குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழக முதல்வர்களே உங்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் உங்கள் கட்சிஅரசியலால் இறந்தார்கள்

 04.08. 2011 இலங்கைத் தமிழர்களுக்கு அதிகம் செய்ததுயார்?என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்- கருணாநிதி அறிக்கை.தமிழக முதல்வர்களே உங்கள் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் உங்கள் கட்சிஅரசியலால் இறந்தார்கள் என்று எண்ணுங்கள்.. ?நெடுமாறன் அவர்களின் நிதியும் அரிசியும் ஈழத்தமிழர்களுக்கு போகவிடாமல் அசட்டுத்தனம் செய்தது யார்?  அரிசி புழுத்துப்போனதே உலகத்தமிழர்கள் மனங்கள் குமுறியதே வாய்க்கரிசியனுப்பியது யார்?  எம்.யி.ஆர் சிதம்பரம்கப்பல்  அனுப்பினார். ஈழமே அழிந்தபோது  அமைதியாய் இருந்ததுயார்?தமிழர்கள் அழிந்தபோது சென்னையில் உறங்கியவர்கள் மக்களின் மந்திரிப்பதவிக்கு டில்லிக்கு பறந்தது யார்? சகோதரப்படுகொலை எனசாட்டுப்போக்கு சொன்னதுயார்.? தங்கள்குடும்பமே பிடுங்குப்படுகிறதே! தி.மு.க.வும்.தமிழர்கட்சிதான்-அ.தி.மு.க. வும் தமிழர்கட்சிதான். நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவிசெய்ததைப் பட்டியலிடுவதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா? தமிழகம்செய்யாது  வேறுயார் செய்வது. உலகெங்கும் வாழும்தமிழர்களால் இந்திய ஆடைஉற்பத்திக்கும் உணவுப்பொருட்கள் உற்பத்தியாலும் எவ்வளவு என்றும் வெளிநாடுகளிலிருந்து எத்தனை கோடி அன்னியச்செலவாணி ஈழத்தமிழர்களால் வருவாய் என்றும் பொருளியல் அறிவோடு யாராவது சிந்திக்கின்றீர்களா? நீங்கள் கொடுப்பதற்கு மட்டும் பட்டோலை  எழுதுகின்றீர்கள். தமிழகமக்கள் குமுறுவது உங்களுக்குப்புரியவில்லையா? நீங்கள் கொடுக்காமல் டில்லியா கொடுக்கும்.

தமிழக முதல்வர் யெயலலிதா அறிவித்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஓய்வூதியம் தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு மற்றும் துணிவகைகள் கொண்ட 10 கோடியே ஆறுலட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.இந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய 25 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி உயர்த்தப்பட்டது. முகாம்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, வண்ண அடையாள அட்டைகள், இரண்டு வருடங்களக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டது என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது. 2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அகதிகள் முகாம்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகை 28 கோடி ரூபாய்தான். ஆனால் கடந்த 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. திமுக அரசு ஐந்தாவது முறையாக பதவியேற்றவுடன், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தையும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும் ஒப்பிட்டு பார்த்து இலங்கை தமிழர்களுக்கு அதிக உதவி செய்தது எந்த ஆட்சி என்பதை முடிவு செய்யலாம். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.