குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக செய்திகள்

கிட்லர் வரைந்த ஓவியம் ரூ.1 கோடிக்கு ஏலம்

பிராங்க்பர்ட் : யெர்மனியில், கடந்த 1914-ம் ஆண்டு அடால்ப் கிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன், தனது இளமைக் காலத்தில் பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஓவியங்களை வியன்னா ஓவிய கல்லூரியில் கிட்லர் விற்பனைக்கு கொடுத்தார். ஆனால், அவர்கள் அதை ஏற்க மறுத்தனர்.பின்னர், கிட்லரின் 11 அடி நீளம் மற்றும் 8.7 அடி அகலம் உள்ள ஓவியங்களை அவரது 2 சகோதரிகள் பொதுமக்களிடம் விற்று வந்தனர்.

மேலும் வாசிக்க...
 

மனைவியின் பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும் : சீனா ஆய்வில் தகவல்

பீஜிங் : பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துன்பத்தை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் செயற்கை முறையில் பிரசவ வேதனை ஆண்களின் அடிவயிற்றில் கட்டப்படுகிறது.

மேலும் வாசிக்க...
 

மனிதக்கழிவில் இருந்து தயாராகும் வாயுவில் இயங்கும், பயோ பேருந்து சேவை இங்கிலாந்தில் தொடக்கம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் மனிதக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் வாயு மூலம் இயங்கும் துதல் பேருந்து தனது பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பாத் என்ற நகரில் இருந்து பிரிஸ்டல் என்ற நகருக்கு சமீபத்தில் புதியதாக பயோ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஓடுவதற்கு டீசல் தேவையில்லை. மனிதக்கழிவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் biomethane வாயுவவால் பேருந்து இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் ஒரே நேரத்தில் 40 பேர் வரை பயணம் செய்ய முடியும்.

மேலும் வாசிக்க...
 

2014-ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் மங்கள்யான் விண்கலம்: டைம் பத்திரிக்கை தகவல்

நியூயார்க்: 2014-ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான் என்று டைம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டின் 25 சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பிய மங்கள்யான் விண்கலமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க...
 

இரண்டு சக்கர பேட்டரி கார் சீனாவில் அறிமுகம்!

துபாய்: உலகில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறு வெளியாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் சீனாவில் சூ லிஞ்கன் தொழிலதிபர் ஒருவர் இரண்டு சக்கர எலக்ட்ரிக் காரை கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இக்காரில் உள்ள‌ பேட்டரி மூலம் தொடர்ச்சியாக 1000 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்கள் கொண்ட கார்கள் மத்தியில் இந்த புதிய இரண்டு சக்கர கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலகிலேயே முதன் முதலாக சூரிய மின்சக்தி சாலை நெதர்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது!

ஆம்ஸ்டர்டாம்: நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வரும் உலகின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை. அதனால் மின்சாரச் சிக்கனத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர் மின்சக்தி நிலையங்கள் தவிர்த்து மின் உற்பத்தி செய்ய மாற்று ஆதாரங்களை நாடுவது குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க...
 

இங்கிலாந்தில் தினமும் 12 பேருந்துகள் ஏறி பள்ளி செல்லும் 5 வயது சிறுவன்!

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மேற்கு யோக்சயர் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் கெல்லி- டேவிட் டெய்லர் தம்பதி. இவர்களுக்கு 5 வயது மகன் இருக்கிறான். இவனை பள்ளியில் சேர்ப்பதற்காக வீட்டு பக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இடம் கிடைக்க வில்லை. வெகு தூரத்தில் உள்ள பள்ளியில் தான் இடம் கிடைத்தது. எனவே அந்த பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் வாசிக்க...
 

சுற்றுச்சூழலை பாதுகாக்க சீனாவில் 10,000 தொழிற்சாலைகள் முடல்!

பெய்யிங்: சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாக்க சீனாவில் உள்ள 10,000 தொழிற்சாலைகளை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சீனாவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், அவை வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் சீனாவில் உள்ள    10 ஆயிரம் தொழிற்சாலைகளை மூட சீனா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் வாசிக்க...
 

காதலன், கணவன் இருவரையும் கொலை செய்து புதைத்த பெண்!

ஆஸ்திரியா: ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கரன்ஸா என்ற பெண் ஐஸ்கீரிம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது கணவரரை 2008ம் ஆண்டும், காதலனை 2010ம் ஆண்டிலும் சுட்டுக் கொலை செய்து தனது ஐஸ்கிரீம் பார்லரில் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இவரது கணவர் விவாகரத்து பெற்ற பின்னும் வீட்டை விட்டு செல்ல மறுத்ததால், அவரை துப்பாகியால் சுட்டு கொன்றுள்ளதாகவும், மேலும் அவரது  காதலன் குடித்து விட்டு வருவதாகக் கூறி அவரையும் கரன்ஸா துப்பாகியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் உடல்களை தனது ஐஸ்கீரிம் பார்லரில் புதைத்துவிட்டு, மூன்றாவதாக நபர் ஒருவருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். புதைக்கப்பட்ட உடல்களை அவரது க பார்லரில் பணிபுரிபவர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் வாசிக்க...
 

இறந்த தாயின் உடலுடன் 5 ஆண்டுகளாக வாழ்ந்த மகளால் பரபரப்பு!

ப்ளூமெனு: ஜெர்மனியில் இறந்த தாயின் உடலுடன் 5 வருடங்கள் வாழ்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ம் இறந்த தாயின் உடலுடன் 55 வயது  பெண் வாழ்ந்து வதுள்ளார். இந்நிலையில் பல நாட்களாகியும் இவரது தாய் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அருகிலுள்ள வீட்டில் உள்ளவர்கள் அவரது  தாயை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்தபெண் மறுப்பு தெரிவித்ததால் வலுக்கட்டாயமாக வீட்டினுள் புகுந்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க...
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.