குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

உலகிலேயே மிக உயர்ந்த விளம்பரபலகை நியூயார்க்கில் அமைக்கப்பட்டுள்ளது!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகிலேயே மிக உயர்ந்த விளம்பரபலகை அமைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளம்பர பலகை 80அடி உயரத்திலும், 330 அடி அகலத்திலும், 25ஆயிரம் சதுர அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அளவு ஒரு கால்பந்து மைதான அளவிற்கு சமமானது ஆகும். இதில் விளம்பரம் செய்ய நான்கு வார காலத்திற்கு ரூ.25 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைபை பயன்படுத்திய பயணிக்கு 1,171 டாலர் பில்

சிங்கப்பூர்: விமானத்தில் வைபை பயன்படுத்தியதற்காக பயணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 1,171 டாலர் பில்லை அனுப்பி அதிர்ச்சி அடையவைத்துள்ளது. விமானத்தை விட்டு இறங்கியதும் அவரிடம் பில்லை கொடுத்து கட்டும்படி கூறியுள்ளது. இவர் பயணத்தின்போது வைபையைப் பயன்படுத்தி சில மெயில்களை அனுப்பினார். மேலும் சில ஆவணங்களை அப்லோட் செய்துள்ளார். 30 எம்.பி வரை பயன்படுத்த 29.99 டாலர் கட்டணம் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1171 டாலர் பில் வந்துள்ளது. 1200 டாலர் அளவுக்கு மிகப் பெரிய அறிவுப்பூர்வமான ஆவணத்தை நான் அப்லோட் செய்ததால் வந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.

மேலும் வாசிக்க...
 

லண்டனை தாக்கவுள்ள காலநிலை : கடந்த 30 வருடங்களில் இப்படி ஒரு மழை பெய்யவில்லை !

அடுத்த 3 மாதங்களுக்கு பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தயாராக இருப்பது நல்லது. இப்படி ஒரு கால நிலை கடந்த 30 வருடங்களில் வந்தது இல்லை என்று காலநிலை அவதானிகள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் குறிப்பிடுவது குளிரை அல்ல. கடும் மழை மற்றும் காற்றைத்தான். இந்த வாரம் முதல் இனி 3 மாதங்களுக்கு (அதாவது பெப்ரவரி மாதம் வரை) கடும் மழையும் , புயல் காற்றும் வீசும் அபாயம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். பிரிட்டனில் உள்ள தாழ்வான இடங்களில் மழைவெள்ளம் தேங்கி நின்று, பெரும் பிரச்சனைகளை உருவாக்க உள்ளது. நீங்கள் வீதியில் உங்கள் கார்களில் செல்லும்போது, வெள்ளம் காணப்பட்டால் அதனை சாதாரணமாக எண்ணவேண்டாம். ஏன் எனில் நீங்கள் நினைப்பதை விட அது ஆளமாக இருக்கலாம்.

மேலும் வாசிக்க...
 

இறுதிச் சடங்குகள் நடைபெற்ற வேளை உயிருடன் எழுந்த பாட்டி

போலந்து நாட்டின் ஓஸ்ட்ரோ லுபெல்ஸ்கி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஜனினா கோல்கிவ்ஸ் (வயது 91). முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் இருந்த அவர் கடந்த 6-ம் திகதி உடல் அசைவற்று கிடந்தார். இதனால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர். பின்னர் ஒரு மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தனர். அப்போது ஜனினா இறந்து விட்டார் என்று கூறிய டாக்டர் அதற்கான சான்றிதழையும் வழங்கினார். இதனால், உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் அவரது உடலை, உடல் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்தனர்.

மேலும் வாசிக்க...
 

வாட்ஸ் அப்பில் பதில் அனுப்பாத மனைவியை விவாகரத்து செய்தார் கணவர்

சவுதிய அரேபியாவை சேர்ந்த 30 வயது வாலிபர் வாட்ஸ் அப்பில் பதில் மெசேஜ் அனுப்பாத தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ் அப்பில் ’சாட்டிங்’ செய்யும் தனது மனைவி தனக்கு பதில் அளிக்காத காரணத்தினால் விரக்தி அடைந்த கணவர், அவரை விவாகரத்து செய்துள்ளார். மனைவியை விவகாரத்து செய்தவர் காரணம் கூறுகையில், “எனது மனைவி மிகவும் அதிகமான நேரங்களை செல்போனிலே கழிக்கிறார். வீட்டு வேலைகள் செய்வது மற்றும் குழந்தைகளை பார்த்துக் கொள்வதை புறக்கணிக்கிறார். என்றார். ஏன் உங்களது கணவரின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்று அவரது மனைவிடம் கேட்டப்போது, அவர் பதில் அளிக்கையில், நான் மற்ற நண்பர்களுடன் பேசுவதில் மிகவும் பிசியாக இருந்தேன். என்றார்.

மேலும் வாசிக்க...
 

இத்தாலியில் வாட்ஸ் ஆப் ஆதாரத்துடன் நடைபெறும் பாதி விவாகரத்துக்கள்!

இத்தாலி: நம்பிக்கையில்லாத திருமணம் காரணமாக இத்தாலியில் விவாகரத்து வழக்குகள் நாற்பது சதவீதம் உயர்ந்துள்ளதகாக இத்தாலிய வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜியான் எட்டோரே கூறுகையில், சமூக ஊடகங்கள் மூலம் உரை நிகழ்த்தி பின்னர் பேஸ்புக் மூலம் துரோகம் செய்கின்றனர். இப்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் தங்களது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரியாமல் உரையாடுகின்றனர். இதில் புகைப்படங்கள் பரிமாற  முடியும், மூன்று அல்லது நான்கு பேரிடம் ஒரே நேரத்தில் உரை நிகழ்த்த முடியும். இது ஒரு டைனமைட் போல் உள்ளது என்று அவர் கூறினார். 2012 நடந்த பெரும்பாலான விவாகரத்துகள் பேஸ்புக் உரையாடல் உதவியுடன் நிரூபிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க...
 

மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் : யப்பானில் பயணிகளுடன் சோதனை!

டோக்கியோ: யப்பானில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயிலை  பொதுமக்களுடன் இணைந்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது. இந்த  சோதனை தங்களுக்கு பெரும் த்ரில்லை கொடுத்ததாக பயணிகள் தெரிவித்தனர். யப்பானில் 'floating maglev' என்ற புதிய ரயில் நவீன தொழில்நுட்பத்தில்  தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில்  பொதுமக்களின் உதவியோடு சோதனை ஓட்டம் செய்ய ஜப்பான் ரயில்வே துறை  முடிவு செய்தது. அதன்படி ஒருசில குறிப்பிட்ட பயணிகள் மட்டும் தேர்வு  செய்யப்பட்டு இந்த சோதனை ஓட்டத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதில் சில குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க...
 

எனக்கு தூக்கம் தூக்கமாக வருது: ரஷ்ய அதிபர் அறிவிப்பால் பரபரப்பு

பிரிஸ்பேன்:ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், முன் கூட்டியே புறப்பட்டுச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. ''எனக்கு தூக்கம், தூக்கமாக வருகிறது. அதிக தூரம் பயணம் செல்ல வேண்டியிருப்பதால், விரைவாக புறப்படுகிறேன்,'' என, அவர், இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் புடினும் பங்கேற்றார். இந்த மாநாடு துவங்குவதற்கு முன், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், ரஷ்ய அதிபர் புடினின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் வாசிக்க...
 

பெட்ரோல் விலை சரிவின் பின்னணியில் சர்வதேச அரசியல் உள்குத்து!

சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ஆகியோர் சீனாத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த Asia-Pacific Economic Cooperation (APEC) Summit plenary session கூட்டத்தில் கலந்து கொண்டு கையைக் குலுக்கிக் கொண்டனர். ஆனால், அங்கு இந்த சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் வேலைகளை திரைமறைவில் தீவிரமாக செய்து கொண்டிருந்தன.இதில் அமெரிக்காவுக்கு செளதி அரேபியா உதவி. ரஷ்யாவுக்கு சீனா உதவி.

மேலும் வாசிக்க...
 

சிறுவன் உடலில் ராணுவ வீரரின் ஆவியா? - 30 வருடங்களுக்கு முன்பிருந்தவர்களை அடையாளம் காணும் அதிசயம்

30 வருடங்களுக்கு முன்பு இருந்த ராணுவ வீரர்களின் அடையாளத்தை சரியாகக் குறிப்பிடுவதால் ராணுவ வீரரின் ஆவி சிறுவனது உடலில் புகுந்துள்ளதாக நம்பப்படுகிறது. 1983 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்த லூயிஸ் இறந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்த 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இந்நிலையில் வெர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகின்றானாம்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.