உலக வங்கிக்கு போட்டியாக சீனா தலைமையில் Asian Infrastructure Investment Bank (AIIB) என்ற வங்கியை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த வங்கியை உருவாக்கும் உறுப்பினர் நாடுகள் பட்டியலில் பிரான்சு(ஸ்), யேர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானிய நாடுகள் சில வாரங்களுக்கு முன் இணைந்தது.
இந்நிலையில் இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளதாக சீனாவின் நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திட்டத்தில் இணைந்துக்கொள்ள ரச்யா சனிக்கிழமையன்று(28.0315) விண்ணப்பம் செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் Igor Shuvalov தெரிவித்துள்ளார்.
புதிய ஆசிய வங்கியில் உள்ள முதலீடு மற்றும் உறுப்பினர் நாடுகள் பங்களிக்கும் தொகையை கொண்டு, ஆசிய நாடுகளுக்கு கடனுதவி அளித்து அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவதே இந்த புதிய வங்கியின் நோக்கமாகும்.
இந்த வங்கியில் ஏற்கனவே சீனா சுமார் 50 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. உறுப்பினர் நாடுகள் அளிக்கும் பங்களிப்பை சேர்த்தால் எதிர்காலத்தில் 100 பில்லியன் டொலராக வங்கியின் முதலீடு இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.