வாசித்தபின் எனக்கு புரிந்தது ....எல்லாக்கட்சிகளின் போராட்டமும் எல்லாத் தமிழர்களையும் காணாமல் போனோர் பட்டியலில் இணைப்பதாகும். இது இந்த மாதத்தின் முக்கியமானதாகும் என்பதால் குமரிநாடு. கொம் இணையத்தில் வெளியிடுகின்றேன். 200 பேரையே கூட்டிய அதிகூடிய வாக்குப்பெற்றவர்களின் வங்குரோத்து நிலை!
28.02.2022.கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மூன்று மாவட்டங்களில் மூன்று வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது, யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபகுதிக்கான மாநாடு.இரண்டாவது,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப் பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாடு. மூன்றாவது,கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதி கோரிய ஒரு கவனயீர்ப்புப் போராட்டம்.