சுவிசு மண்டலங்களில் ஒன்றான Graubünden-ல் உள்ள வால்ஸ்(Vals) என்ற நகரத்தில் தான் இந்த கொட்டல் அமைய உள்ளது.
நியூயோர்க்கை சேர்ந்த உலக புகழ்பெற்ற கட்டிட பொறியாளரான Thom Mayne என்பவர் இந்த கட்டிடத்திற்கு வடிவம் அமைக்க உள்ளார்.
சுமார் 1250 அடிகள் உயரம் உள்ள இந்த ஹொட்டலுக்கு, வால்ஸ் நகரத்தின் பின்கோடு(Pincode) எண்ணான 7132 என்பதையே பெயராக வைக்கப்பட்டுள்ளது.
107 அறைகளை கொண்ட இந்த கொட்டலில் ஒரு இரவு தங்க சுமார் 1000 டொலர்கள் முதல் 24 ஆயிரம் டொலர்கள் வரை கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொட்டலில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு, சுற்றி உள்ள மலைகளை கண்டு ரசிப்பது போல் அமைக்கப்படும்.
தங்கும் அறைகள் மட்டுமின்றி, அனைத்து நாட்டு உணவுகளும் கிடைக்கும் நவீன கொட்டல், அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், புத்தக மையம், நீச்சல் குளங்கள், மதுபான கூடம் என சகல வசதிகளும் உள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலக கொட்டல்களுக்கு சவாலாக வரும் இந்த ஹொட்டலை கட்டி முடிக்க சுமார் 313 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து கொட்டல் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.