குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இந்தியாவின் பேரரசர் அசோகாவின் பட்டறிவிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வாரா மகிந்தர்? செவிடன்காதில்ஊதி

கலிங்க மன்னனையும் அவனது பல ஆயிரக்கணக்கான வீரர்களையும் போர்க் களத்தில் கொன்றொழித்த மெளரிய வம்சத்து அரசரான அசோகன் தனது முடியை மட்டும் துறந்துவிடவில்லை. இதற்கும் மேலாக அமைதி வழியில் பயணிப்பதற்காக புத்த மேலங்கியினை அணிந்து ஒரு பௌத்த துறவியாக மாறினார். இவ்வாறு நேப்பாள் நாட்டினை தளமாகக்கொண்டThe Himalayan Times ஊடகத்தில் PROF. BIRENDRA P MISHRA எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தற்போது நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலானது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சா, இராணுவ வழி மூலம் சில பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளை மட்டுமே எட்ட முடியும் என்பதையும் இதற்கப்பால் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சமூகத்தவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியற் கோரிக்கைகளுக்கான ஒரு நிரந்தரத் தீர்வாக அமைந்துவிடமாட்டாது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு அக்கினிப் பரீட்சையாகும்.
 
சிறிலங்காவில் வாழும் தமிழினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றதும், தமிழர்களுக்கான தனிநாடு வேண்டிப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்ததுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது வடபகுதியில் 20 ஆசனங்களுக்காக நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 15 ஆசனங்களையும் கிழக்கில் 06 ஆசனங்களில் மூன்று ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
 
தற்போது உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெற்ற தமிழர் வாழ் பிரதேசங்களானது, மே 2009ல் நான்காம் கட்ட ஈழப்போரை ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி கொள்ளும் வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்தது.

விடுதலைப்புலிகளால ஆளப்பட்டுவந்த சிறிலங்காவின் வடபகுதியில் கடந்த மூன்று பத்தாண்டுகளின் பின்னர் தற்போது முதன் முறையாக உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் சிறிலங்கா இராணுவத்தினர் தமது தலையீடுகளை மேற்கொள்ளாதிருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது பெற்றுக் கொண்டுள்ள ஆசனங்களை விட அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் என்பதே தேர்தல் பெறுபேறு வெளிப்படுத்தியுள்ள விடயமாகும்.
 
"கடந்த சில வாரங்களாக தேர்தல் வன்முறைகள் அதிகம் இடம்பெற்று வருகின்றன. இத்தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை சிறிலங்கா காவற்துறையினர் போதியளவில் விசாரிக்கவில்லை. தேர்தல் விதிமுறைகள் மீற்ப்பட்டுள்ளன. அரசாங்கப் பொறிமுறிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நாளாந்தம் பதிவாக்கப்படுகின்றன. சில அமைச்சர்களால் மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்" என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்தவேண்டும் என உள்ளுராட்சி சபைத் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் சிறிலங்கா நாடாளுமன்றத் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்திருந்தார்.

இந்த ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் அரசாங்க அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்திருந்தார். தமது கட்சியின் பரப்புரைக் கூட்டத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினர் தலையீடு செய்வதுடன் குழப்பங்களை விளைவிப்பதாகவும் ஜே.வி.பி முறையீடு செய்திருந்தது.
 
சிறிலங்கா இராணுவத்தினரின் கண்காணிப்பின் தேர்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில், இத்தேர்தலானது  அமைதிமிக்கதாக இருக்கவேண்டும் என சிறிலங்காவின் தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலானது 2010ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாக பல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2.5 மில்லியன் வரையான வாக்காளர்கள் தமது ஆளடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான தேசிய ஆளடையாள அட்டை இல்லாது உள்ளதாக சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இத்தேர்தலின் போது பல கட்சிகள் போட்டியிட்ட போதிலும், சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தது. குறிப்பாக சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுத் தேர்தலானது இறுதிக் கட்டத்தை அடைந்தபோது சிறிலங்கா இராணுவத்தினர் யுத்த வலயங்களில் அகப்பட்டுக் கொண்ட பெருந்தொகையான பொதுமக்கள் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலரை சுட்டுக்கொன்றனர்.
 
வன்னியில் அரங்கேறிய மாபெரும் மனிதப் படுகொலையைக் கண்டித்த அனைத்துலக சமூகம் ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்படுகின்ற சுயாதீன விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது.

முதலாவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரால் நியமிக்கப்பட்ட மூன்று வல்லுனர்களுடன் ஒத்துழைக்க சிறிலங்கா அதிபர் மறுத்துவிட்டார். இந்தக் குழுவானது மர்சுகி தருஸ்மனால் தலைமை தாங்கப்பட்டது.

"2009 ஜனவரியிலிருந்து மே மாதம் வரை பல பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர். இவர்களில் பலர் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பதுங்குகுழிக்குள் கைவிடப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருந்தனர். இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களின் விளைவாகவே கொல்லப்பட்டனர்" என ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இரண்டாவதாக, சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக மகிந்த ராஜபக்ச எட்டுப் பேர் கொண்ட கற்றறிந்த பாடங்களுக்கான இணக்கப்பாட்டு ஆணைக்குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டார்.

மூன்றாவதாக, சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படக் காட்சிகள் போலியானவை என்றும் இதில் காண்பிக்கப்பட்டுள்ள காட்சிகள் தமிழ்நாட்டில் காட்சிப்படுத்தப்பட்டவையாகவோ அல்லது விடுதலைப்  புலிகளால் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகவோ அது இருக்கலாம் என மகிந்த தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

கலிங்க மன்னனையும் அவனது பல ஆயிரக்கணக்கான வீரர்களையும் போர்க் களத்தில் கொன்றொழித்த மெளரிய வம்சத்து அரசரான அசோகன் தனது முடியை மட்டும் துறந்துவிடவில்லை. இதற்கும் மேலாக அமைதி வழியில் பயணிப்பதற்காக புத்த மேலங்கியினை அணிந்து ஒரு பௌத்த துறவியாக மாறினார்.

மெளரிய வம்சத்தவர்களாகிய தாம் போரில் கலிங்கர்களைத் தோற்கடித்த போதிலும் மனதில் உள்ள அழுக்குகளைக் களைவதற்கு அமைதிவழி முறை மட்டுமே சரியான தேர்வாக இருக்கும் என மெளரியப் பேரரசான அசோகன் தீர்மானித்து தன்னை பௌத்த துறவியாக மாற்றிக் கொண்டான் என இந்திய வரலாறு கூறுகிறது.
 
அசோகன் தனது மகனான மகேந்திரா மற்றும் மகளான சங்கமித்தை ஆகியோரை சிறிலங்காவிற்கு அனுப்பி பௌத்த மதத்தை பரப்பியதாகவும் வரலாற்றுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

அதன் பின்னர் இந்த நாடுகளில் அசோக மன்னனால் பரப்பப்பட்ட பௌத்தமதமானது மறுமலர்ச்சி அடைந்து உயிர் பெற்று வாழ்கின்றது. இந்திய தேசத்தின் கிழக்குப் புறத்தே அமைந்துள்ள ஒரிசா மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்த மக்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள் என்பதை வரலாறு சான்றுபகருகின்றது.

சிறிலங்கா அரசாங்கமானது இத்தீவு முழுமையையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் வெற்றிகொண்டுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முதலாவதாக, எந்தவொரு நாடும் பிளவு பட்டுவிடக் கூடாது என்பது சிறிலங்கா அதிபர் வெற்றிகொண்டதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

இரண்டாவதாக, சிறிலங்காத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டிப் போராடுவதே புலிகளின் தலைவரான வே.பிரபாகரனின் ஒருமித்த இலக்காக இருந்தமையாகும்.

சிறிலங்காத் தீவுக்குள்ளே நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதைத் தனது இலக்காகக் கொண்டு புலிகளின் தலைவர் செயற்பட்டிருந்தால் தற்போது பெருந்தொகையான தமது உயிர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காததுடன், பிரபாகரனும் தனது இலக்கை வென்றிருக்க முடியும்.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழர்களும் தமது சொந்த நலன்களைக் கருத்திற்கொண்டு தமக்கான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. தேர்தல் பெறுபேறுகள் மக்களின் மனநிலைகளை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. சிறிலங்கா அரசாங்கமானது தனது சொந்த மக்களின் நேர்மையான அரசியல் அவாக்களை முதன்மைப்படுத்தவேண்டும். 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.