குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர நிபந்தனை விதித்து 2 வாரங்கள் காலக்கெடு கொடுத்துள்ளது

05.08.2011  -தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர வேண்டுமானால் தம்மால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள முன்நிபந்தனைகள் குறித்து அரசாங்கம் தெளிவான பதில்களை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.  இந்த நிபந்தனைகள் குறித்து 2 வார காலத்துள் உரிய பதில் வழங்கத் தவறின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
 
இரண்டு தரப்பும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக இன்று 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.  இதன்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதியான பதில் ஒன்றை வழங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த கோரிக்கை உட்பட உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனையை கூட்டமைப்பு விதித்துள்ளது.
 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அரசாங்கம் இதுவரை, பிரயோசனமான எந்த பதிலையும் வழங்கவில்லை. ஏன்ற நிலையில் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் பதில் கூறவேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையை எதிர்பாருங்கள் சில நிமிடங்களில் இணைக்கப்படும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.