1. அறிமுகம்
19.04.2020 ..தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முதன்மையானவர். யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை புலோலி கிழக்கில் 1902 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஆரம்பக்கல்வியை வேலாயுதம் மகா வித்தியாலயம், ஹார்ட்லி கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பண்டிதர் பிரம்ம சிறி முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழையும், இசையையும் கற்றுக்கொண்டார்.