நீர்ப்பாசனப்பகுதி அதிபர் இலங்கை 03.1957....மங்கலம் மலரும் மாங்குளம் என்னும் இடத்திற்குத் தென்மேல் திசையில் சற்றேறக்குறையப் பத்து மைல் தூரத்தில் காடடர்ந்த இடத்தில் ஓர் சீரழிந்த குளம் உண்டு. அதன் பெயர் இப்பொழுது "வவுனிக் குளம்" என்பதாகும். இந்தக் குளம் எப்பொழுது, யாரால் கட்டப்பட்டது என்பன இன்று எவருக்கும் தெரியாத மறை பொருளாக இருக்கின்றன.