குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 10 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

செவ்வாயில் மர்மமான மூடுபனி - குழப்பத்தில் விஞ்ஞானிகள்

18.02.2015-செவ்வாய் கிரகத்தில் மர்மமான மூடுபனி நிலை அவதானிக்கப்பட்டிருப்பது வானியலாளர்களுக்கு மத்தியில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரமாண்டமான மூடுபனி நிலை 2012ஆம் ஆண்டு தன்னார்வ விண்ணியல் ஆராய்ச்சியாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் இந்த மூடுபனி நிலை இரு முறை தோன்றி மறைந்துள்ளது.

அதுகுறித்த புகைப்படங்களை ஆராய்ந்திருக்கும் விஞ்ஞானிகள் இந்த மூட்டம் சுமார் 1,000 கிலோமீற்றர் வரை தோன்றி இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இந்த மூட்டம் பாரிய மேகமாக அல்லது துருவ ஒளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விபரம் ஜெர்னல் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த இரு கோட்பாடுகளில் எது சரியாக இருந்தாலும் செவ்வாயின் மேல் வளிமண்டலம் குறித்து இதுவரை நம்பி வந்த புரிதல்கள் தவறாகிவிடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய மேல்பகுதி வளிமண்டலத்தில் இந்த மூட்டம் எவ்வாறு தோன்றியது என்பதை விஞ்ஞானிகளால் விளக்க முடியாதுள்ளது.

இதனால் பதில்களை விடவும் கேள்விகளே எழுகின்றன' என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் கிரகங்கள் தொடர்பான விஞ்ஞானியான அன்டோனியோ கிராசியா முனோஸ் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் விண்கலங்கள் மற்றும் தொலைநோக்கிகளைக் கொண்டு இந்த மர்மத்தை விடுவிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.