றத்தின் வாதம் இன்றுவரை எல்லா தூக்குத் தண்டனைகளுக்குமே முன்னுதாரணமாக மாறி விட்டது.
 

 
ஜனாதிபதியும், உள்துறை அமைச்சகமும்.
........................................................................
 
 
கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் ஒருவருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த பிறகு அவர் சட்ட ரீதியாக இனி போராட வாய்ப்பே இல்லை என்றான பின்னர். தூக்குமர நிழலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு குற்றவாளிக்கு இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள இறுதி வாய்ப்பு கருணை மனு. ஒரு குற்றவாளியின் கருணை மனுவை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு. ஜனாதிபதி இதற்கு முன்னர் இம்மாதிரியான கருணை மனுக்களை ஏற்று அதை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறாரா?என்றால் ஆமாம் அரசியல் படுகொலைகள் அல்லாத தனி மனித உணர்வுகளால் உந்தப்பட்டு செய்யப்படுகின்ற கொலைகளுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்களை பரிசீலித்த ஜனாதிபதி அவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறார்.பிரதீபாபாட்டீல் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் மனோகர் தனது சகோதரின் கொலையால் பாதிக்கப்பட்டு ஒரு குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொன்றார். பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலைவழக்கில் ஷியாம் மனோகரன் தூக்குத் தண்டனை பெற்றிருந்தார். 1997- ல் உச்ச நீதிமன்றமும் இவரது தண்டனையை உறுதி செய்தது. இவரது கருணை மனு உட்பட இதே மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர குமார், நரேந்திர யாதவ் ஆகியோரும் 1999- ம் ஆண்டு தூக்குத் தண்டனை பெற்றனர். இவர்கள் அனைவருமே கருணை காட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தார். நாடெங்கிலும் இருந்து சுமார் 100 கணக்கானோர் கருணை காட்டுமாறு கோரியதில் எட்டு பேரின் தூக்குத் தண்டனையை ஜனாதிபதி ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.
 
 
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். 2009ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தமிழ்நாட்டை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஜனாதிபதி ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் என்பதும் நினைவுகூறத்தக்கது. கடந்த முப்பதாண்டுகளில் 77 பேர் கருணை மனுவை ஜனாதிபதிக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஒரு தூக்குத் தண்டனை கைதிக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையே கருணை மனு. அந்த மனு மீதான வாய்ப்புகள் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது.அப்படியான ஒரு உயிர் வாழ்தலுக்கான வாய்ப்பை வேண்டி தமிழகத்திலிருந்தும் பத்திற்கும் மேற்பட்டோர் ஜனாதிபதியிடம் கருணை மனு போட்டிருக்கிறார்கள்.
 
ஜ்னாதிபதியின் அணுகுமுறை இப்படி இருக்க உள்துறை அமைச்சகமோ இதை எப்படி அணுகுகிறது என்ற அச்சமும் விமர்சனங்களும் விரவியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துறைக்காக அனுப்பப்பட்ட பல மனுக்கள் தண்டனை மீதான கரிசனம் இன்றி திரும்பி வந்த கதைகள் உண்டு. பஞ்சாப் பேராசிரியர் தேவேந்தர் பால்சிங் புல்லாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் நிராகரித்தார்.ஜனாதிபதி நிராகரித்ததன் காரணம் மத்திய உள்துறை அமைச்சகம் இவர் மீதா கருணை மனு மீது கரிசனம் காட்ட மறுத்து திருப்பி அனுப்பியதாலேயே ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்ததார் என்பது செய்தி.கடந்த 16 ஆண்டுகளாக தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பேராசியர் தேவேந்தர் பால்சிங் இன்று எந்த ஒரு வழியும் இன்றி தூக்கு மர நிழிலில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார். பேராசிரியர் தேவேந்தர் பால்சிங் ஒரு வேளை தூக்கிலிடப்பட்டால் அது இந்திய நீதித்துறைக்கு மிகப்பெரிய களங்கமாகி விடும் என்று மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் பேராசிரியரின் கைதும் அவரது வழக்கு விசாரணையும் பாரபட்சமான முறையில் நடந்ததான குற்றச்சாட்டுகளும் உண்டு. என்னும் நிலையில்தான் பால்சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. அந்த உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பிலேயே தமிழகத்தைச் சார்ந்த பலரின் கருணை மனுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் மூன்று ராஜிவ் கொலைக் கைதிகளும் அடக்கம்.
 
 
வேண்டாம் மரணதண்டனை
...................................................
 
மேற்கு வங்கத்தைச் சார்ந்த தனஞ்செய் சாட்டர்ஜி என்பவரை கொல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்ட பின்னர் இந்தியாவில் வேறு எவர் ஒருவரும் தூக்கிலிடப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. ராஜீவ் கொலை வழக்கில் மூவரும், ஜெயலலிதா கைதான போது தருமபுரி பேரிந்து எரிப்பு வழக்கில் மூன்று பேரும், தனிநபர் கொலை வழக்கில் சிலரும் என சுமார் பத்து பேருக்கும் மேல் தூக்கு மர நிழலில் நிற்கிறார்கள். இதில் உணர்ச்சிகரமான விஷயமாகக் கருதப்படுகிற ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிற்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தயார் கடந்த 20 ஆண்டுகளாக தன் மகனைக்காப்பாற்ற அலைந்து கொண்டிருக்கிறார். பேரறிவாளன் ராஜீவ் கொலையில் என்ன செய்தார். அவர் ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்தார். ஆனால் தான் வாங்கிக் கொடுத்த பேட்டரி ராஜீவைக் கொல்லத்தான் என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.கொலையாளிகள் 17 வயது சிறுவனை இங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தவிறவும் அந்த வழக்கில் அவர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட போது அவருக்கு வயது 17.ஒரு சிறுவர் இல்லத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டிய பேரரிவாளனை கொடூரமான விசாரணை மையங்களில் வருடக்கணக்காக அடைத்து வைத்து அவரிடம் இருந்து பெற்ற வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.இன்று அவர் வேலூர் சிறையில் அடைபட்டிருக்கிறார். தன் வாழ்வில் எந்த விதமான சந்தோசங்களையும் காணாத பேரறிவாளன் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோருகிறார். நீதியின் முன்னாலும் ஊடகங்களின் முன்னாலும் அவர் கேட்ட கேள்விகளுக்கான பதில் இன்று வரை எவராலும் வழங்கப்படவில்லை.
 
இந்திய நீதித்துறையில் ஒலித்த மனித உரிமைக் குரலாக ஒலித்த வி.ஆர். கிருஷ்ணைய்யர் // உலகின் நூற்றுக் கணக்கான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ராஜீவ் காந்தியைவிட வஞ்சகமான முறையில் மவுண்ட் பேட்டன் பிரபு கொல்லப்பட்டார். ஆனால், அவரைக் கொன்ற வருக்கு பிரிட்டன் மரண தண்டனை வழங்கவில்லை. கொலை என்பது ஒருவன் ஆத்திரத்தில் தன்னை இழக்கிற கணத்தில், அவன் அறவே வேறு மனிதனாகி விடுகிற சூழ்நிலையில் நடப்பது. அப்போது எந்தத் தண்டனையைப் பற்றியும் யோசித்துவிட்டு அந்தக் கொடுமையை அவன் செய்வதில்லை. மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளைஞர் களுக்கும் இது பொருந்தும். நான் மரண தண்டனைதான் வேண்டாம் என்று சொல்கிறேனே தவிர, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளே வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் நானும் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஏற்று வாழும் குடிமகன்தான். மரண தண்ட னையோ, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் என்ற பிற்போக் குத்தனம் கொண்டது. நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்று ஒரு தீர்ப்பில் எழுதி னேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன். காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அப்சல் மட்டுமல்ல யாரையுமே தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார். // என்கிறார் வி.ஆர்.கிருச்ணைய்யார்.
 
ராஜீவ் கொலைக்காகவே அல்ல ஒரு மனிதன் அந்த நேரத்தில் எழும் உணர்வெழுச்சியால் ஒரு கொலையைச் செய்து விடுகிறான். அந்த உணர்வலைகளில் அடுத்த கணமே மாற்றங்கள் ஏற்படும்.தவிறம் அவன் செய்த தவறுக்கான தண்டனை அளித்து. ஒரு குற்றவாளியை மீண்டும் சமூகத்திற்கு பயன்படும் மனிதனாக மாற்ற வேண்டும் என்பதே தண்டனையின் நோக்கம். ஆனால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் ஒருவர் தினம் தோறும் ஒவ்வொரு இரவிலும் அவர் தூக்கிடப்படுகிறார்.அன்றாடம் அவர் மன ரீதியாக கொல்லப்படுகிறார்.தான் செய்த தவறுக்களுக்காக துடிக்கத் துடிக்க தூக்கிலடப்படும் ஒருவருக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை விதைப்பதுனூடாக மட்டுமே அவரை ஒரு திருந்திய மனிதனாக்க முடியும். அந்த உரிமை எல்லோருக்கும் வழங்கப்படுவதன் மூலம் பெருமளவு குற்றங்களையும் குறைக்க முடியும். தூக்குத் தண்டனை வேண்டாம் என்றால் விடுதலையா? என்று கேட்கிறார்கள் சிலர் ஒரு மரணத்திற்கு தண்டனையாக மரணம் எப்படி தண்டனையாக இருக்க முடியாதோ அப்படித்தான் சிறையும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.